logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விருதுநகர் மாவட்டம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா 2026-2027 போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.08.2026) பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், கல்வித்திறனை மேம்படுத்துவதோடு மாணவர்களிடையே உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திடும் வகையிலும் மாவட்டம் முழுவதும் கலைத்திருவிழாக்களை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மாவட்டத்தில் கலைத்திருவிழா நிகழ்ச்சிகள் மூலம் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஒன்றியங்களில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு ஓவியம், களிமண் சிற்பம், கீ போர்டு, நடனம், நாடகம், சித்திரம் வரைதல், செதுக்கு சிற்பம், இசை, நடிப்பு, பாடல், பலகுரல், பேச்சு, ஓவியம், ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஊராட்சி ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் 24.08.2026 மற்றும் 25.08.2026 ஆகிய தினங்கள் விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் 524 அரசுப்பள்ளி மாணவர்கள், 282 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் 348 அரசுப்பள்ளி மாணவர்கள், 225 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் என மொத்தம் 1379 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே, மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

19 hrs ago
user_குமார்
குமார்
Firefighter Kariapatti, Virudhunagar•
19 hrs ago
40313c28-0b10-4d57-aaac-01673e47b923

விருதுநகர் மாவட்டம் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா 2026-2027 போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.08.2026) பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், கல்வித்திறனை மேம்படுத்துவதோடு மாணவர்களிடையே உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திடும் வகையிலும் மாவட்டம் முழுவதும் கலைத்திருவிழாக்களை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மாவட்டத்தில் கலைத்திருவிழா நிகழ்ச்சிகள் மூலம் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு,

ecbf6d88-bbca-4740-935f-fe83297cbb4d

வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஒன்றியங்களில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு ஓவியம், களிமண் சிற்பம், கீ போர்டு, நடனம், நாடகம், சித்திரம் வரைதல், செதுக்கு சிற்பம், இசை, நடிப்பு, பாடல், பலகுரல், பேச்சு, ஓவியம், ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஊராட்சி ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் 24.08.2026 மற்றும் 25.08.2026 ஆகிய தினங்கள் விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் 524 அரசுப்பள்ளி மாணவர்கள், 282 அரசு

2f097605-75bf-4c39-b75e-d3180036a0fe

உதவி பெறும் பள்ளி மாணவர்களும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் 348 அரசுப்பள்ளி மாணவர்கள், 225 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் என மொத்தம் 1379 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே, மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    1
    2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் 

தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட  108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்
அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது
வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது
இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்
தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும்
தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்
ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில்  வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது
இந்நிலையில்  இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்
தங்களது கிராமத்தில் உள்ள அரசு  சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள்
இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில்  வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும்
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும்
தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது
மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து 
தேனி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தேனி கலெக்டர் அலுவலகத்தில் TNGEA சங்கம் சார்பில் கலெக்டர் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை அழிக்க மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார் லட்சுமி அழகுராஜா சக்தி திருமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் TNPGTA மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் TNPTF மாவட்டத் தலைவர் ராம்குமார் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவமணி சிஐடியு மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் தமிழ் பரமன் மலர்விழி பரமேஸ்வரன் விஸ்வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில செயலாளர் நீதி ராஜா நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்
    2
    தேனி கலெக்டர் அலுவலகத்தில் TNGEA சங்கம் சார்பில் கலெக்டர் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை அழிக்க மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார் லட்சுமி அழகுராஜா சக்தி திருமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் TNPGTA மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் TNPTF மாவட்டத் தலைவர் ராம்குமார் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவமணி சிஐடியு மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் தமிழ் பரமன் மலர்விழி பரமேஸ்வரன் விஸ்வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில செயலாளர் நீதி ராஜா நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது *ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் சாலையில் கடந்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை வீடியோ வைரல்* *ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை ஒன்று தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் யானை கடந்து செல்வது போன்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை நடமாட்டம் இல்லாத நிலையில் திடீரென யானை உலா வருவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறித்து ஆண்டிப்பட்டி வனத்துறையினர் விசாரணை செய்த நிலையில் இந்த காணொளி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று உறுதி செய்தனர் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானை கடந்து சென்ற வீடியோவால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளி எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அழகு ராஜா (27) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
    1
    வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது
*ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் சாலையில் கடந்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை வீடியோ வைரல்* 
*ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை ஒன்று தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் யானை கடந்து செல்வது போன்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது 
இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்
ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை நடமாட்டம் இல்லாத நிலையில் திடீரென யானை உலா வருவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறித்து ஆண்டிப்பட்டி வனத்துறையினர் விசாரணை செய்த நிலையில் இந்த காணொளி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று உறுதி செய்தனர்
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானை கடந்து சென்ற வீடியோவால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் 
இந்த காணொளி எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அழகு ராஜா (27) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    1
    விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்று திறனாளிகள் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம். சாலமுன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, கோவில்பட்டி நகர செயலாளர் குருநாதன், நகர குழு உறுப்பினர்கள் திருப்பதி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாவது மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தக் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவி த்தொகைக்காக வழங்கப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக உதவித்தொகை வழங்கும்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    4
    கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் மாற்று திறனாளிகள்  கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் 
கயத்தாறில்  மதுரை மெயின் ரோட்டில் மாற்றுத்திறனாளிகளின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம். சாலமுன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, கோவில்பட்டி நகர செயலாளர் குருநாதன், நகர குழு உறுப்பினர்கள் திருப்பதி, செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாவது  மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூபாய் 6000 ஆக உயர்த்தக் கோரியும், மாற்றுத்திறனாளிகள் உதவி த்தொகைக்காக  வழங்கப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக உதவித்தொகை வழங்கும்படியும், தமிழக அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கயத்தாறு பஜாரில் வைத்து நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1500 ரூபாய்க்கு பதிலாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களைப் போலவே மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்கவும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் மட்டும் திருநங்கை இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசே கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்
    2
    கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தினை
மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் காந்திராஜ் தலைமையில் கயத்தாறு பஜாரில் வைத்து நடைபெற்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1500 ரூபாய்க்கு பதிலாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களைப் போலவே மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்க வலியுறுத்தியும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்கவும். மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் மட்டும் திருநங்கை இலவசமாக பயணிக்கும் வெற்றி பயணத் திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசே கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்
    user_MAYILVAGANAN REPORTER
    MAYILVAGANAN REPORTER
    Photographer கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தேனியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம் போர்க்கால அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தேனியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிடக் கோரி இன்று மாநிலம் தழுவிய அளவில் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று மாலை ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்-ன் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    1
    காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தேனியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
போர்க்கால அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தேனியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிடக் கோரி இன்று மாநிலம் தழுவிய அளவில் முதலமைச்சரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று மாலை ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்-ன் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • முந்தல் சொக்கன் அலை மேலபரவு சிறைக்காடு மலைவாழ் மக்களுக்கு இருப்பிடம்,பட்டா வேண்டி கலெக்டரிடம் மனு ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் விவசாய செய்யக்கூடிய நிலங்களுக்கு அளவீடு செய்து பட்டா வழங்க கோரி கண்ணீர் விட்டு கதறி அழுது கோரிக்கை விடுத்த ஆதிவாசி மக்கள் தேனி மாவட்டம் போடி தாலுகா பெரியகுளம் தாலுகா ஆண்டிபட்டி தாலுகா உத்தமபாளையம் தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதுவார் குடி சிறைக்காடு சோலையூர் மேலப்பரவு களம் முந்தல் சொக்கன் அலை கரும்பாறை குறவன் குழி செல்லாங்காலனி நேரு நகர் வேலப்பர் கோவில் உப்புத்துறை தாழையூத்து கரட்டுப்பட்டி பளியங்குடி நொச்சி யோடை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 355 பேருக்கு விவசாய நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க கோரிக்கை விடுத்திருந்தோம் ஆனால் வன உரிமை சட்டம் 2006-ன் படி தேனி மாவட்டத்தில் 350 பழங்குடியினர் நிலத்தை வருவாய் துறையினர் கள ஆய்வு செய்து நிலத்தை பழங்குடியினர் நிலத்தை நில சர்வ செய்து வன உரிமை சட்டப்படி நிலம் வழங்க வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
    1
    முந்தல் சொக்கன் அலை மேலபரவு சிறைக்காடு மலைவாழ் மக்களுக்கு இருப்பிடம்,பட்டா வேண்டி கலெக்டரிடம்  மனு
ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் விவசாய செய்யக்கூடிய நிலங்களுக்கு அளவீடு செய்து பட்டா வழங்க கோரி கண்ணீர் விட்டு கதறி அழுது கோரிக்கை விடுத்த ஆதிவாசி மக்கள் 
தேனி மாவட்டம்  போடி தாலுகா பெரியகுளம் தாலுகா ஆண்டிபட்டி தாலுகா உத்தமபாளையம் தாலுகா  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதுவார் குடி சிறைக்காடு சோலையூர் மேலப்பரவு களம் முந்தல் சொக்கன் அலை கரும்பாறை குறவன் குழி செல்லாங்காலனி நேரு நகர் வேலப்பர் கோவில் உப்புத்துறை தாழையூத்து கரட்டுப்பட்டி பளியங்குடி நொச்சி யோடை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 355 பேருக்கு விவசாய நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க கோரிக்கை விடுத்திருந்தோம்
ஆனால் வன உரிமை சட்டம் 2006-ன் படி தேனி மாவட்டத்தில் 350 பழங்குடியினர் நிலத்தை வருவாய் துறையினர் கள ஆய்வு செய்து நிலத்தை பழங்குடியினர் நிலத்தை நில சர்வ செய்து வன உரிமை சட்டப்படி நிலம் வழங்க வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரமநாயக்கன்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    1
    சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரமநாயக்கன்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.