Shuru
Apke Nagar Ki App…
சேலம் வீரபாண்டி வேட்பாளரை மாற்றக்கோரி எம்பியின் இல்லம் முற்றுகை! சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில், தருண் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என திமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமாரை வீரபாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறி, அவரது ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என்று சேலம் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான சிவலிங்கத்தின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பேசிய எம்பி சிவலிங்கம், தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று தலைமைக்கு மறு பரிசீலனை அனுப்பப்படும் என தெரிவித்ததால் தொண்டர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Rajendran

More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- Post by Dharmaraj P1
- சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது... இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...1
- கிருஷ்ணகிரிநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டுபகுதியில் ரம்ஜான் மற்றும் உரூஸ் திருவிழாவினை முன்னிட்டு ஹக்கே பஞ்சத்தன் பொதுஅறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவுவழங்கும் விழா நடைபெற்றது. ஹக்கே பஞ்சத்தன்பொது அறக்கட்டளை நிறுவனர் அன்சர் தலைமையில் நடைபெற்றது.சையத் பாஷா மலையின் மேல் உள்ள தர்காவில் சிறப்பு துவா பாத்தியா நடைபெற்றது1
- திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடக் கூடிய சத்தியபாமா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைவர் விஜயும் இருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள் , அது நிறைவேறும் என பேட்டி அளித்தார்.1
- Post by K.S. PERIYASAMY1
- பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் ஆறுமுகபாண்டி என்ற ராக்கெட்ராஜா அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். உடன் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார், டாக்டர் ராமசாமி,தொழிலதிபர் பாலாஜி, வழக்கறிஞர் பூர்ணிமா ஆகியோர் உடனிருந்தனர் .1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி குணசீலா, இன்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், சேலம் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டை குமாரிடம், இன்று தனது தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் இதுவரைக்கும் அவர் கூறும் போது சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி மக்கள், தன் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்துள்ளதால், தனக்கு இத்தொகுதியில் நிச்சயம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வென்று காட்டுவேன் என நாம் தமிழர் வேட்பாளர் திருமதி குணசீலா தெரிவித்தார்.1