Shuru
Apke Nagar Ki App…
பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிய காஞ்சி ஆட்சியர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் அவர்கள் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய மகளிர் முகவர்கள் (MPKBY) மற்றும் நிலை முகவர்களுக்கு (SAS) பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.பாக்கியலட்சுமி, மண்டல உதவி இயக்குநர் (சிறுசேமிப்பு) U.P.மினி ஆகியோர் உள்ளனர்.
Venkat
பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிய காஞ்சி ஆட்சியர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் அவர்கள் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய மகளிர் முகவர்கள் (MPKBY) மற்றும் நிலை முகவர்களுக்கு (SAS) பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.பாக்கியலட்சுமி, மண்டல உதவி இயக்குநர் (சிறுசேமிப்பு) U.P.மினி ஆகியோர் உள்ளனர்.
More news from Tamil Nadu and nearby areas
- பஞ்சாயத்தில் முறைகேடு உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் என்னை கேட்காதீர்கள் பஞ்சாயத்தில் கேளுங்கள் என அலட்சியமாக அதிகாரி பொதுமக்களிடம் பதில் அளித்ததால் வாக்குவாதம். திரும்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் காக்கங்கரை கிராம பஞ்சாயத்தின் முறைகேடு குறித்து பதில் அறிக்கையில் பழைய பொருட்களின் இருப்பு அறையில் பாதுகாப்பாக உள்ளது என்று பதிவேடு சரியாக பராமரிக்கப்படுகிறது என்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு இல்லை என்றும் கழிவு நீர் கால்வாய் சரியான அளவிற்கு போடப்படுகிறது என்றும் சுந்தரம் பள்ளி தூய்மை பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் விற்பனை செய்ததில் முறைகேடு இல்லை என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் அளிக்கின்றது மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும் என சுரேஷ்குமார் அளித்த மானுவில் தெரிவித்து இருந்தார்.1
- கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பாக மகளிர் தின விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டது1
- *அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.* ஈரான் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளின் ஏகாதிபத்திய தாக்குதலை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இடதுசாரி அமைப்புகள் இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்காவின் இந்த அநீதியான தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், ஈரானின் மீறிய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரி, அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சிசுபாலன் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற அமைப்புகள் பங்கேற்றனர்.1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு, மலையயூர் காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டுயாணைகள் ஊருக்குள் புகுந்து விசாயநிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் இன்று விடியற்காலை பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி ஊருக்குள் இரண்டு காட்டுயானைகள் புகுந்து வீதி வீதியாக உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாணை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யாணைகள் விவசாய நிலத்தில் உள்ள ராகி, கம்பு, சோளம், கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை உண்ண வனத்தை விட்டு வெளியே வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக ஊருக்குள் நுழைந்து வரும் காட்டு யானைகளால் மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வருகின்றனர். வன பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து பராமரித்தால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தவிர்க்கப்படும் என விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் உலக மகளிர் தின கோலப்போட்டி நடைபெற்றது. போட்டியில் மகளிர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மகளிர் பாதுகாப்பு, மகளிரை காத்திடுங்கள், பூக்கோலம், ரங்கோலி கோலம், பூக்கோலம், சிக்கு கோலம், கிளி கோலம் என கோலமிட்டு தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர். விவேகானந்தா சமூக கல்வி சங்க செயலாளர் தங்க கண்ணதாசன், தலைவர் தேவராஜன் ஆகியோர்கள் கோலங்களை பார்வையிட்டு கோலமிட்ட மகளிர்களிடம் அதற்கான பொருள் விளக்கங்களை கேட்டு மதிப்பெண் வழங்கி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம், ஆறுதல் பரிசுகளுக்கானவர்களை தேர்வு செய்தனர்.1
- நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாயம் சங்கத்தினர் சார்பாக திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டி மூன்று நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளன என்று மூத்த தலைவர் நேரில் சென்று நேற்று மார்ச் 9 ம் தேதி மாலை 5 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்ததில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பாலக்கோடு அருகே இரவு உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள்-சி.சி.டி.வி காட்சி வைரல்* தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புகாடு, மலையூர் காப்புக்காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் இன்று விடியற்காலை பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி ஊருக்குள் இரண்டு காட்டு யானைகள புகுந்து வீதி வீதியாக உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது பாலக்கோடு சுற்றுவட்டார வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் விவசாய நிலத்தில் உள்ள ராகி, கம்பு, சோளம், கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை உண்ண வனத்தை விட்டு வெளியே வருகிறது. ஒன்றன் பின் ஒன்றாக ஊருக்குள் நுழைந்து வரும் காட்டு யானைகளால் மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வருகின்றனர். வன பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து பராமரித்தால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது தவிர்க்கப்படும் என விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது யானையின் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரின் தீவிர முயற்சியால் மலையூர் வனப்பகுதிக்கு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளதாக பாலக்கோடு வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.1
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடியாக சரிவு கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 300 கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியாக நீடித்து வந்த நிலையில், நேற்று இந்த நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 500 கன அடியாக நீடித்து வந்தன. இன்று மேலும் குறைந்து வினாடிக்கு 300 கன அடியாக சரிந்து நீடித்து வருகிறது. தற்போது வரக்கூடிய இந்த உபரி நீரின் வேகம் குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டக்கூடிய தண்ணீரின் வேகமும் குறைந்தது. மேலும் இந்த நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை பொறுத்து உள்ளது1