விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக அருகில் உள்ள துலுக்கன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 47 வயது சுரேந்திரன், தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது மது போதையில் இருந்த சுரேந்திரன், ஊரின் நடுவே உள்ள சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றின் சுவரில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் படிகள் இல்லாததால் சுரேந்திரனால் மேலே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீன் பிடிக்கும் வலை போன்ற கூடை மூலம் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சுரேந்திரனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக அருகில் உள்ள துலுக்கன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 47 வயது சுரேந்திரன், தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது மது போதையில் இருந்த சுரேந்திரன், ஊரின் நடுவே உள்ள சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றின் சுவரில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் படிகள் இல்லாததால் சுரேந்திரனால் மேலே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீன் பிடிக்கும் வலை போன்ற கூடை மூலம் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சுரேந்திரனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- Surendran Sugandhiபெரம்பூர், சென்னை, தமிழ்நாடுமிஸ்டர் நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை உங்க தலைவர் விஜய் என்ன சொன்னா என்னோட சொந்த காசு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை மிஸ்டர் விஜய் சொன்னார் என் ஆட்சி மக்களுக்கு மாதம் மகளரி உரிமை தொலை ருபாய் 2500 சொன்ன வார்த்தை காப்பாற்ற தமிழ் நாட்டில் மக்கள் ஏமாற்றம் இனிமேல் மக்கள் சும்மா விடமாட்டேன்15 hrs ago
- X videos in ourதுறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு😡15 hrs ago
- 6yb c6yyy666cv76ggvAndimadam, Ariyalur🙏4 days ago
- 6yb c6yyy666cv76ggvAndimadam, Ariyalur😡4 days ago
- தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) இன்று தொடங்கியது. சிறப்பு அலுவலராகக் கலந்துகொண்ட தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துக் கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து உடனடி தீர்வு காணும் வகையில், அனைத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெறும் விதமாக ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. பெரியகுளம் தாலுகா அளவில், அனைத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணும் வகையில், ஜூன் 16ஆம் தேதி தொடங்கி ஜூன் 19ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு குறிப்பிட்ட வருவாய் கிராமங்களுக்குத் தனித்தனியே ஜமாபந்தி நடைபெறுகின்றது. இன்று தொடங்கிய ஜமாபந்தி முகாமில், பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை மற்றும் வருவாய்த் துறை உட்பட்ட பிற அரசுத் துறை சார்ந்த கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உடனடித் தீர்வு கண்டு வருகின்றனர். இந்த ஜமாபந்தியில், வட்டாட்சியர் மருது பாண்டி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்த பிற அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்குத் தீர்வு கண்டு வருகின்றனர்.1
- நம்ம ஊரு ஆடானை யூடியூப் சேனல், திருவாடானை சார்பாக, மதுரை மாவட்டத்தில் உள்ள கோச்சடை முத்தையா சுவாமி திருக்கோயிலின் தரிசனத்தைப் பதிவு செய்துள்ளது.1
- Post by RAJA news1
- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில், சுதந்திரப் போராட்ட தியாகி வீரத் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் 140 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐயப்பா V. மணி, செயலாளர் ஒபுராய் V மாலி, மாவட்டப் பொருளாளர் வேலா S. காளிதாசன், அத்துடன் கிளைச் செயலாளர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள 154வது வார்டில், 2 ஏக்கர் பரப்பளவில், 7.85 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டு, 16/06/2026 அன்று திறப்பு விழா நடைபெறும் பூங்காவிற்கு, சுதந்திரப் போராட்ட தியாகி S. S. விஸ்வநாததாஸ் அவர்களின் பெயர் சூட்ட அரசாணை வழங்கியதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை மாநகர மேயர், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இந்நிகழ்ச்சியில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பூங்காவிற்கு சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் பெயரைச் சூட்ட அரும்பாடுபட்ட மண்ணாங்கட்டி என்ற மணி அண்ணன் அவர்களுக்கும் சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மழுக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது இரண்டு பிளாட்டுகளை சர்வே செய்து தருமாறு திருமயம் நில அளவையர் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவையர் செல்வராஜ் (35) என்பவரை அணுகியுள்ளார். அப்போது, பாலமுருகனின் இரண்டு பிளாட்டுகளையும் சர்வே செய்து கொடுக்க செல்வராஜ் 14,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பாலமுருகன் அந்த 14,000 ரூபாயை நில அளவையர் செல்வராஜிடம் கொடுக்கும்போது, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர் பீட்டர் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.1
- உடுமலை நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு பகுதியில் நடைபெற்று வந்த சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 25வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவியே இந்தப் பணியை நிறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. இப்பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் மஞ்சுளா தேவியிடம் முறையிட்டபோது, அவர் மிகவும் அலட்சியமாக "இது எனது வார்டு இல்லை; எனது பணி முடிந்துவிட்டது" என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. அவரது அலட்சியப்போக்கால் சாக்கடை கால்வாய் பணி நிறைவுபெறாமல் பாதியிலேயே நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சாக்கடைகள் தேங்கி, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- உண்மையாக இருப்பவர்கள் வாய்மொழி சித்திரவதைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது. உண்மை பேசும் நபர்கள் சந்திக்க நேரிடும் இந்தக் கடினமான யதார்த்தத்தை இது சுட்டிக்காட்டுகிறது.1
- தேனி நகரில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயிலில், சந்தை மாரியம்மன் என்று அழைக்கப்படும் அம்மனுக்குரிய வருடாந்திர வைகாசி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 26 ஆம் தேதி தொடங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, உற்சவர் அம்மன் பிரம்மாண்டமான புஷ்பப் பல்லாக்கு வாகனத்தில் வீதி உலா புறப்பாடு இன்று நடைபெற்றது. முன்னதாக, கோயில் வளாகத்தில் உற்சவர் அம்மன் வண்ணப் பட்டுடுத்தி, ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர், கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் உற்சவர் அம்மனை சுமந்துகொண்டு கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து, வண்ண மலர் மாலைகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்த புஷ்பப் பல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து, வானவேடிக்கை முழங்க அம்மன் புஷ்பப் பல்லாக்கில் வீதி உலா புறப்பாடு தொடங்கியது. தேனி நகரின் முக்கிய வீதிகளான நேரு சிலை, தேனி நகர் பகுதி, அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக இந்த வீதி உலா செல்லவுள்ளது. இந்த ஊர்வலம் நாளை காலை அல்லிநகரம் கோயிலுக்கு வந்தடையும். வழிநெடுகிலும் திரளான பொதுமக்கள் பிரம்மாண்ட புஷ்ப வாகனத்தில் வீதி உலா வந்த உற்சவர் அம்மனை தரிசனம் செய்தனர்.1
- Post by RAJA news1