logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விருதுநகரில்‌ தென் மண்டல இளைஞரணி மாநாடு.... ஆண்டிபட்டியில் திமுகவினர் தீவிர ஆலோசனைக் கூட்டம்.... எம்எல்ஏ மகாராஜன் தலைமையில் நடந்தது..‌‌.. ஆண்டிபட்டி, விருதுநகரில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி தென் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, ஆண்டிபட்டியில் பல்வேறு இடங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தென் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆண்டிபட்டி திமுக சார்பில் மூன்று இடங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.‌ ஆண்டிபட்டி பேரூர் இளைஞர் அணி சார்பில் நகரில் உள்ள திமுக கட்சி அலுவலகம், கிழக்கு ஒன்றியம் இளைஞர் அணி சார்பில்‌ கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம், மேற்கு ஒன்றியம் இளைஞர் அணி சார்பில் க.விலக்கு பகுதியில் உள்ள தனியார் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.‌ ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டங்களில், முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.‌ மாநாட்டிற்கு வரும் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் கட்டாயம் சீருடை அணிந்து வர வேண்டும். அனைவரிடமும் அடையாள அட்டை இருத்தல் அவசியம். புதிதாக நியமிக்கப்பட்ட கிளைக் கழக இளைஞரணி நிர்வாகிகளுக்கு அந்தந்த பகுதிகளில் சிறப்புப் பணிகள் ஒதுக்கப்பட்டன. இந்த கூட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வருகை தந்திருந்த இளைஞரணி நிர்வாகிகள் முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், தேனி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செஞ்சூரி செல்வம், திருவண்ணாமலை மாவட்ட துணை மேயர் ராஜாங்கம், மாவட்ட துணை அமைப்பாளர் கண்ணதாசன், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா, கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அர்ச்சுனன், திருவண்ணாமலை‌ மாவட்ட இளைஞரணியை சேர்ந்த ராஜசேகர், சதீஷ்குமார், திலீப் குமார், ராஜேந்திரன், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

1 day ago
user_Shakthi
Shakthi
Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
1 day ago
828eaead-4e54-41c3-b868-8c4070bea426

விருதுநகரில்‌ தென் மண்டல இளைஞரணி மாநாடு.... ஆண்டிபட்டியில் திமுகவினர் தீவிர ஆலோசனைக் கூட்டம்.... எம்எல்ஏ மகாராஜன் தலைமையில் நடந்தது..‌‌.. ஆண்டிபட்டி, விருதுநகரில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி தென் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, ஆண்டிபட்டியில் பல்வேறு இடங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தென் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆண்டிபட்டி திமுக சார்பில் மூன்று இடங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.‌ ஆண்டிபட்டி பேரூர் இளைஞர் அணி சார்பில் நகரில் உள்ள திமுக கட்சி அலுவலகம், கிழக்கு ஒன்றியம் இளைஞர் அணி சார்பில்‌ கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம், மேற்கு ஒன்றியம் இளைஞர் அணி சார்பில் க.விலக்கு பகுதியில் உள்ள தனியார் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.‌ ஆண்டிபட்டி

5de1f8af-7dd0-4f42-989d-c2e8e3e66500

சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டங்களில், முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.‌ மாநாட்டிற்கு வரும் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் கட்டாயம் சீருடை அணிந்து வர வேண்டும். அனைவரிடமும் அடையாள அட்டை இருத்தல் அவசியம். புதிதாக நியமிக்கப்பட்ட கிளைக் கழக இளைஞரணி நிர்வாகிகளுக்கு அந்தந்த பகுதிகளில் சிறப்புப் பணிகள் ஒதுக்கப்பட்டன. இந்த கூட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வருகை தந்திருந்த இளைஞரணி நிர்வாகிகள் முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், தேனி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செஞ்சூரி செல்வம், திருவண்ணாமலை மாவட்ட துணை மேயர் ராஜாங்கம், மாவட்ட துணை அமைப்பாளர் கண்ணதாசன், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா, கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அர்ச்சுனன், திருவண்ணாமலை‌ மாவட்ட இளைஞரணியை சேர்ந்த ராஜசேகர், சதீஷ்குமார், திலீப் குமார், ராஜேந்திரன், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
    1
    11.01.2026_ADP_ MARATHAN SPORTS.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார்
பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த
தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    42 min ago
  • கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.
    1
    கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார்  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.
    user_Theni
    Theni
    Local News Reporter Periyakulam, Theni•
    6 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    1
    திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    40 min ago
  • தாடிக்கொம்புவில் காணக்கிடைக்காத கண்கொள்ளா காணொளி காட்சி திண்டுக்கல் மாவட்டம்& வட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக அலங்காரம் பூஜைகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
    2
    தாடிக்கொம்புவில் காணக்கிடைக்காத கண்கொள்ளா காணொளி காட்சி
திண்டுக்கல் மாவட்டம்& வட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக அலங்காரம் பூஜைகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    3
    திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது
திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 
வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 day ago
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
    1
    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
    user_Sai Kirubakaran
    Sai Kirubakaran
    தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது
    1
    தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • *திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த சிவ சக்தி விநாயகர் திருக்கோயிலில் ஆண்டாள் நகர்வள புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலமாக சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று ஆண்டாளுக்கு நான்காம் ஆண்டு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்திருந்த ஆண்டாளுக்கு ஆபரணங்கள் அணிவித்து கிரீடம் வைத்து வண்ணமலர் மாலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆண்டாளுக்கு தீபம் காட்டப்பட்டு கற்பூரம் சுற்றி புறப்பாடு தொடங்கியது பக்தர்கள் சப்பரத்தை இழுத்துச் செல்ல பெண்கள் சீர் வரிசைகளுடன் திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலம் சென்றனர் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆண்டாளை வழிநடக பக்தர்கள் தரிசனம் செய்தனர் பின்னர் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று புறப்பாடு நிறைவு பெற்றது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்து சென்றனர்
    1
    *திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த சிவ சக்தி விநாயகர் திருக்கோயிலில் ஆண்டாள் நகர்வள புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது*
*ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலமாக சென்றனர்*
தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று ஆண்டாளுக்கு நான்காம் ஆண்டு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது 
முன்னதாக கோயில் வளாகத்தில் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்திருந்த ஆண்டாளுக்கு ஆபரணங்கள் அணிவித்து கிரீடம் வைத்து வண்ணமலர் மாலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார்
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆண்டாளுக்கு தீபம் காட்டப்பட்டு கற்பூரம் சுற்றி புறப்பாடு தொடங்கியது 
பக்தர்கள் சப்பரத்தை இழுத்துச் செல்ல பெண்கள் சீர் வரிசைகளுடன் திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலம் சென்றனர் 
தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆண்டாளை வழிநடக பக்தர்கள் தரிசனம் செய்தனர் பின்னர் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று புறப்பாடு நிறைவு பெற்றது 
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்து சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    46 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.