திருப்பூர் கணியாம்பூண்டி,ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வீ த லீடர்ஸ் அமைப்பினர் மனு! திருப்பூர் கணியாம்பூண்டி,ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வீ த லீடர்ஸ் அமைப்பினர் மனு! அவிநாசி பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விதி லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வலர்கள் கணியம்பூண்டி செந்தில், மாலதி, சத்யராஜ், சுதர்சன், ரஞ்சித்,ருக்மணி உட்பட பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனர். அவிநாசி,ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியின் அருகில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் மற்றும் குழந்தைகள் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் சாலைகளிலும், பள்ளி நுழைவாயிலின் முன்புறமும் கழிவுநீர் செல்வதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு விரைவில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். முறியாண்டம்பாளையம் ஊராட்சி, சூரி பாளையம்,தண்டுக்காரன்பாளையம்,ராமியம்பாளையம், அய்யன்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் சூரியபாளையம் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு செல்வதற்கு அவிநாசி - புளியம்பட்டி பிரதான சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று இறுதி சடங்கு செய்ய வேண்டியுள்ளது. மழைக்காலம், இரவு நேரங்களில் சடலங்களை சுமந்து செல்வதற்கு சேரும் சகதியுமாக உள்ள நீரை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், நோய் தொற்றுக்கும் ஆளாவதால் மயான பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கணியம்பூண்டி ஊராட்சியில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் பிளாஸ்டிக் உணவு மற்றும் வீட்டு உபயோக கழிவுகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன்,திறந்த வெளியில் கழிவுகள் எரிக்கப்படுவதால் புகை மாசும் நிலவுகிறது. குறிப்பாக அருந்ததியர் சமுதாய மயானத்தின் அருகே இறைச்சிக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதால் துர்நாற்றமும், அழுகிய கழிவுகளை உண்டு தெரு நாய்கள் உயிரிழந்து கிடப்பதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, எனவே திடக்கழிவு மேலாண்மை பணியை முறையாக மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். திருமுருகன்பூண்டியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் (1 5 1 3 )அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து 200 மீட்டர் எல்லைக்கு அருகிலும், அவிநாசி கால்நடை மருத்துவமனை பஸ் ஸ்டாப் மற்றும் மாதேஸ்வரி மருத்துவமனைக்கு மிக அருகிலும் டாஸ்மாக் கடை செயல்படுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது எனவே அரசு விதிமுறையை மீறி செயல்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். அம்மாபாளையம் மற்றும் திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பாறைக்குழிகளில் திருப்பூர் மாநகராட்சியால் தினசரி டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.இதனால் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிக்கும்.மழைக்காலத்தில் இக்கழிவுகள் மழைநீருடன் கலந்து நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்களை நஞ்சாக்கும் நிலை ஏற்படும்.எனவே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரையிடம் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் மனு அளித்தனர்.
திருப்பூர் கணியாம்பூண்டி,ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வீ த லீடர்ஸ் அமைப்பினர் மனு! திருப்பூர் கணியாம்பூண்டி,ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வீ த லீடர்ஸ் அமைப்பினர் மனு! அவிநாசி பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விதி லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வலர்கள் கணியம்பூண்டி செந்தில், மாலதி, சத்யராஜ், சுதர்சன், ரஞ்சித்,ருக்மணி உட்பட பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனர். அவிநாசி,ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியின் அருகில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் மற்றும் குழந்தைகள் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சாக்கடை
கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் சாலைகளிலும், பள்ளி நுழைவாயிலின் முன்புறமும் கழிவுநீர் செல்வதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு விரைவில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். முறியாண்டம்பாளையம் ஊராட்சி, சூரி பாளையம்,தண்டுக்காரன்பாளையம்,ராமியம்பாளையம், அய்யன்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் சூரியபாளையம் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு செல்வதற்கு அவிநாசி - புளியம்பட்டி பிரதான சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று இறுதி சடங்கு செய்ய வேண்டியுள்ளது. மழைக்காலம், இரவு நேரங்களில் சடலங்களை சுமந்து செல்வதற்கு சேரும் சகதியுமாக உள்ள நீரை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், நோய்
தொற்றுக்கும் ஆளாவதால் மயான பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கணியம்பூண்டி ஊராட்சியில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் பிளாஸ்டிக் உணவு மற்றும் வீட்டு உபயோக கழிவுகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன்,திறந்த வெளியில் கழிவுகள் எரிக்கப்படுவதால் புகை மாசும் நிலவுகிறது. குறிப்பாக அருந்ததியர் சமுதாய மயானத்தின் அருகே இறைச்சிக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதால் துர்நாற்றமும், அழுகிய கழிவுகளை உண்டு தெரு நாய்கள் உயிரிழந்து கிடப்பதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, எனவே திடக்கழிவு மேலாண்மை பணியை முறையாக மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். திருமுருகன்பூண்டியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் (1 5 1 3 )அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து 200 மீட்டர் எல்லைக்கு
அருகிலும், அவிநாசி கால்நடை மருத்துவமனை பஸ் ஸ்டாப் மற்றும் மாதேஸ்வரி மருத்துவமனைக்கு மிக அருகிலும் டாஸ்மாக் கடை செயல்படுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது எனவே அரசு விதிமுறையை மீறி செயல்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். அம்மாபாளையம் மற்றும் திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பாறைக்குழிகளில் திருப்பூர் மாநகராட்சியால் தினசரி டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.இதனால் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிக்கும்.மழைக்காலத்தில் இக்கழிவுகள் மழைநீருடன் கலந்து நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்களை நஞ்சாக்கும் நிலை ஏற்படும்.எனவே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரையிடம் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் மனு அளித்தனர்.
