Shuru
Apke Nagar Ki App…
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை நூலகத்தில் போட்டி தேர்வு பகுதியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.500/ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் டிசம்பர் 25 மாதம் நூலகத்தினை அதிகம் பயன் படுத்திய மாணவர். பத்மநாபன் அவர்களுக்கு தெய்வத் திருவாளர்கள்சௌந்தரபாண்டியன் - பத்மாவதி அவர்களின் நினைவாக இன்சூரன்ஸ் S.பால்ராஜ் ஐயா அவர்கள் ரூ.500/- இன்று 12.01.26 வழங்கி வாழ்த்தினார்கள்.இந்நிகழ்வில் வழக்கறிஞர் திரு.G.K. மணிகார்திக் வடகரை வாசகர் வட்ட தலைவர் மற்றும் நூலக ஆர்வலர் திரு.மு. அன்புக்காரன் தென்கரை வாசகர் வட்ட தலைவர் மற்றும் நூலகர்கள் பா. காளீஸ்வரி , சி.குமரன் மற்றும் போட்டி தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Shakthi
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை நூலகத்தில் போட்டி தேர்வு பகுதியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.500/ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் டிசம்பர் 25 மாதம் நூலகத்தினை அதிகம் பயன் படுத்திய மாணவர். பத்மநாபன் அவர்களுக்கு தெய்வத் திருவாளர்கள்சௌந்தரபாண்டியன் - பத்மாவதி அவர்களின் நினைவாக இன்சூரன்ஸ் S.பால்ராஜ் ஐயா அவர்கள் ரூ.500/- இன்று 12.01.26 வழங்கி வாழ்த்தினார்கள்.இந்நிகழ்வில் வழக்கறிஞர் திரு.G.K. மணிகார்திக் வடகரை வாசகர் வட்ட தலைவர் மற்றும் நூலக ஆர்வலர் திரு.மு. அன்புக்காரன் தென்கரை வாசகர் வட்ட தலைவர் மற்றும் நூலகர்கள் பா. காளீஸ்வரி , சி.குமரன் மற்றும் போட்டி தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டி நிறைந்து வழிந்து ஓடும் சோத்துப்பாறை அணை. அணை நிறைந்து மீண்டும் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 20 நாட்களாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 125 அடியாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 123 அடியிலிருந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வழிந்து ஓடுகிறது. தற்பொழுது அணையின் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ள நிலையில் அனைத்து நீர் வரத்து 25 கனஅடியாகவும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 25 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடி உள்ளது. மீண்டும் அணைக்கு நீர் வரத்து தொடங்கி சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணையிலிருந்து நீர் வழிந்தோடி கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- ஆத்தூர்: அய்யம்பாளையத்தல் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகள் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது, இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன பரிசுகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் வழங்கினார்1
- திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது1
- வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது1
- மணப்பாறை வழியாக அடாத மழையிலும் விடாமல் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தை மாதம் தொடங்கும் முன்னர் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பழனி முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து பின்னர் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதே போல் இன்னும் சில தினங்களில் தை மாதம் தொடங்க உள்ள நிலையில் பலரும் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை வழியாக திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், மாற்றுத் திறனாளிகளும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்களின் பாதயாத்திரையில் கவனம் செலுத்தி முருகனை காண பக்தி பரவசத்துடன் மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர். அதிக அளவிலானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- அசாத்திய திறமையை பாருங்கள்.1
- தேனி அருகே பிறந்த பச்சிளம் குழந்தையை தொப்புள் கொடியோடு சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள். தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டிகௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது தேனி புறவழி சாலையில் இருந்து வீரபாண்டி கோவிலுக்கு செல்லும் சாலையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியோடு கிடப்பதை அவ்வழியாக சாலையில் சென்ற நபர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்றவர்கள் யார் என்ற விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1