திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையை மாவட்ட திட்ட இயக்குனர் முருகன் என்பவர் சாப்பாட்டு பையன் ரூபாய் சீக்கியது *திருப்பத்தூர் மாவட்டம்* *மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.19,500 பறிமுதல்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (27.08.2026) மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையின் போது கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட ஊராட்சிகள் உதவி திட்ட இயக்குநர் முருகன் என்பவரின் வாகனத்தில் வைத்திருந்த உணவுப் பையில் இருந்து கணக்கில் வராத சுமார் ரூ.19,500-ஐ லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணம் ஊராட்சி செயலாளர்களால் லஞ்சமாக கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையை மாவட்ட திட்ட இயக்குனர் முருகன் என்பவர் சாப்பாட்டு பையன் ரூபாய் சீக்கியது *திருப்பத்தூர் மாவட்டம்* *மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.19,500
பறிமுதல்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (27.08.2026) மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையின் போது கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட ஊராட்சிகள் உதவி திட்ட இயக்குநர் முருகன் என்பவரின் வாகனத்தில் வைத்திருந்த
உணவுப் பையில் இருந்து கணக்கில் வராத சுமார் ரூ.19,500-ஐ லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணம் ஊராட்சி செயலாளர்களால் லஞ்சமாக கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் எச்சரிக்கை அவசியம். நேபாளத்தில் ஏற்பட்டதாக பகிரப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில், மலைப்பகுதியில் திடீரென பெருக்கெடுத்து வரும் மண் மற்றும் வெள்ளநீர், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அடித்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் நீரின் இயல்பான பாதையை ஆக்கிரமிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன. நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களில், நில அமைப்பு மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு இடைவெளி மேலும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பின் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரத்தில் அந்த ஆக்கிரமிப்புகளே மிகப்பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக மாறக்கூடும். இயற்கை தனது பாதையை மீட்டெடுக்கும் போது ஏற்படும் சேதங்களை பணத்தால் ஈடு செய்ய முடிந்தாலும், மனித உயிரிழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. எனவே, நேபாளத்தில் பகிரப்படும் இந்த பேரிடர் காட்சிகளை ஒரு எச்சரிக்கை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நீர்வழிப்பாதைகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லும் இயற்கை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும். குறிப்பாக மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். “இயற்கையின் பாதையை மறிக்காதீர்; இல்லையெனில் பேரிடர் நேரத்தில் அதன் விளைவுகளை மனிதர்களே சந்திக்க நேரிடும்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.1
- கிருஷ்ணகிரி பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அருகே பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி திருமதி குமுதா தலைமையில் நடைப்பெற்றது1
- திருவண்ணாமலை சூனியம் பருவதமலை கடலாடி என்ற ஊர் சுடிதார் பை சூனியம் மினாடி பண்டிகை சூனியத்துக்காக வந்ததா இந்த மதத்தை எவரும் நம்பாதீர்கள் திருவண்ணாமலையில் சூனியம் பருவதமலை பக்கம் கடல் அலைகின்ற ஊர் சுவிதா பாய் சூனியக்காரன் இவரால் முற்படும்பம் அளிக்கிறது குடும்பத் தலைவன் அழிகிறான் பணம் கட்டுமரட்டுகிறான் காதுக்குள்ளே வந்து பேசிகிட்டு எரிச்சல் கொடுத்துவிட்டு பணம் கேட்டு மிரட்டுறான் மதம் மாற சொல்றான் முடியல ரொம்ப முடியாம தான் வருது சீக்கிரமா உள்ள தள்ற வரைக்கும் கொடுத்துட்டே இருப்பான் வீடியோ1
- பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள் தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பேட்டி: சின்னசாமி ஊர் கவுண்டர் - ஜக்கசமுத்திரம்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக விவசாய அணி ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பில், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கண்டன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் மற்றும் பாமக தருமபுரி எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி ஆகியோர் குரல் கொடுத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாகவும், ஆனால் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் வட்டி உள்ளிட்டவற்றுடன் கடன் சுமை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தமிழக அரசு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய பாஜகவினர், தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.1
- நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி1
- காணாமல் போன மலைகள் குறித்து அமைச்சர் பேச்சு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என குறிப்பிட்டது மக்களிடையே அதிர்ச்சி காணாமல் போன மலைகள்” ,மலை வளங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சர் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கமாகப் பேசினார். அப்போது, மலைகள் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான புகைப்படங்களை சட்டசபையில் காண்பித்து, அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தது சமூக வலைத்தளங்களில் பரவியது . இதில், #திருப்பத்தூர் மாவட்டம் – #ஆம்பூர் எனக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது திருப்பத்தூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் பகுதியில் மலை வளங்கள் மற்றும் இயற்கைச் சூழல் தொடர்பாக அமைச்சர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது கவனம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் குறிப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.1