157-வது காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேர்மையை கடைபிடிக்கும் வகையில், பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் 26-ஆம் ஆண்டாக ஆளில்லாத கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்து கொண்டு ஆள் இல்லாத கடையை திறந்து வைத்தார். பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேலு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தியின் நேர்மையைப் போற்றும் வகையில் உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த சுதந்திர இந்தியாவை உருவாக்க காந்தி கண்ட கனவை நினைவாக்கும் விதமாக அவர் பிறந்தநாளை நேர்மை விழிப்புணர்வு நாளாக உருவாக்கி விற்பனையாளர்கள் இல்லாத (ஆளில்லாத) கடையை வருடம் ஒருமுறை என, தொடர்ந்து 26-ஆண்டுகளாக பாபநாசம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆள் இல்லாத கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தேவையான பொருட்களை பொதுமக்கள் தாங்களாக எடுத்துக் கொண்டு பொருள்களுக்கு உண்டான பணத்தை கடையில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் போட்டு சென்றனர். இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் பலரும் அதற்குரிய பணத்தை செலுத்தி எடுத்து சென்றனர்.