அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கை பற்றாக்குறை பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவர்கள், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தவில்லை எடப்பாடியார் மருத்துவத் துறையில் எப்படி சாதித்து காட்டினார் என்ற வரலாற்றை அமைச்சர் மா.சு.படிக்க வேண்டும் கழக மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன் கடும் எச்சரிக்கை மருத்துவத்துறையில் எடப்பாடியார் ஒரு சகாப்தம் படைத்தார் என்ற வரலாற்றை அமைச்சர் மா.சு படித்து அறிந்து கொள்ள வேண்டும் . குறிப்பாக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 1,650 மருத்துவ இடங்களை உருவாக்கினார், மதுரை ,தஞ்சை போன்ற மூன்று இடங்களில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்கினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கினார். மருத்துவ இடங்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு மூலம் இதுவரை 3,456 அரசு மாணவர்கள் பயன் பெற்றுள்ளார்கள். குறிப்பாக 2019 ஆண்டில் இந்தியா முழுவதும் ஒரு சர்வே எடுக்கப்பட்டது அதில் தமிழகத்தில் 253 மக்களுக்கு ஒரு மருத்துவர், டில்லியில் 334 மக்களுக்கு ஒரு மருத்துவர், கர்நாடகாவில் 507 மக்களுக்கு ஒரு மருத்துவர் ,கேரளாவில் 535 மக்களுக்கு ஒரு மருத்துவர், கோவாவில் 713 மக்களுக்கு ஒரு மருத்துவர் ,உத்திரபிரதேசத்தில் 767 மக்களுக்கு ஒரு மருத்துவர், சதீஸ்கரில் 338 மக்களுக்கு ஒரு மருத்துவர் ஆக தமிழகத்தில் தான் அதிக அளவில் மருத்துவர்கள் உள்ள மாநிலமாக இருந்தது. இந்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியை கூட ஸ்டாலின் அரசு உருவாக்கவில்லை.தற்போது நோயாளிக்கு ஏற்றவாறு மருத்துவ பணியாளர்கள் இல்லை குறிப்பாக தற்போது 1.50 லட்சம் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளார்கள் ஆனால் தற்பொழுது தமிழகத்தில் 19,000 அரசு மருத்துவர்கள் தான் உள்ளார்கள். இதில் மருத்துவ எண்ணிக்கையை இரண்டு மடங்கு அதிகரித்தால்தான் சரி செய்ய முடியும் 38 மேற்பட்ட அரசு மருத்துவமனை கல்லூரிகள், 372 தாலுகா மருத்துவமனைகள், 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 சுகாதார மையங்கள் என 11,000 மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் 35,000 மேற்பட்ட அரசு மருத்துவமனை காலி பணியிடங்கள் அம்மாவின் ஆட்சி காலத்தில் நிரப்பப்பட்டது. ஆனால் இன்றைய நிலை என்ன? அமைச்சர் மா.சு. எதற்கெடுத்தாலும் அறிக்கை விடுகிறார் ஆனால் செயல்பாட்டில் ஒன்றும் இல்லை குறிப்பாக தமிழகத்தில் புறநோயாளிகள் 56 சதவீதம்,உள் நோயாளிகள் 43 சதவீதம்,அறுவை சிகிச்சைகள் 60 சதவீதம் அதிகரிப்பதாக கூறுகிறார். தற்போது ஆண்டுக்கு, ஆண்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஓய்வுபெற்று வருகிறார்கள் அந்தப் பணியிடங்களுக்கு இன்னமும் நிரப்பப்படவில்லை . குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பத்தாயிரம் பேர் உள்ளனர் ஆனால் அரசு மருத்துவமனையில் 1100 பேர் தான் உள்ளார்கள் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகிறது இதில் 55 சதவீதம் அரசு மருத்துவமனையிலும், 45 சதவீதம் தனியார் மருத்துவமனையில் நடைபெறுகிறது. குறிப்பாக பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்கள் சென்றால் அங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லை என்று மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி விடுகிறார்கள். மருத்துவத்துறையில் MBBS மருத்துவர்கள், MD/MS (PG) சிறப்பு மருத்துவர்கள், DM/MCh உயர் சிறப்பு மருத்துவர்கள் ( super speciality ) என்று உள்ளனர் இதில் உயர் சிறப்பு மருத்துவர்கள் இல்லாத இடத்திற்கு, சிறப்பு மருத்துவர்களை நியமிக்கிறார்கள் சில இடங்களில் உயர் சிறப்பு மருத்துவர்களை நியமித்தால் ஏற்கனவே நியமனம் செய்தவர்களை ரத்து செய்து அனுப்பி விடுகிறார்கள். தற்பொழுது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது சிறப்பு மருத்துவரை மாற்றம் செய்யாமல் இருந்தால் தான் சமாளிக்க முடியும் இதையெல்லாம் அரசு செய்ய தவறிவிட்டது. பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவர்கள்,மகப்பேறு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு செய்யாமல் அதில் ஊழல் நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் குற்றம் சாட்சி வருகிறார்கள் தற்பொழுது மருத்துவதுறை நேர்மை துறையாக இல்லாமல் ஊழல் துறையாக மாறிவிட்டது என கூறினார்.

- தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவதாகூறபட்டிருந்ததால்குழம்பும்சூழல் இருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் திறந்தால் மது பிரியர்கள் மகிழ்ச்சி1
- திருப்பதி ரேணிகுண்டாவில் சாலையில் நகரின் அம்பேத்கர் சுற்றுவட்டச் சந்திப்பில் சம்பவம்… அடையாளம் தெரியாத இளைஞர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்… இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் பயமடைந்தனர்… தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…1
- 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி மதுரை, பிப்.18- மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார். இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது: “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார். மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.2
- Post by Saba Saba1
- திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்3
- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட திமுகவின் பாடல் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட காணொலி...1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1