logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ஜாதி வாரி கணக்கு எடுப்பு நடத்தப்பட வேண்டும் - ஓ பி சி உரிமைகள் கட்சி சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 4வது அணியாக போட்டியிடுவோம் இரத்தினசபாபதி தலைவர் OBC உரிமைகள்கள் கட்சி* மதுரை வில்லாபுரம் தனியார் மண்டபத்தில் ஓபிசி மக்கள் உரிமைக் கட்சி அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஓபிசி ரைட்ஸ் மாநில துணைத்தலைவர் நாகரத்தினம் தலைமை வகித்தார் ஒபிசி மாநிலத் துணைச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார் நாயுடு சங்க பேரவை செல்ல பாண்டியன் வரவேற்புரை கூறினார் கூட்டத்திற்கு ஓபிசி உரிமைகள் கட்சி தலைவர் ரத்தின சபாபதி (Rtd SP) முன்னாள் காவல் கண்காணிப்பாளர் குமரவேலு தமிழ்நாடு வீர சைவ பேரவை மாநில பொதுச் செயலாளர் பாலாஜி லோகநாதன் மாநில இளைஞர் அணி செயலாளர் புல்லட் பிரபு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓபிசிஉரிமைகள் கள் கட்சி சார்பில் தமிழக அரசு ஓபிசி அனைத்து பிரிவினருக்குமான ஜாதிபாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,சமுதாயத்தில் மிகவும் பின்தங்கி உள்ள ஓபிசி அணியின் குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது அனைத்து பிரிவுகளுக்கும் பொதுவான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட வேண்டும்,மத்திய மாநில அரசுகளில் ஓ பி சி அணியினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, தொடர்ந்து OBC உரிமை கட்சி தலைவர் அளித்த இரத்தினசபாபதி பேட்டியில் இது ஓபிசி மக்கள் உரிமை கட்சி ஊடகவியலாளர் சந்திப்பு. தற்போது இங்கே ஓபிசி மக்கள் உரிமை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் இங்கே குழுமி இருக்கிறோம். இது 'சொசைட்டி ஃபார் தி ரைட்ஸ் ஆஃப் பேக்வேர்ட் கம்யூனிட்டீஸ்' (Society for the Rights of Backward Communities) என்ற அமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக மத்திய, மாநில அரசுகளை ஓபிசி மக்களின் பல்வேறு தீராத வேதனைகளை அவர்களிடம் எடுத்துச் சென்று நாங்கள் கொடுத்த மனுக்கள் மீதும், எம்எல்ஏ, எம்பி ஆகியோரை சந்தித்து நாங்கள் நேரில் விளக்கியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக, மனுக்களை தூக்கிக்கொண்டு செல்வது, அதை உதாசீனப்படுத்துவது என்பதையே அனைத்து அரசியல் கட்சிகளும் வழக்கமாக வைத்துக் கொண்டிருந்ததன் காரணமாக, எந்த ஒரு காரணி அல்லது ஃபேக்டர் (factor) அரசியல் கட்சிகளை சற்றே விழித்தெழச் செய்யும் என்பதை ஆராய்ந்து, இதை ஒரு அரசியல் அமைப்பாக அதே பெயரில், 'ஓபிசி மக்களது உரிமை கட்சி' எனத் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் 76 சதவீதமும், அகில இந்தியாவில் 54 சதவீதமும் உள்ள ஓபிசி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை பொது அரங்கிலும், வரப்போகும் தேர்தலிலும் எதிரொலிக்கச் செய்யும் விதமாக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த அமைப்பின் சார்பாக எங்களது இயக்கத்தின் கொள்கைகளை, எங்களது மக்களின் வேதனைகளை பொதுவெளியில் பிரச்சாரம் செய்து அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் அவர்களின் தேர்தல் வாய்ப்புகள் பறிபோகும் வண்ணம் எங்களது அமைப்பைச் சேர்ந்த அனைத்து சமூகமும் ஒரே குரலாக ஒன்று சேர்ந்து போட்டியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

2 hrs ago
user_Karthik M S
Karthik M S
மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
2 hrs ago
e273d606-a83a-4b89-961d-06e8f180ecc1

*தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ஜாதி வாரி கணக்கு எடுப்பு நடத்தப்பட வேண்டும் - ஓ பி சி உரிமைகள் கட்சி சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 4வது அணியாக போட்டியிடுவோம் இரத்தினசபாபதி தலைவர் OBC உரிமைகள்கள் கட்சி* மதுரை வில்லாபுரம் தனியார் மண்டபத்தில் ஓபிசி மக்கள் உரிமைக் கட்சி அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஓபிசி ரைட்ஸ் மாநில துணைத்தலைவர் நாகரத்தினம் தலைமை வகித்தார் ஒபிசி மாநிலத் துணைச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார் நாயுடு சங்க பேரவை செல்ல பாண்டியன் வரவேற்புரை கூறினார் கூட்டத்திற்கு ஓபிசி உரிமைகள் கட்சி தலைவர் ரத்தின சபாபதி (Rtd SP) முன்னாள் காவல் கண்காணிப்பாளர் குமரவேலு தமிழ்நாடு வீர சைவ பேரவை மாநில பொதுச் செயலாளர் பாலாஜி லோகநாதன் மாநில இளைஞர் அணி செயலாளர் புல்லட் பிரபு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓபிசிஉரிமைகள் கள் கட்சி சார்பில் தமிழக அரசு ஓபிசி அனைத்து பிரிவினருக்குமான ஜாதிபாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,சமுதாயத்தில் மிகவும் பின்தங்கி உள்ள ஓபிசி அணியின் குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது அனைத்து பிரிவுகளுக்கும் பொதுவான இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட வேண்டும்,மத்திய மாநில அரசுகளில் ஓ பி சி அணியினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, தொடர்ந்து OBC உரிமை கட்சி தலைவர் அளித்த இரத்தினசபாபதி பேட்டியில் இது ஓபிசி மக்கள் உரிமை கட்சி ஊடகவியலாளர் சந்திப்பு. தற்போது இங்கே ஓபிசி மக்கள் உரிமை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் இங்கே குழுமி இருக்கிறோம். இது 'சொசைட்டி ஃபார் தி ரைட்ஸ் ஆஃப் பேக்வேர்ட் கம்யூனிட்டீஸ்' (Society for the Rights of Backward Communities) என்ற அமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக மத்திய, மாநில அரசுகளை ஓபிசி மக்களின் பல்வேறு தீராத வேதனைகளை அவர்களிடம் எடுத்துச் சென்று