251.பத்திரிகையாளர்களுக்கு மஜிதியா குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்த மூத்த பத்திரிகையாளர்கள், நிறுவன உரிமையாளர்கள், செய்தித்துறை & தொழிலாளர் நலத்துறை சார்ந்த அரசுப் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறைப் பிரதிநிதிகள் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டு பத்திரிகையாளர் நலன் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 337) 252.முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் சிறப்பானதாக மாற்றி அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 338) 253.பணியின் போது பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கும், சேதமுற்ற உபகரணங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 339) 254.மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை போன்ற முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்களுக்குக் குடியிருப்பு மனைகள் ஒதுக்கிடு செய்யப்படும். (வாக்குறுதி எண் & 341) 255.மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு சி.டி. ஸ்கேன் வசதி உள்ளிடட நவீன பரிசோதனைக் கூடங்கள், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, குழந்தையின்மை சிகிச்சைக்கான தனிப்பிரிவு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைப் பிரிவு ஆகியவை தொடங்கப்படுவதுடன், சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு இரத்தம் சுத்திகரிக்கவும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்குக் குறைந்த செலவில் இரத்தம் மாற்றும் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 344) 256.தொழிலாளர்கள் மிக அதிக அளவில் வசிக்கும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழிலாளர் வைப்பு நிதி மருத்துவமனைகள் இல்லை. எனவே மத்திய அரசை வலியுறுத்தி ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்க ஆவன செய்யப்படும். (வாக்குறுதி எண் & 345) 257.தமிழ்நாடு பிசியோதெரபி கவுன்சில் முழுமையாகச் செயல்பட நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து வட்ட மருத்துவமனைகளிலும் இயன்முறை மருத்துவப் பிரிவு தொடங்கப்படும். (வாக்குறுதி எண் & 346) 258.கோவை, நெல்லை, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் மாநில அரசின் நிதியிலிருந்து புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். (வாக்குறுதி எண் & 348) 259.108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை முதல் கட்டமாக 2 ஆயிரம் அளவிற்கு அதிகப்படுத்தி, மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் ஓர் ஒன்றியத்திற்குக் குறைந்தது 6 என்ற எண்ணிக்கையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 349) 260.மாவட்ட நெடுஞ்சாலைகளில் 50 கிமீ தொலைவிற்கு ஒன்று வீதம் அவசர சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 350)

- எலும்பு இல்லாத மனிதன் போல. அவரை காண்போம்.1
- பகத்சிங் பற்றி தெரிந்து கொள்வோம்.1
- புதுச்சேரி சேர்ந்த மாணவி தாரகை கடலில் 20 அடி ஆழத்தில் பரதநாட்டியம். பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கடல் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் தீமைகளை தனது நாட்டிய முத்திரைகளாலும் நடன அசைவுகளால் காண்பித்து உள்ளார். இராமேஸ்வரத்தில் இது எடுக்க பட்டது. வாழ்த்துக்கள்.1