logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் கோட்டை மைதானத்தில் இன்று தமிழ் தேச மக்கள் இயக்கத்தின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால், கோட்டை மைதானம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

4 hrs ago
user_Rajendran
Rajendran
salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
4 hrs ago

சேலம் கோட்டை மைதானத்தில் இன்று தமிழ் தேச மக்கள் இயக்கத்தின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால், கோட்டை மைதானம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சென்னம்பட்டி, மேல்தெருவைச் சேர்ந்த பவ்யா என்பவரது வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் நான்கு அடி நீளமுள்ள ஒரு நாகப்பாம்பு திடீரென அவரது வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்தது. இதனைக் கண்ட குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். உடனடியாக பாலக்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி நான்கு அடி நீளமுள்ள அந்த நாகப்பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட அந்த நாகப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு பாம்பை உயிருடன் மீட்டதால், குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர். குடியிருப்பு வீட்டிற்குள் நாகப்பாம்பு புகுந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    1
    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சென்னம்பட்டி, மேல்தெருவைச் சேர்ந்த பவ்யா என்பவரது வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் நான்கு அடி நீளமுள்ள ஒரு நாகப்பாம்பு திடீரென அவரது வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்தது. இதனைக் கண்ட குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

உடனடியாக பாலக்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி நான்கு அடி நீளமுள்ள அந்த நாகப்பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட அந்த நாகப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு பாம்பை உயிருடன் மீட்டதால், குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர். குடியிருப்பு வீட்டிற்குள் நாகப்பாம்பு புகுந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி, அதில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
    1
    தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி, அதில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.

மத்திய அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    37 min ago
  • மத்திய அரசு, 100 நாள் வேலைத்திட்டத்தில் பெயர் மாற்றம் செய்ததுடன், பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மாற்றங்களுக்குக் கண்டனம் தெரிவித்தும், திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தக் கோரியும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசின் திட்ட மாற்றங்கள் மற்றும் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
    1
    மத்திய அரசு, 100 நாள் வேலைத்திட்டத்தில் பெயர் மாற்றம் செய்ததுடன், பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மாற்றங்களுக்குக் கண்டனம் தெரிவித்தும், திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தக் கோரியும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசின் திட்ட மாற்றங்கள் மற்றும் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த குமாரவாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று ஆணி திருமஞ்சனம் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில், தவெக மணப்பாறை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ரா. கதிரவனின் ஆணைக்கிணங்க, வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பார்த்திபன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த குமாரவாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று ஆணி திருமஞ்சனம் விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில், தவெக மணப்பாறை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ரா. கதிரவனின் ஆணைக்கிணங்க, வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பார்த்திபன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி அருகே போடுவார்பட்டியில் உள்ள திறந்தவெளி கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த 50,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து, அதை அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறது. கடந்த சம்பா பருவத்தில் திருச்சி மாவட்டத்தில் பல லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு கிடங்குகள் மற்றும் திறந்தவெளி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது போடுவார்பட்டியில் சுமார் 15,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு உள்ள நிலையில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல்லை மூடி பாதுகாக்க போதிய தார்ப்பாய்கள் இல்லை என்றும், சில இடங்களில் முறையாக மூடப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாக, வெயிலில் நெல் மூட்டைகள் கிழிந்து நெல் கருகி வீணானது. அண்மையில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான கிலோ நெல் வீணாகியுள்ளது. இதற்கு வாணிபக் கழக அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயியும், சமூக ஆர்வலருமான வெங்கடேசன் பேசுகையில், நெல் மூட்டைகள் பாதுகாப்பில் ஒவ்வொரு அரசும் அதிகாரிகளும் தவறி வருவது வேதனையானது என்றும், ஆரம்ப காலத்தில் இருந்தே தார்ப்பாய் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகள் மூடப்படாமல் விடப்பட்டு பெரும்பாலான நெல் மூட்டைகள் கருப்பாகி முளைத்துவிட்டன என்றும் கூறினார். இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விளக்கமளிக்கையில், பாதிக்கப்பட்ட மூட்டைகளை உடனடியாகப் பிரித்து சீரமைத்து வருவதாகவும், தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளதாகவும், மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தொடர் கோரிக்கையாகும்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி அருகே போடுவார்பட்டியில் உள்ள திறந்தவெளி கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த 50,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து, அதை அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறது. கடந்த சம்பா பருவத்தில் திருச்சி மாவட்டத்தில் பல லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு கிடங்குகள் மற்றும் திறந்தவெளி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

