Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் இணைந்து நடத்திய தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி 2026 னை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் இணைந்து நடத்திய தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி(2026) யினை 27-8-2026 வியாழக்கிழமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் ராஜபாண்டி மற்றும் சென்னை சில்க்ஸ் மேலாளர்கள் பாண்டி மற்றும் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மா.சுடலைமணி
தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் இணைந்து நடத்திய தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி 2026 னை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் இணைந்து நடத்திய தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி(2026) யினை 27-8-2026 வியாழக்கிழமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் ராஜபாண்டி மற்றும் சென்னை சில்க்ஸ் மேலாளர்கள் பாண்டி மற்றும் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஆலோசனை கூட்டம் கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து இன்று வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரிடர் மீட்பு பணிகள் சம்பந்தமாக எடுக்கப்பட்டு வரும் திட்டப் பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.1
- குற்றால அருவிகளில் விடுமுறை தினத்தை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக ஆர்ப்பரித்த வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்போது சீசன் களை கட்டி வரும் நிலையில் இங்குள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி புலியருவி சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக பல பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர்.3
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK1
- *தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி கோலாண்டனூர் 7,வது வார்டு ஊராட்சி அலுவலகத்திற்கு கீழ்புரம் ஒரு வருடத்திற்கு முன் போடப்பட்ட புதிய சிமிண்ட் சாலையில் வாறுகாலில் அமைக்காததால் வீடுகளில் உபயோகப்படுத்தும் கழிவுநீரை பைப்பு மூலம் பொது தெரிவில் விடுவதனால் சாலை பழுதாகுவதோடு சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள், மற்றும் புளுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற விசக்காய்சல் பரவி வருவதாகவும் மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்க்கு விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- அணுக்கனிம சுரங்க அனுமதி நீட்டிப்பு ரத்து செய்யப்படுமா ?ஆஸ்டின் எம்எல்ஏ கேள்வி தமிழக சட்டமன்றத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பான அனுமதியை திமுக அரசு நிறுத்தி வைத்திருந்தது ஆனால் தற்போது புதிதாக பதவி ஏற்று உள்ள அரசு ஓர் ஆண்டு காலத்திற்கு அந்த அனுமதியை நீட்டித்து வழங்கி உள்ளது.இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த அனுமதி ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தாது என்று கூறினார்.1
- தூத்துக்குடி வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க புத்தகக் கண்காட்சி தூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. 25 அரங்குலுடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தக கண்காட்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் தொடங்கி வைத்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அரசியல் இலக்கியம் கதைகள் கவிதைகள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன இந்த புத்தக கண்காட்சியின் போது பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.1
- குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.1
- திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் முன் விரோதம் வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு பொதுமக்கள் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசபாண்டி(49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). இவர்களது மகன் கவுதம்(21). கணேசபாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதன்கிழமை காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் மீது கல் வீச்சில் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காயமடைந்த இளைஞர் துணை ராணுவ படைக்கு தேர்வாகி உள்ளதால், காயம் காரணமாக வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்: கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடியபடி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறிதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு ராகேஷ் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம், என்றனர்.1