சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன் த வெக வில் இணைந்தனர். ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை மதுரை திருப்பரங்குன்றம் அருகே த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி கடத்திய புகாரின் அடிப்படையில் வட்டாச்சியர் நடவடிக்கை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கற்கள் மற்றும் கிராவல் மண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகியோர் கனி வளத்துறையினர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சட்ட விரோதமாக குவாரியில் கற்களை வெட்டியெடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் நிலையூர் அடுத்த கருவேலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண்ணை வெட்டி கடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் 7.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளார். திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தவெகா பிரமுகர் பாரிமுன்பு அதிமுகவில் இருந்தார் தாவீகா வெற்றி பெற்றதும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன் த வெக வில் இணைந்தனர். ருபாய் 7.5 கோடி அபராத தொகையை கனிம வளத்துறையின் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வரின் தனிப்பிரிவு மனுவை சின்னமனூர் சர்வேயர் ஜெகநாதன் உதவியாளர் ஜெயமணியுடன் அளவீடு செய்ய சென்ற போது 2 பேரையும் K Kகுளம் அண்ணாமலை நகரில் குடியிருக்கும் செல்வராஜ் ரஞ்சித் சந்திரன் ஆகியோர் அளவீடு செய்ய விடாமல் தாக்கியதால் காடைமடைந்து தேனி க.விலக்கு GHல்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் நடந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட நில அளவை துறைஅலுவலர் சங்கத் தலைவர் கா கணேஷ் குமார் தலைமையிலும். தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு சங்கத் தலைவர் வேல்முருகன் முன்னிலையும் தமிழ்நாடு நில அளவை வரைவாளர் சங்கத் தலைவர் அதியமான் மற்றும் தமிழ்நாடு நில அளவைத் துறை புல உதவியாளர் சங்கத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர்கள் மற்றும் நில அளவையாளர்கள் உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சின்னமனூர் நில அளவையாளர் ஜெகன்நாதன் தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டுமெனவும். அவர்களை குண்டத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு கை செயல்படவில்லை என்றால் வருவாய்த் துறை மற்றும் அலுவலர் சங்கம் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர் சங்கத் மாவட்டத் தலைவர் கணேஷ் குமார் தெரிவித்தார்1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் நிறுவனத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய பால் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, மேலும் பால் எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது,ஆவின் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் உள்ள ஆவின் நிலையங்களுக்கு தலைமை இடமான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தினமும் 12000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளதால் ஆவின் நிலையத்திற்குள் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை எடுத்தனர்.இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக புதிதாக போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், பால்கோவாவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நெய் ,பட்டர் உள்ளிட்டஆவின் பொருட்கள் தரமானதாக மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் எந்த ஒரு உதவியும் என்றாலும் செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.1
- காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் *ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்.* தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்க விழாவை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி அருகே உள்ளூர் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு வி கா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க விழாவை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறிய சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில் வட்டாட்சியர் , நகராட்சி ஆணையாளர் முன்னிட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- காரைக்குடி, வீரயங்கம்மாய் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் தொந்தரவு காரைக்குடி மாநகராட்சி, வீரயங்கம்மாய் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் தொந்தரவு அதிகமாக உள்ளது. பொதுமக்கள் அந்த பாதை வழியாக நடந்து செல்லுவதற்கும் வாகனங்களில் செல்லுவதற்கும் மாடுகள் இடையூறாக உள்ளதாக மக்கள் குற்றசாட்டு. இதனால் விபத்து ஏற்பாடும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திண்டுக்கல் முத்தலம்பட்டி ஐயங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது பெய்த மழையில் நிறைந்துள்ளது குளங்கள் இருந்து வெளியேறும் நீர் செல்ல போதிய கழிவுநீர் வடிகால் இல்லாததால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி1
- மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை நாள் 23.09.26 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, முத்தபு டையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலணி, பழைய காலணி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகபட்டி, இராயம் பட்டி, வலையபட்டி, எஃப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, இடையப்பட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்கா ரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திபட்டி, படுகளம், பூசாரி பட்டி, கரும்புலிபட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதம லைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கை குறிச்சி, பொன்னகோன்பட்டி, மலையடிப்பட்டி வாட்டர் போர்டு, வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத் தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம் பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளனர்.1
- *தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் பெண்களுக்குத் தொல்லை ஆபாசமாக பேசி அத்துமீறிய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி* தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பார் பகுதியில், மது குடித்துவிட்டு அவ்வழியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, செல்போன்களை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி புதிய பேருந்து நிலையப் பகுதியில் அதிக அளவிலான மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன. இதனால், தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரைத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர் அதிக மதுபோதையில் இருந்ததால் அவரை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறியுள்ளனர். மேலும், இதுபோன்று அப்பகுதியில் தொடர்ந்து மது பிரியர்களின் செயல்களால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, புதிய பேருந்து நிலையப் பகுதியில் செயல்படும் பார்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.1
- தேனி பங்களா மேட்டில் தமிழர் தேசம் கட்சி சார்பில் வருசநாடு மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி மாவட்ட தமிழர் தேசம் கட்சி மற்றும் தென் மண்டலம் சார்பில் தேனி மதுரை சாலை பங்களா மேட்டில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனர் செல்வகுமார் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் நடராஜன் பூசாரி தமிழர் தேசம் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மகேஸ்வரன் மற்றும் பூமி அம்பலம் மற்றும் மாநில மருத்துவர் அணி செயலாளர் அன்பு எழில் தமிழர் தேச இளைஞர் பேரவை நிர்வாக மாநில செயலாளர் செல்லப்பாண்டி தேனி மேற்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பையா மற்றும் மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து மாவட்ட மகளிர் அணி வாழ வந்தால் மாவட்ட இளைஞரணி முருகன் கடமலை மயிலை ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் அழகுமுத்து போடி ஒன்றிய செயலாளர் குஞ்சன் மற்றும் வருசநாடு மேகமலை உள்ளிட்ட 102 கிராம மக்கள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் வருசநாடு கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 102 மலை கிராம மக்களைச் சேர்ந்த மூத்த குடிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் வன காப்பகம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் உச்சநீதிமன்றமும் வனத்துறையும் ஈடுபட்டு வருகிறது இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது மேலும் இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக எல்லையை மறு வரையறை செய்து வனத்துறையிடமிருந்து வன மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது1
- காரைக்குடி வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், புரட்டாசி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு திருநீர் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1