நாங்கள் கொடுத்த மனுக்கள் மீதும், எம்எல்ஏ, எம்பி ஆகியோரை சந்தித்து நாங்கள் நேரில் விளக்கியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக, மனுக்களை தூக்கிக்கொண்டு செல்வது, அதை உதாசீனப்படுத்துவது என்பதையே அனைத்து அரசியல் கட்சிகளும் வழக்கமாக வைத்துக் கொண்டிருந்ததன் காரணமாக, எந்த ஒரு காரணி அல்லது ஃபேக்டர் (factor) அரசியல் கட்சிகளை சற்றே விழித்தெழச் செய்யும் என்பதை ஆராய்ந்து, இதை ஒரு அரசியல் அமைப்பாக அதே பெயரில், 'ஓபிசி மக்களது உரிமை கட்சி' எனத் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் 76 சதவீதமும், அகில இந்தியாவில் 54 சதவீதமும் உள்ள ஓபிசி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை பொது அரங்கிலும், வரப்போகும் தேர்தலிலும் எதிரொலிக்கச் செய்யும் விதமாக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த அமைப்பின் சார்பாக எங்களது இயக்கத்தின் கொள்கைகளை, எங்களது மக்களின் வேதனைகளை பொதுவெளியில் பிரச்சாரம் செய்து அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் அவர்களின் தேர்தல் வாய்ப்புகள் பறிபோகும் வண்ணம் எங்களது அமைப்பைச் சேர்ந்த அனைத்து சமூகமும் ஒரே குரலாக ஒன்று சேர்ந்து போட்டியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி மதுரை, பிப்.18- மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார். இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது: “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார். மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.
    2
    30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி
மதுரை, பிப்.18-
மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார்.
இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது.
அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது:
“இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார்.
மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by Saba Saba
    1
    Post by Saba Saba
    user_Saba Saba
    Saba Saba
    மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு. தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும், சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை, இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர், ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர், மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    1
    மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர்.
ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு.
தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்,
சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை,
இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர்,
ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.
இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர்,
மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    46 min ago
  • வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்
    1
    வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி  உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, கூலம்பட்டி,மேட்டுகாமன் பட்டி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பூக்களை அதிகப்படியாக விவசாயம் செய்து, அதனை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டுகாமன் பட்டியலில் இருந்து நிலக்கோட்டை பிரிவு வரை உள்ள சாலை சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளதால் மார்க்கெட்டிற்கு பூக்களை வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகள் கடும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளதால் துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை சீரமைத்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, கூலம்பட்டி,மேட்டுகாமன் பட்டி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பூக்களை அதிகப்படியாக விவசாயம் செய்து, 
அதனை நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். 
இந்நிலையில் மேட்டுகாமன் பட்டியலில் இருந்து நிலக்கோட்டை பிரிவு வரை உள்ள சாலை சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளதால் 
மார்க்கெட்டிற்கு  பூக்களை வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகள் கடும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளதால் 
துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை சீரமைத்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 min ago
  • திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இதனால் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே
திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் 
பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு
இதனால் அங்கு இருப்பவர்கள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
    1
    அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை, பிப்.18-  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட  சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    3
    சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை, பிப்.18- 
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 
சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர்
டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.