Shuru
Apke Nagar Ki App…
वोटर लिस्ट में अपना नाम चेक करने के लिए QR code स्कैन करें। "Scan the QR code to check your name in the voter list" #SHURULOCALNEWS #SHURUAPPTEAM #MAKKITV #INDIA
MAKKI TV NEWS
वोटर लिस्ट में अपना नाम चेक करने के लिए QR code स्कैन करें। "Scan the QR code to check your name in the voter list" #SHURULOCALNEWS #SHURUAPPTEAM #MAKKITV #INDIA
More news from Thanjavur and nearby areas
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் பகுதியில் அமைந்துள்ள புனித கபிரியேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கோலப்போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று வித விதமான கோலங்கள் போட்டு அசத்தினர். ஒவ்வொரு கோலமும் சிறந்தது என கூறும் அளவிற்கு மாணவிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.. இறுதியில் நடுவர்கள் சிறந்த கோலங்களை முடிவு செய்து ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா மூன்று பரிசுகள் வீதம் தலைமை ஆசிரியை சிஸ்டர் அடைக்கலமேரி வழங்கினார்கள். மேலும் கோலப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி! புதுகை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதை சிறப்பாக செய்துள்ளது. இதை அனைவரும் ஏற்றுள்ளனர். ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும், ஜனநாயகன் திரைப்படத்தில் கோர்ட்டின் உத்தரவு படியே நடந்து கொள்ளப்படுகிறது. பாஜகவில் புதிய கூட்டணியாக தணிக்கை வாரியம் திகழ்கிறது" என்றார்.1
- கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்2
- தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் திறந்த வைத்தார். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் மூன்று இடங்களில் குமாரசாமிபேட்டை. ராஜகோபால் பகுதிகளில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் 30 லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் திறந்து வைத்தார். தர்மபுரி நகராட்சி ஆணையர் சேகர் நகரச் செயலாளர் வெங்கடேஷ் கிழக்கு நகர செயலாளர் ராஜ்குமார். வன்னியர் சங்க நகர செயலாளர் கௌரப்பன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரி மோகன் மாநில செயற்குழு உறுப்பினர் டிஜி மணி . வஜ்ரம். நிர்வாகிகள் செந்தில் வெங்கடேசன் கணேசன் ஜெகன் அருள் ராஜி ஜெய்கணேஷ் பெரியவன் சீனிவாசன் சிவகுமார். ஒப்பந்ததாரர் ராஜ்குமார். கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- நல்லம்பள்ளியில் இடைவிடாமல் பொழியும் சாரல் மழை தர்மபுரி மாவட்டம் பல்வேறு பகுதியில் கடந்த ஒரு சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது ஒரு சில இடங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நல்லம்பள்ளி லளிகம், கோவிலூர், பாலக்கோடு புலிக்கரை கடமடை என பல்வேறு பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் சாரல் மலையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது இதனால் கடும் குளிர் நிலவுகிறது1
- கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்களின் 94 வது நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன்,திமுக முன்னாள் நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான ஆர் நடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் உள்ளிட்டவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆதவன் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி நினைவேந்தல் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.2
- உதகை அருகே முதுமலை வனப்பகுதிற்குட்பட்ட வாழைத் தோட்டம் பகுதியில் சாலையின் நடுவே கம்பீரமாக நின்ற காட்டு யானை... சுமார் ஒரு மணி நேரமாக நின்றதால் போக்குவரத்து பாதிப்பு... உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி சாலையிலுள்ள வாழைத் தோட்டம் - மசினகுடி சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையின் நடுவே கம்பீரமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றது. இதனால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன். இதனால் வாழைத்தோட்டம் - மசினகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- புதுக்கோட்டையில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் சார்பில் 2026 தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை தலைமை அலுவலகத்தில் வீரமுத்தரையர் சங்கம் நிறுவன தலைவர் சி.கருப்பையா தலைமையில் இன்று உயர் மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் திருச்சி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1