40 அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டிகளை அவளைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி துவங்கி வைத்தார். திண்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் கேஎஃப்சி பால் பந்தாட்ட கழகம் சார்பில் பொங்கல் விழாவினை முன்னிட்டு 14 ஆம் ஆண்டு ஐவர் கால்பந்தாட்ட மாநில போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார். முதல் போட்டியில் திண்டுக்கல் எஸ் டி எஸ் ஏ அணியும், சென்னை ஜேப்பியார் டர்ப் அணியும் மோதின. திண்டுக்கல் மதுரை சென்னை நாசரேத் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து 40 அணிகள் ஐவர் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் மூன்று நாட்கள் தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகின்றது. வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூபாய் 30,000 20,000 10,000 வழங்கப்பட உள்ளது 15 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கும் போட்டியில் சுழற் கோப்பைகளும் முதல் பரிசாக ரூபாய் ஐந்தாயிரம் இரண்டாவது பரிசாக ரூபாய் 3000 வழங்கப்பட உள்ளன. நடுவர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் போட்டிகளை கண்டு களித்தனர்.

- மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது1
- வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது1
- நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டி நிறைந்து வழிந்து ஓடும் சோத்துப்பாறை அணை. அணை நிறைந்து மீண்டும் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 20 நாட்களாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 125 அடியாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 123 அடியிலிருந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வழிந்து ஓடுகிறது. தற்பொழுது அணையின் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ள நிலையில் அனைத்து நீர் வரத்து 25 கனஅடியாகவும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 25 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடி உள்ளது. மீண்டும் அணைக்கு நீர் வரத்து தொடங்கி சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணையிலிருந்து நீர் வழிந்தோடி கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- மணப்பாறை வழியாக அடாத மழையிலும் விடாமல் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தை மாதம் தொடங்கும் முன்னர் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பழனி முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து பின்னர் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதே போல் இன்னும் சில தினங்களில் தை மாதம் தொடங்க உள்ள நிலையில் பலரும் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை வழியாக திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், மாற்றுத் திறனாளிகளும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்களின் பாதயாத்திரையில் கவனம் செலுத்தி முருகனை காண பக்தி பரவசத்துடன் மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர். அதிக அளவிலானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.1
- மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் பெரியகுளம் பகுதியில் இன்று தேனி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் இருந்து பொங்கல் பானையை சுமந்து நகர் பகுதியில் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்பொழுதும் கிடையாது அமைச்சர் பேச்சு திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது என்றும், தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் என்றும், தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவிக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.1