logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து போலீசாரை பணி செய்யவிடாமல் ரகளையில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேர் கைது திண்டுக்கல், குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த திருநங்கை காசியம்மாள் என்பவர் குஜிலியம்பாறை, நொச்சிப்பட்டியை சேர்ந்த பொன்னரசி என்பவர் மீது புகார் அளித்தார். திருநங்கை காசியம்மாள் குறித்தும், காவல் நிலையத்திற்கு வருவது குறித்தும் பொன்னரசி சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இதனால் காசியம்மாவால் ஏமாற்றப்பட்ட பலர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இது குறித்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா விசாரணை மேற்கொண்டார். அப்போது பொன்னரசி, சென்னை சேர்ந்த முருகேசன், தஞ்சாவூரை சேர்ந்த சங்கர், மணிமாறன் சேர்ந்த ஏர்வாடியை சேர்ந்த பூமிநாதன் ஆகிய 5 பேர் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

2 hrs ago
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
2 hrs ago

குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து போலீசாரை பணி செய்யவிடாமல் ரகளையில் ஈடுபட்ட பெண் உட்பட 5 பேர் கைது திண்டுக்கல், குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் உசிலம்பட்டியை சேர்ந்த திருநங்கை காசியம்மாள் என்பவர் குஜிலியம்பாறை, நொச்சிப்பட்டியை சேர்ந்த பொன்னரசி என்பவர் மீது புகார் அளித்தார். திருநங்கை காசியம்மாள் குறித்தும், காவல் நிலையத்திற்கு வருவது குறித்தும் பொன்னரசி சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இதனால் காசியம்மாவால் ஏமாற்றப்பட்ட பலர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இது குறித்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா விசாரணை மேற்கொண்டார். அப்போது பொன்னரசி, சென்னை சேர்ந்த முருகேசன், தஞ்சாவூரை சேர்ந்த சங்கர், மணிமாறன் சேர்ந்த ஏர்வாடியை சேர்ந்த பூமிநாதன் ஆகிய 5 பேர் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணியில் இருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவதாகூறபட்டிருந்ததால்குழம்பும்சூழல் இருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் திறந்தால் மது பிரியர்கள் மகிழ்ச்சி
    1
    தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவதாகூறபட்டிருந்ததால்குழம்பும்சூழல் இருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் திறந்தால் மது பிரியர்கள் மகிழ்ச்சி
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • திருப்பதி ரேணிகுண்டாவில் சாலையில் நகரின் அம்பேத்கர் சுற்றுவட்டச் சந்திப்பில் சம்பவம்… அடையாளம் தெரியாத இளைஞர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்… இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் பயமடைந்தனர்… தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
    1
    திருப்பதி ரேணிகுண்டாவில் சாலையில் நகரின் அம்பேத்கர் சுற்றுவட்டச் சந்திப்பில் சம்பவம்…
அடையாளம் தெரியாத இளைஞர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்…
இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் பயமடைந்தனர்…
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி மதுரை, பிப்.18- மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார். இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது: “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார். மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.
    2
    30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி
மதுரை, பிப்.18-
மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார்.
இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது.
அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது:
“இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார்.
மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 225 கர்ப்பிணி பெண்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. காலை 10:30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து கர்ப்பிணி பெண்கள் வரத் தொடங்கினர். இந்நிலையில் சுமார் 2 மணி நேரம் காத்திருப்பதற்குப் பின்பு 12 மணிக்கு மேல் தேனி பாராளுமன்ற தொகுதி எம் பி தங்க தமிழ்ச்செல்வன் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார் இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் எவ்வளவு நேரம் தான் மண்டபத்தில் இருப்பது என கொந்தளிப்புடன் அங்கு உள்ளவர்களிடம் ஆக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    1
    போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 225 கர்ப்பிணி பெண்கள் வரவழைக்கப்பட்டு
அவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
காலை 10:30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் காலை 10 மணியிலிருந்து கர்ப்பிணி பெண்கள் வரத் தொடங்கினர்.
இந்நிலையில் சுமார் 2 மணி நேரம் காத்திருப்பதற்குப் பின்பு 12 மணிக்கு மேல் தேனி பாராளுமன்ற தொகுதி எம் பி தங்க தமிழ்ச்செல்வன் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தார் இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் எவ்வளவு நேரம் தான் மண்டபத்தில் இருப்பது என கொந்தளிப்புடன் அங்கு உள்ளவர்களிடம் ஆக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by Saba Saba
    1
    Post by Saba Saba
    user_Saba Saba
    Saba Saba
    மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    3
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்  உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • எங்கள் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சிக்கு அலுவலகம் வரை காலில் ஒரு தட்டை தரையில் தேய்த்தபடி இளைஞர் ஒருவர் நடந்து கொண்டு செல்லும் போது வழியில் தென்படும் பெண்கள் மீது தட்டை கொண்டு தாக்க முயன்றால் இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    2
    எங்கள் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சிக்கு அலுவலகம் வரை காலில் ஒரு தட்டை தரையில் தேய்த்தபடி இளைஞர் ஒருவர் நடந்து கொண்டு செல்லும் போது வழியில் தென்படும் பெண்கள் மீது தட்டை கொண்டு தாக்க முயன்றால் இதனால் திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை, பிப்.18-  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட  சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    3
    சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை, பிப்.18- 
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 
சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர்
டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று நாம கீர்த்தனம், மதுரகீதம் பஜனை, சத்சங்கம், கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக விஷயங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.இதில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்
    1
    பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று
நாம கீர்த்தனம்,
மதுரகீதம் பஜனை, சத்சங்கம், கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக விஷயங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.இதில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.