கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் பாய்மரபடகு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 15க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. இப்போட்டிக்கு 15 கடல் மைல்கள் தொலைவு எல்கை நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.ஒவ்வொரு படகிற்கும் ஏழு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டார்கள் இப்போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றை ஒன்று முந்தி சென்றதும் படகை காற்றின் திசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்மரத்தை திருப்ப சுறு சுறுப்பாக வேலை பார்த்தனர் இது பார்வையாளர்களை கவர்ந்தது. இப் போட்டியை காண சுற்று வட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். முடிவில் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் பாய்மரபடகு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 15க்கும் மேற்பட்ட படகுகள் கலந்து கொண்டன. இப்போட்டிக்கு 15 கடல் மைல்கள் தொலைவு எல்கை நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.ஒவ்வொரு படகிற்கும் ஏழு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டார்கள் இப்போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றை ஒன்று முந்தி சென்றதும் படகை காற்றின் திசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்மரத்தை திருப்ப சுறு சுறுப்பாக வேலை பார்த்தனர் இது பார்வையாளர்களை கவர்ந்தது. இப் போட்டியை காண சுற்று வட்டார மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். முடிவில் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி திருவரங்குளம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஆலங்குடி வம்பன் வடகாடு போன்ற பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக குளங்கள் குட்டைகளில் நீர்த்தேக்கம் மெதுவாக உயர்கிறது கடும் வெயில் நிலவி வந்த நிலையில் தற்பொழுது மழை பொழிகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்! மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள பூதமங்கலத்தில், அருள்மிகு ஸ்ரீ சிட்டிசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 :00 மணி முதல் 10 :00 மணிக்குள் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். காலை 11:00 மணியளவில் அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்னதானம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று இரவு 10 :00 மணியளவில் கோவில் முன்பாக உள்ள கலையரங்கில் ஸ்ரீ வள்ளி திருமண நாடகம் நடைபெற உள்ளது.1
- அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலத்தை மீட்க அரசுக்கு கோரிக்கை-கோவில் நிலம் முப்புதர் மண்டி ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக வேதனை* *அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலத்தை மீட்க அரசுக்கு கோரிக்கை-கோவில் நிலம் முப்புதர் மண்டி ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக வேதனை* திருக்கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தினால் குடியிருப்பு பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் பரப்பளவு நிலம் வருவாய் ஆதாரங்கள் இன்றி முட்புதர் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் விவசாய குத்தகைக்கு விடப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் விவசாயம் நடைபெறவில்லை அதற்கான நில குத்தகை தொகையும் அதிகாரிகள் வசூல் செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு. மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் உள்ளது . இந்த இடத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வந்துள்ள நிலையில் தற்போது ஒரு சென்ட் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் முப்பது கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான இந்த நிலம் குத்தகைதாரர் வசம் கடந்த 25 வருடங்களாக இருப்பதாக கூறப்படுகிறது . மேலும் குத்தகைதாரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு உரிய வாடகை எதுவும் செலுத்துவதில்லை, அவனியாபுரம் கல்யாணசுந்தரேஷ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் அறநிலைத்துறை அதிகாரிகளும் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் ஆதாரத்தை முறையாக வசூல் கணக்கீடு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். அவனியாபுரம் கிராமம் வல்லானந்தபுரம் பகுதியில் உள்ள சர்வே எண் 292க்கு கட்டுப்பட்ட 2 ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் முட் புதராகவும் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது . இங்கு பழைய வாகனங்கள் உபயோக படுத்தாமல் பராமரிக்கப்படாமல் நிறுத்தப்பட்டு அங்கு குடிகாரர்கள் திறந்தவெளி பார் போல் செயல்படுகிறது . இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் சமூக விரோதிகளின் புகழிடமாகவும் இந்த இடம் உள்ளதால் சுமார் 30 கோடி மதிப்பு மிக்க இந்த இடத்தை கைப்பற்றி அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் நிர்வாகம் முட் புதர்களை அகற்றி வருவாயை பெருக்கும் விதமாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான நிலம் ரவுடிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கோவில் இடத்தை மீட்க வேண்டும் இன்றைக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சராக ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் இதனை கருத்தில் கொண்டு கோவில் நிலத்தை மீட்டுத் தருவார் என நம்புகிறோம். அதேபோல் மதுரையில் பிரசித்தி பெற்ற தளமான பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய நிலத்தை கோவில் பூசாரிகள் பிளாட்டு போட்டுவிட்டனர். இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் கொண்டு அறநிலையத்துறையில் புகார் அளித்துள்ளோம் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டி: சிங்கராஜ் வழக்கறிஞர், தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்போர் பொதுச் செயலாளர்.1
- ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.1
- சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.1
- சிவகங்கை உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றுவதற்க்கு எதிர்ப்பு – சிவகங்கையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் சிவகங்கை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் மாற்றப்பட்டால் வழக்கறிஞர்கள் மற்றும் நுகர்வோர் வழக்குத் தொடரும் பொதுமக்கள் போக்குவரத்து சிரமம், கூடுதல் செலவினம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நுகர்வோர் நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.1
- மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை *மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை* மதுரை மாவட்டம் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை செய்து சாதனை. மேலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார் என்பது கூடுதல் சிறப்பு. கிட்டத்தட்ட ஓராண்டாக கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த 28 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு முதுகுத்தண்டுவட காசநோய் உருவானதால் நடப்பதில் சிரமமும், மார்புக்குக் கீழே உணர்ச்சியிழப்பும் ஏற்பட்டுருத்தது. முதுகுத்தண்டுவட அழுத்ததை குறைப்பதற்கான சிகிச்சையையும், திசு நீக்கம் மற்றும் நோயாளியின் சொந்த எலும்புகளைக் கொண்டு முதுகுத்தண்டை நிலைநிறுத்தும் ஒட்டு மொத்த அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. அதே நேரத்தில் கர்ப்பத்திலுள்ள கருவுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய சிகிச்சை அளித்து தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் செல்வமுத்துக் குமரன் கூறினார். உடன் முதுநிலை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார், இணை நிபுணர் மருத்துவர் கவீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.1
- அமைச்சர்களின் பதிலுரையை முதலில் வழங்குவது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் காட்டுவது போன்றது : தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார். மேலும், முதன்முறையாக 9 மணி 43 நிமிடங்கள் தொடர்ந்து அவை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். எனினும், அவை நேரத்தை கருத்தில்கொண்டு, அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள் இனி முதலில் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து பதிலுரை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பதிலளித்த திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். தவெகவின் க்ளைமாக்ஸை அனைவரும் நிச்சயமாகப் பார்ப்போம். உங்களுடைய க்ளைமாக்ஸையும் கட்டாயம் காத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இன்று காலையிலிருந்தே எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்பதில் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். காலையில் வந்தவுடனே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லட்டும்; அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது அறிவிப்புகளை எல்லாம் முன்னதாக வெளியிட்டுவிட்டு, பின்னர் அதுகுறித்து பேசுங்கள் என்கிறீர்கள். மொத்தத்தில் பேரவைத் தலைவர் படுத்துக்கட்டும், போர்த்திக்கலாம்; போர்த்திவிட்டும் படுத்துக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா என்பதை நான் அறிய விரும்புகிறேன் என நகைச்சுவையாகக் கூறினார்.1
- மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்த ஒரு அசாம்பாவிதம் ஏற்படவில்லை.1