திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி தேவை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. திருவரங்குளம், வேப்பங்குடி நிம்பனேஸ்வரம், கல்லுபள்ளம், காயாம்பட்டி,மாங்கனம்பட்டி,அரசடிபட்டி, தேத்தாம்பட்டி, இம்மனாம்பட்டி, வேப் பங்குடி, பொற்பனைக்கோட்டை திருக்கட்டளை, மேட்டுப்பட்டி, தோப்புக்கொல்லை, கைக்குறிச்சி, கோவில்பட்டி, பெரியநாயகிபுரம், இடையன்வயல் மற்றும் சுற்று மக்கள் வட்டார கிரா மங்களை சேர்ந்த சிகிச்சைக்காக இந்த சுகாதார நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் அதிக அளவில் வருகின்றனர். ஆனால், இங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாத தால், அவசர தேவைக்கு வல்லத்திராக்கோட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மக்கள் நலன் கருதி ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி தேவை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. திருவரங்குளம், வேப்பங்குடி நிம்பனேஸ்வரம், கல்லுபள்ளம், காயாம்பட்டி,மாங்கனம்பட்டி,அரசடிபட்டி, தேத்தாம்பட்டி, இம்மனாம்பட்டி, வேப் பங்குடி, பொற்பனைக்கோட்டை திருக்கட்டளை, மேட்டுப்பட்டி, தோப்புக்கொல்லை, கைக்குறிச்சி, கோவில்பட்டி, பெரியநாயகிபுரம், இடையன்வயல் மற்றும் சுற்று மக்கள் வட்டார கிரா மங்களை சேர்ந்த சிகிச்சைக்காக இந்த சுகாதார நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் அதிக அளவில் வருகின்றனர். ஆனால், இங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாத தால், அவசர தேவைக்கு வல்லத்திராக்கோட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மக்கள் நலன் கருதி ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்! மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள பூதமங்கலத்தில், அருள்மிகு ஸ்ரீ சிட்டிசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 :00 மணி முதல் 10 :00 மணிக்குள் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். காலை 11:00 மணியளவில் அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்னதானம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று இரவு 10 :00 மணியளவில் கோவில் முன்பாக உள்ள கலையரங்கில் ஸ்ரீ வள்ளி திருமண நாடகம் நடைபெற உள்ளது.1
- திருவாடானையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது மக்கள் மகிழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாங்க முடியாத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். வெளியில் செல்ல முடியாமல், அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மேலும் இரவு நேரங்களில் வெட்கை அதிக அளவில் இருந்தது இந்த நிலையில், தற்போது அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கமும் குறைந்தது இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- கொல்லங்குடியில் கோவில் திருவிழா முன்னிட்டு களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொல்லங்குடியில் இருந்து முதல் வலையம்பட்டி வரை நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 7 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், 5 கிலோமீட்டர் பந்தய எல்லையாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 27 ஜோடிகளும் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. பந்தயத்தில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அழகாபுரி, மேப்பல், நரிக்கோட்டை, காளையார்கோவில், விட்டனேரி, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, ஆர்வத்துடன் மாட்டு வண்டி பந்தயத்தை கண்டுகளித்தனர்.1
- கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.1
- फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी2