logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கணிதத்தை மனப்பாடமாக அல்லாமல், உடல் அசைவுகள் மற்றும் பரதநாட்டியத்தின் மூலம் அனுபவப்பூர்வமாக கற்றுக்கொடுக்கும் புதிய கல்வி அணுகுமுறையை அறிமுகப்படுத்தும் 'Move Through Math' என்ற நூல் கோவையில் வெளியிடப்பட்டது. கோவை பந்தய சாலையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடைபெற்ற விழாவில், ஜெர்மனியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளரும், பரதநாட்டியக் கலைஞரும், கல்வி ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஜனனி சுரேஷ் ராம் எழுதிய இந்த நூல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் ஜெர்மனியில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள், பயிலரங்குகள் மற்றும் கள அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ராதே ஜக்கி மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்விக் குழுமங்களின் நிறுவனரும் கல்வியாளருமான டாக்டர் மணிமேகலை மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த நூலை வெளியிட்டனர். அனாதி ஃபவுண்டேஷன் இணை நிறுவனர் மற்றும் ஆய்வாளரான ஸ்மிரிதி ரேகா ஆதிநாராயணன் நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய நூலாசிரியர் டாக்டர் ஜனனி சுரேஷ் ராம், குழந்தைகள் கணிதத்தை எண்கள், சூத்திரங்கள் மற்றும் குறியீடுகள் வழியாக மட்டுமல்லாமல், அசைவுகள், தாளம், சைகைகள் மற்றும் விளையாட்டின் மூலம் அனுபவித்து கற்றுக்கொள்ளும் போது அவர்களின் புரிதல் ஆழமாகவும் நீடித்ததாகவும் அமையும் என்று குறிப்பிட்டார். 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை மையமாகக் கொண்டு ஒன்பது அத்தியாயங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலில் வடிவங்கள், எண் அறிவு, கணிதச் செயல்பாடுகள், அளவீடு, தரவு பகுப்பாய்வு, இட–கால விழிப்புணர்வு உள்ளிட்ட 46 அடிப்படை கணிதக் கருத்துகள் செயல்பாடுகள் மற்றும் அசைவுகளின் வழியாக விளக்கப்பட்டுள்ளன. இது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

6 hrs ago
user_Political Pulse
Political Pulse
Reporter கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
6 hrs ago
0faa0e23-1c82-43e3-815f-4c062fa75445

கணிதத்தை மனப்பாடமாக அல்லாமல், உடல் அசைவுகள் மற்றும் பரதநாட்டியத்தின் மூலம் அனுபவப்பூர்வமாக கற்றுக்கொடுக்கும் புதிய கல்வி அணுகுமுறையை அறிமுகப்படுத்தும் 'Move Through Math' என்ற நூல் கோவையில் வெளியிடப்பட்டது. கோவை பந்தய சாலையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடைபெற்ற விழாவில், ஜெர்மனியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளரும், பரதநாட்டியக் கலைஞரும், கல்வி ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஜனனி சுரேஷ் ராம் எழுதிய இந்த நூல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் ஜெர்மனியில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள், பயிலரங்குகள் மற்றும்

c6308331-31ec-4014-b2ab-ae612726b634

கள அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ராதே ஜக்கி மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்விக் குழுமங்களின் நிறுவனரும் கல்வியாளருமான டாக்டர் மணிமேகலை மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த நூலை வெளியிட்டனர். அனாதி ஃபவுண்டேஷன் இணை நிறுவனர் மற்றும் ஆய்வாளரான ஸ்மிரிதி ரேகா ஆதிநாராயணன் நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய நூலாசிரியர் டாக்டர் ஜனனி சுரேஷ் ராம், குழந்தைகள் கணிதத்தை எண்கள், சூத்திரங்கள் மற்றும் குறியீடுகள் வழியாக மட்டுமல்லாமல், அசைவுகள், தாளம், சைகைகள்

50f32d26-996a-43fa-99c8-79b58ea95bdc

மற்றும் விளையாட்டின் மூலம் அனுபவித்து கற்றுக்கொள்ளும் போது அவர்களின் புரிதல் ஆழமாகவும் நீடித்ததாகவும் அமையும் என்று குறிப்பிட்டார். 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை மையமாகக் கொண்டு ஒன்பது அத்தியாயங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலில் வடிவங்கள், எண் அறிவு, கணிதச் செயல்பாடுகள், அளவீடு, தரவு பகுப்பாய்வு, இட–கால விழிப்புணர்வு உள்ளிட்ட 46 அடிப்படை கணிதக் கருத்துகள் செயல்பாடுகள் மற்றும் அசைவுகளின் வழியாக விளக்கப்பட்டுள்ளன. இது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

