Shuru
Apke Nagar Ki App…
மாநகர் நடை பயிற்சி செல்லும் பாதையில் கட்டணக் கழிப்பறை பயன்பாட்டிற்கு வரக் கோரிக்கை திண்டுக்கல் மாநகர் கோபால சமுத்திரம் நடைப்பயிற்சி செல்லும் எதிர்புறம் GH பின்புறம் மாநகராட்சி கட்டண கழிப்பறை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது பயன்பாட்டிற்கு வந்தால் நடை பயிற்சி செல்வோர்க்கு உதவியாக இருக்கும் GH வருவோருக்கு உதவியாக இருக்கும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தயங்குவது ஏன் திண்டுக்கல் மாநகர் பகுதியில் பயன்பாட்டில் உள்ள கழிப்பறை எத்தனை பயன்பாட்டில் இல்லாத கழிப்பறை எத்தனை கணக்கீடு எடுத்து பயன் பாட்டிற்கு கொண்டு வந்து உதவிட வேண்டும் திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை ✍️✍️✍️✍️✍️✍️✍️
Dindigul Prakash
மாநகர் நடை பயிற்சி செல்லும் பாதையில் கட்டணக் கழிப்பறை பயன்பாட்டிற்கு வரக் கோரிக்கை திண்டுக்கல் மாநகர் கோபால சமுத்திரம் நடைப்பயிற்சி செல்லும் எதிர்புறம் GH பின்புறம் மாநகராட்சி கட்டண கழிப்பறை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது பயன்பாட்டிற்கு வந்தால் நடை பயிற்சி செல்வோர்க்கு உதவியாக இருக்கும் GH வருவோருக்கு உதவியாக இருக்கும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தயங்குவது ஏன் திண்டுக்கல் மாநகர் பகுதியில் பயன்பாட்டில் உள்ள கழிப்பறை எத்தனை பயன்பாட்டில் இல்லாத கழிப்பறை எத்தனை கணக்கீடு எடுத்து பயன் பாட்டிற்கு கொண்டு வந்து உதவிட வேண்டும் திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை ✍️✍️✍️✍️✍️✍️✍️
More news from தமிழ்நாடு and nearby areas
- மதுரை சரவணா கிச்சன் சார்பில் 10 ருபாய் மலிவு விலையில் மதிய உணவாக தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஏற்பாட்டில் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கி கடந்த ஜனவரி 19 முதல் காலை உணவாக 10 ரூபாய்க்கு தேநீருடன் 3 இட்லி விற்பனையை துவக்கியது. அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் இரவு உணவாக 20 ரூபாய் மலிவு லிலையில் சிக்கன் மற்றும் முட்டைப் பிரியாணி விற்பனை செய்து வரும் நிலையில், இன்று முதல் மதிய வேளையிலும் மக்களுக்கு மலிவு விலை உணவு வழங்கும் சேவையை சரவணா கிச்சன் விரிவுபடுத்தி உள்ளது. இன்று (9/3/2026 திங்கள்) கோ.புதூர் ஐடிஐ பஸ் நிறுத்தம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலிவு விலையில் 10 ரூபாய்க்கு தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவை வழங்கும் திட்டத்தை இன்று கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் Ex.MLA அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமணி, வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், முத்தானந்தன், அஜித்குமார், பாண்டிச்செல்வி, லியாகத் அலி, ஜாகிர் உசேன், விருமாண்டி, ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கடந்த 50 நாட்களாக மக்களின் ஏகோபித்த வரவேற்பில் நடைபெற்று வரும் சரவணா கிச்சன் மலிவு விலை உணவகத்தில் காலை நேரத்தில் வழங்கப்படும் மலிவு விலை இட்லி தேநீர் திட்டத்தில் சுமார் 30,000 பேரும், மலிவு விலை இரவு உணவு பிரியாணி வழங்கும் திட்டத்தில் கடந்த 24 நாட்களில் 12,000 பேரும் ஆக இதுவரை சுமார் 42,000 பேர் பயன் பெற்றுள்ள நிலையில் இன்று முதல் 10 ரூபாய் மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல் சரவணா கிச்சன் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.1
- மதுரை : : சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் பட்டியல் சமூக மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மானாமதுரை ஆகாஷ் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டும் இன்று மானாமதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐஎம் மற்றும் விசிகவினர் திரளாகப் பங்கேற்று முழக்கமிட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன், விசிக மாவட்டச் செயலாளர் பாலையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் நிர்வாகிகள் கருப்புச்சாமி, முத்துராமலிங்கபூபதி, வீரையா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கக் கோரி வலியுறுத்தினர்.2
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறை தெற்கு ஒன்றியத்தில், அதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது.1
- தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன1
- தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தனி சன்னதியில் அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம், மூலச்சத்திரம் அருகே நரிக்கல்பட்டி பகுதியில் அதிவேகமாக வந்த காரை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி அவர்கள் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருள் இருப்பது தெரியவந்து குட்கா பொருளையையும், காரையும் பறிமுதல் செய்தனர் அந்த காரில் வந்த நான்கு பேர் தப்பி ஓடிய நிலையில் அவர்களை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.1
- விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு தமிழக மக்களுக்கு விடியாத ஆட்சியைத்தான் திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்துள்ளது. தேர்தல் வருவதால் சேர்த்து வைத்துள்ள பணத்தை கொடுத்து மக்களை கூட்டி கூட்டம் நடத்துகின்றனர். ஓபிஎஸ் இணைப்பு விழா என்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக விளம்பரம் செய்தனர். அதற்கு அரசு பேருந்து, பிரியாணி, தலைக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து கூட்டம் சேர்த்தனர். தேர்தல் நேரம் அவப்பெயர் ஏற்படும் என்ற காரணத்தால் ஊழல் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. ஸ்டாலின் அரசு மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி வருகிற 12-ஆம் தேதி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது மதுரை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடை கண்டித்தும் நடைபெற்ற வரி மோசடி ஊழல் புகார் ஐந்து மாதங்களாக மாநகராட்சி மேயர் மண்டல தலைவர் நிலை குழு தலைவர் நியமிக்காமல் மாமன்ற கூட்டம் நடத்தப்படவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது இதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு தமிழக மக்களுக்கு விடியாத ஆட்சியைத்தான் திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்துள்ளது. தேர்தல் வருவதால் சேர்த்து வைத்துள்ள பணத்தை கொடுத்து மக்களை கூட்டி கூட்டம் நடத்துகின்றனர். ஓபிஎஸ் இணைப்பு விழா என்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக விளம்பரம் செய்தனர். அதற்கு அரசு பேருந்து, பிரியாணி, தலைக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து கூட்டம் சேர்த்தனர். தேர்தல் நேரம் அவப்பெயர் ஏற்படும் என்ற காரணத்தால் ஊழல் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு என்றார்1
- மதுரை: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தம்மை தேர்வு செய்ய ஒத்துழைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், திமுக அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறினார். மேலும், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் கடும் கோபத்தில் இருப்பதாகவும் அவர் சாடினார்.1