தற்போது போடுவார்பட்டியில் சுமார் 15,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு உள்ள நிலையில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல்லை மூடி பாதுகாக்க போதிய தார்ப்பாய்கள் இல்லை என்றும், சில இடங்களில் முறையாக மூடப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாக, வெயிலில் நெல் மூட்டைகள் கிழிந்து நெல் கருகி வீணானது. அண்மையில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான கிலோ நெல் வீணாகியுள்ளது. இதற்கு வாணிபக் கழக அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயியும், சமூக ஆர்வலருமான வெங்கடேசன் பேசுகையில், நெல் மூட்டைகள் பாதுகாப்பில் ஒவ்வொரு அரசும் அதிகாரிகளும் தவறி வருவது வேதனையானது என்றும், ஆரம்ப காலத்தில் இருந்தே தார்ப்பாய் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகள் மூடப்படாமல் விடப்பட்டு பெரும்பாலான நெல் மூட்டைகள் கருப்பாகி முளைத்துவிட்டன என்றும் கூறினார்.

இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விளக்கமளிக்கையில், பாதிக்கப்பட்ட மூட்டைகளை உடனடியாகப் பிரித்து சீரமைத்து வருவதாகவும், தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளதாகவும், மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தொடர் கோரிக்கையாகும்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • சேலம் அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் மனுக்களை சமர்ப்பித்தனர். ஜமாபந்தி அலுவலர் சிவராஜ் தலைமையில் ஏராளமான அரசு அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டனர்.
    1
    சேலம் அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தின் கீழ் வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் மனுக்களை சமர்ப்பித்தனர்.

ஜமாபந்தி அலுவலர் சிவராஜ் தலைமையில் ஏராளமான அரசு அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ரோஷ்ணி (18) என்ற மாணவி நேற்று முன்தினம் நீட் மறுதேர்வு பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இவரைப் போல, தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இந்த மாணவியின் மறைவு மீண்டும் நீட் தேர்வு குறித்த அச்சத்தையும், எதிர்ப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக, திமுக மாநில மாணவரணி செயலாளர் வீரமணி, ரோஷ்ணியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுக இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதாகவும், ஆனால் தொடர்ந்து 'பாசிச பாஜக மாணவர்களை பலி வாங்கி வருவதாகவும்' அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வால் ஏற்படும் தொடர் தற்கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் வீரமணி அறிவித்தார். இச்சந்திப்பின்போது தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ரோஷ்ணி (18) என்ற மாணவி நேற்று முன்தினம் நீட் மறுதேர்வு பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த இவரைப் போல, தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இந்த மாணவியின் மறைவு மீண்டும் நீட் தேர்வு குறித்த அச்சத்தையும், எதிர்ப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக, திமுக மாநில மாணவரணி செயலாளர் வீரமணி, ரோஷ்ணியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுக இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதாகவும், ஆனால் தொடர்ந்து 'பாசிச பாஜக மாணவர்களை பலி வாங்கி வருவதாகவும்' அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வால் ஏற்படும் தொடர் தற்கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் வீரமணி அறிவித்தார். இச்சந்திப்பின்போது தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Dharmapuri, Tamil Nadu•
    17 hrs ago
  • பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட மாணவரணி ரியான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், கந்திகுப்பம் பஞ்சாயத்து செயலாளர் ஜான் போஸ்கோ, ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் சந்தோஷ் குமார், பஞ்சாயத்து பொருளாளர் ஜான்பால், துணைச் செயலாளர் தாமஸ், கழக நிர்வாகிகள் கெவின், சுகேல், சுரேஷ் மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    1
    பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட மாணவரணி ரியான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், கந்திகுப்பம் பஞ்சாயத்து செயலாளர் ஜான் போஸ்கோ, ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் சந்தோஷ் குமார், பஞ்சாயத்து பொருளாளர் ஜான்பால், துணைச் செயலாளர் தாமஸ், கழக நிர்வாகிகள் கெவின், சுகேல், சுரேஷ் மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் 2500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்குச் சேலைகளும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளும் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் விநியோகிக்கப்பட்டன.
    1
    பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் 2500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்குச் சேலைகளும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளும் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் விநியோகிக்கப்பட்டன.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.