More news from Tamil Nadu and nearby areas
  • கோயம்புத்தூர் பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், தனது தாயுடன் இருந்த குட்டி அதன் பாதுகாவலருடன் விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது.
    1
    கோயம்புத்தூர் பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், தனது தாயுடன் இருந்த குட்டி அதன் பாதுகாவலருடன் விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    9 hrs ago
  • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் வடக்குப்பேட்டை பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். புலிகள் காப்பக வனப்பகுதி சத்தியமங்கலத்திற்கு அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலையில், அங்கிருந்து உணவு தேடி வரும் குரங்குகள் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக மரத்தில் முகாமிட்டுள்ளன. இந்தக் குரங்குகள் காலை வேளைகளில் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களுக்குள் புகுந்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன. குறிப்பாக, கடைகளில் இருக்கும் பொருட்களைத் தூக்கிச் செல்லும் குரங்குகள், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்படுகின்றன. மாலை நேரங்களில் மீண்டும் அந்த மரத்திற்கே திரும்பிச் சென்று தங்கும் இந்த குரங்குகளின் அட்டகாசத்தால், மக்கள் வீட்டின் கதவுகளைத் திறக்கவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குரங்குகளின் இந்தத் தொல்லையிலிருந்து விடுபட, வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்து அவற்றைப் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் வடக்குப்பேட்டை பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். புலிகள் காப்பக வனப்பகுதி சத்தியமங்கலத்திற்கு அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலையில், அங்கிருந்து உணவு தேடி வரும் குரங்குகள் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக மரத்தில் முகாமிட்டுள்ளன.

இந்தக் குரங்குகள் காலை வேளைகளில் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களுக்குள் புகுந்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன. குறிப்பாக, கடைகளில் இருக்கும் பொருட்களைத் தூக்கிச் செல்லும் குரங்குகள், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்படுகின்றன. மாலை நேரங்களில் மீண்டும் அந்த மரத்திற்கே திரும்பிச் சென்று தங்கும் இந்த குரங்குகளின் அட்டகாசத்தால், மக்கள் வீட்டின் கதவுகளைத் திறக்கவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குரங்குகளின் இந்தத் தொல்லையிலிருந்து விடுபட, வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்து அவற்றைப் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Sathees kumar
    Sathees kumar
    Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அ. கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா தேவி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக களமிறங்கி குழாயைச் சீரமைக்க உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அ. கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா தேவி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக களமிறங்கி குழாயைச் சீரமைக்க உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
    user_Sudharsan
    Sudharsan
    Palani, Dindigul•
    21 hrs ago
  • ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் பவானி நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை பவானி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி கஸ்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரியில் பயிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு போதைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணியானது, பவானி நகரின் பிரதான சாலைகள் வழியாக பவானி பழைய பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
    1
    ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் பவானி நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை பவானி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி கஸ்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் கல்லூரியில் பயிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு போதைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணியானது, பவானி நகரின் பிரதான சாலைகள் வழியாக பவானி பழைய பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
    user_Reporter Meganathan
    Reporter Meganathan
    Local News Reporter பவானி, ஈரோடு, தமிழ்நாடு•
    13 hrs ago
  • கோவை மாவட்டம் எட்டிமடை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அந்த வனப்பகுதியில் உள்ள மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.
    1
    கோவை மாவட்டம் எட்டிமடை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அந்த வனப்பகுதியில் உள்ள மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    11 hrs ago
  • கோயம்புத்தூர் தடாகம் சாலையில் ஓரமாக பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் பைக் மீது அரசு பேருந்து மோதிய போதிலும், பைக்கில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    1
    கோயம்புத்தூர் தடாகம் சாலையில் ஓரமாக பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் பைக் மீது அரசு பேருந்து மோதிய போதிலும், பைக்கில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    user_கோவை மக்கள் செய்தி
    கோவை மக்கள் செய்தி
    Security Guard சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.