Shuru
Apke Nagar Ki App…
போதையால் இளைஞருக்கு நேர்ந்த சோகம். பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராம்கி (32). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.10) தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகையினை வாங்கிய ராம்கி அதனை கொண்டு மது குடித்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதனால் மன வேதனை அடைந்த ராம்கி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Vivek Selvaa
போதையால் இளைஞருக்கு நேர்ந்த சோகம். பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராம்கி (32). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.10) தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகையினை வாங்கிய ராம்கி அதனை கொண்டு மது குடித்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதனால் மன வேதனை அடைந்த ராம்கி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
More news from தமிழ்நாடு and nearby areas
- மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் பெரியகுளம் பகுதியில் இன்று தேனி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் இருந்து பொங்கல் பானையை சுமந்து நகர் பகுதியில் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.1
- கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.1
- மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- மணப்பாறை அருகே தொடர் மழையால் இரண்டு வீடுகளில் ஓடுகள் இடிந்து விழுந்து சேதம். வருவாய்துறையினர் நேரில் ஆய்வு திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை அவ்வபோது விட்டு விட்டு பெய்து வருகின்றது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பொன்னக்கோன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆலீஸ் சோபியா ராணி (49) என்பவரின் வீட்டின் ஓட்டு வீட்டில் மேல் புறத்தில் இருந்து ஓடுகள் இடிந்து விழுந்தது. தொடர் மழையால் அவரும் அவரது மகனும் அருகில் உள்ள வீட்டில் தூங்கியதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் ஓடுகள் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இதே போல் அருகில் ஜான்பால் என்பவரின் வீட்டின் மேல்புறத்தில் இருந்த ஓடுகள் இடிந்து விழுந்தது. இதனால் இரண்டு வீடுகளும் சேதமடைந்ததை அடுத்து வருவாய்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மிகவும் வறுமையில் உள்ள நிலையில் தாங்கள் வீடு இடிந்து விட்டதால் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும், அரசு வீடு வழங்கிட வேண்டும் என்று ஆலீஸ் சோபியா ராணி அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- *திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த சிவ சக்தி விநாயகர் திருக்கோயிலில் ஆண்டாள் நகர்வள புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலமாக சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று ஆண்டாளுக்கு நான்காம் ஆண்டு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்திருந்த ஆண்டாளுக்கு ஆபரணங்கள் அணிவித்து கிரீடம் வைத்து வண்ணமலர் மாலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆண்டாளுக்கு தீபம் காட்டப்பட்டு கற்பூரம் சுற்றி புறப்பாடு தொடங்கியது பக்தர்கள் சப்பரத்தை இழுத்துச் செல்ல பெண்கள் சீர் வரிசைகளுடன் திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலம் சென்றனர் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆண்டாளை வழிநடக பக்தர்கள் தரிசனம் செய்தனர் பின்னர் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று புறப்பாடு நிறைவு பெற்றது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்து சென்றனர்1