*தூத்துக்குடி மாவட்டம் : 15.08.2025* *அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூபாய் 2,50,000/- பணத்தை மோசடி செய்த எதிரி கைது - சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.* *தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தெரியாத நம்பரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்ற மேற்படி இளைஞரிடம் பேசிய மர்ம நபர் தான் ஒரு அரசு வேலை வழங்கும் அதிகாரி எனவும் அதற்கு பணம் செலவாகும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி மேற்படி இளைஞர் தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டதையடுத்து மேற்படி மர்ம நபர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 2,44,800/- பணத்தை இளைஞரிடமிருந்து செல்போனில் பணம் அனுப்பும் செயலி மூலம் பெற்றுள்ளார்.* *இதனையடுத்து மேற்படி இளைஞர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதையறிந்து இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.* *மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. சகாய ஜோஸ் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பிச்சைகண்ணு (44) என்பவர் மேற்படி இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.* *இதனையடுத்து மேற்படி சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் மேற்படி எதிரி சென்னையில் இருப்பது கண்டறியப்பட்டு நேற்று (14.08.2025) சென்னை சென்று அவரை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

- தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி, உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என 50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை சமைத்து காட்சிபடுத்தினர். தொடர்ந்து ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்.. இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்.. இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.1
- NGM கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் மூலிகை தாவரங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுவது மிகவும் பயனுள்ள முயற்சி; இது கல்வியையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஒரே நேரத்தில் ஊக்குவிக்கிறது.இயற்கை விவசாயத்தின் அடிப்படை கொள்கைகள் (ரசாயனம் இன்றி மண்ணின் வளம் பேணுதல், பசுந்தழை உரம், ஜீவாமிர்தம், முதலியன). வீட்டுத் தோட்டம் / கல்லூரி வளாகத்தில் காய்கறி, கீரை, மருத்துவ மூலிகைகள் வளர்ப்பதற்கான நடைமுறை வழிமுறைகள். நீர் சேமிப்பு, மண் சரிவு கட்டுப்பாடு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நல்ல நடைமுறைகள். மூலிகை தாவரங்கள் பற்றிய முக்கிய அம்சங்கள்கல்லூரி போடனி துறைகளில் மருத்துவ மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைத்து, மாணவர்களுக்கு தாவரத்தை நேரில் கண்டு கற்பிக்கும் நடைமுறை உள்ளது. மாணவர்கள் மூலிகை மருந்துகள், மூலிகை சார்ந்த தயாரிப்புகள் (காஸ்மெடிக், பவுடர், கஷாயம் போன்றவை) தயாரிப்பதற்கான பயிற்சிகளைப் பெற முடியும். NGM கல்லூரியில் ஏற்கனவே நடைபெறும் செயல்பாடுகள்போடனி துறையில் medicinal & herbal garden, MEDIPLAP போன்ற கிளப்புகள் மூலம் மூலிகை தாவர விழிப்புணர்வு, காட்சிகள், தினமும் “ஒரு மூலிகை” பற்றிய தகவல் பகிர்வு போன்றவை நடக்கின்றன.Green Society, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவது போன்ற செயல்பாடுகளை ஏற்பாடு செய்கிறது.மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்?கல்லூரி medicinal garden மற்றும் related clubs (MEDIPLAP, Green Society) இல் இணைந்து செயல்படுதல்.தங்கள் வீட்டில் / ஹாஸ்டல் சுற்றுவட்டாரத்தில் சிறிய இயற்கை / மூலிகை தோட்டம் அமைத்து, கல்லூரி اஆசிரியர்களிடம் இருந்து விதை, தளவாட ஆலோசனைகளைப் பெறுதல். ஒரு சிறிய ஊக்கச் செய்திஇப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பிடித்து செயல்படும் மாணவர்கள், எதிர்காலத்தில் இயற்கை விவசாய yritt entrepreneur, மூலிகை தயாரிப்பு நிபுணர், சுற்றுச்சூழல் ஆலோசகர் போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.1
- சிரிக்க மற்றும் சிந்திக்க.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- (24-12-2025) புதன்கிழமை பெரியாரின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1