- பூண்டி நகராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாநகராட்சி குப்பை லாரிகள் வழிமறித்து சிறைபிடிப்பு... திருப்பூர் மாவட்டம்,பூண்டி நகராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உட்பட மொத்த கவுன்சிலர்களும் மாநகராட்சி பகுதியில் இருந்து வரும் குப்பை லாரிகளை வழி மறித்து சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் இரண்டு மூன்று மாதங்களாக தேங்கிய குப்பைகளை, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள அம்மாபாளையம் பாறைக்குழியில் அடாவடியாக குப்பை கொட்டும் போக்கைக் கண்டித்தும், வரிசைகட்டி நிற்கும் குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.1
- திண்டுக்கல் நத்தம் அருகே நூதன பண மோசடி தொடர்ந்து நத்தம் பகுதியில் பதட்டம் காவல்துறை வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.3
- இராசிபுரம்: திருநங்கைகளின் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வ கோயில் நாக முத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக பல்வேறு திரவிங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- Post by Sangili.v1
- சேலம் மாநகரத்தில் வெளுத்து கட்டிய கனமழை! பொதுமக்கள் மகிழ்ச்சி..... சேலம் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை 6 மணி அளவில் திடீரென மிதமான மழை பெய்யத் தொடங்கியது, நேரம் செல்லச் செல்ல தனது வேகத்தை கூட்டிய மலை கனமழையாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இந்த திடீர் கனமழையினால் மாநகரத்தில் முக்கிய பகுதிகளான அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், கன்னங்குறிச்சி, ஏற்காடு அடிவாரம், கெட்டிச்சாவடி, அழகாபுரம் பெரிய புதூர், ஐந்து ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் இந்த திடீர் மழை நாள் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மழையின் குளிரில் மகிழ்ச்சியடைந்தனர்.1
- கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் .. விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை1
- ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் *வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாட்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது* *ஜேசிபி வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், வாடகை உயர்வுக்கு ஆதரவு அளித்ததால் போராட்டம் முடிவு* ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வால் வாடகை கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தேனி, போடி, சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை நிறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் ஜேசிபி உதிரி பாகங்கள் விலை உயர்வு, மற்றும் ஆயில், டீசல் விலை உயர்வினால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் ஒரு மணி நேரத்திற்கு 1200 ரூபாயாக இருந்த வாடகையை குறைந்தபட்சமாக 1500 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் இரண்டு மணி நேரத்திற்கு 4,500 வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனால் மாவட்டத்தில் கட்டுமான தொழில்கள், செங்கல் காளவாசல் தொழில், குவாரி தொழில் உள்ளிட்டவை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது இந்த நிலையில் ஜேசிபி உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்று அவர்கள் நிர்ணயித்த வாடகையை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது ஜேசிபி வாடகை கட்டணம் உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஜேசிபி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் ஜேசிபி உரிமையாளர்கள், ஆப்பரேட்டர்களுக்கு தமிழக அரசு நலவாரியம் அமைத்து தர வேண்டும் என ஜேசிபி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது1
- திண்டுக்கல்லில் ரெட்டியூர் சத்திரம் புதுப்பட்டி வழியாக பேருந்து இயக்கப்படாததால் தொடர்ந்து பேருந்து புதுப்பட்டி வழியாக இயக்க வேண்டும் என போராட்டம்1