logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் தலைவரும் நாடார் பேரவையின் மாநில தலைவருமான திரு எர்ணாவூர் நாராயணன் அவர்களது 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன. மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, நாடார் பேரவையின் மாவட்ட தலைவர் அருள் சுரேஷ்குமார், மாவட்ட பொருளாளர் சுப்பையா, சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப் உதயசூரியன், மாவட்ட பிரதிநிதி சண்முக குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெய கசமாடன், மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகரச் செயலாளர் முத்து செல்வம், மாநகர நிர்வாகிகள் செல்வராஜ், காமராஜ், சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 hr ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
1 hr ago
23bf8559-e838-47bf-b291-95a53e7cae6f

சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் தலைவரும் நாடார் பேரவையின் மாநில தலைவருமான திரு எர்ணாவூர் நாராயணன் அவர்களது 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன. மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, நாடார் பேரவையின் மாவட்ட தலைவர் அருள் சுரேஷ்குமார், மாவட்ட பொருளாளர் சுப்பையா, சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப் உதயசூரியன், மாவட்ட பிரதிநிதி சண்முக குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெய கசமாடன், மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகரச் செயலாளர் முத்து செல்வம், மாநகர நிர்வாகிகள் செல்வராஜ், காமராஜ், சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள நவகைலாய திருக்கோயிலின் ஆறாவது ஸ்தலமும், சனி ஸ்தலமுமான கைலாசநாதர் சிவகாமியம்மன் கோவிலில், 78 ஆண்டுகளாக ஓடாமல் பழுதடைந்திருந்த திருத்தேருக்கு பதிலாக புதிய தேர் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மர சிற்பங்களுடன் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்த பழைய திருத்தேர், நீண்டகாலமாக வெயில் மற்றும் மழையால் சிதிலமடைந்து வீணாகிவிட்டது. இந்த திருத்தேரை சீரமைக்க அல்லது புதிதாகக் கட்ட வேண்டும் என திருக்கோவில் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் நன்கொடையாளர்களின் உதவியுடன் புதிய தேர் கட்டும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. வரவிருக்கும் சித்திரை மாதத்தில் நடைபெற உள்ள கைலாசநாதர் திருக்கோயில் சித்திரை திருவிழாவில், ஐந்து நிலைகள் மற்றும் 51 அடி உயரம் கொண்ட இந்த புதிய திருத்தேர் தேரோடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், புதிய தேர் வேலைக்கான ஒரு நாள் 2025 ஆம் ஆண்டு மார்ச் 5, வியாழக்கிழமை (மாசி 21) அன்று குறிக்கப்பட்டுள்ளது. தேர் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெறுவதால், புதிய தேர் கோவிலை வலம் வருவதை காண பக்தர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள நவகைலாய திருக்கோயிலின் ஆறாவது ஸ்தலமும், சனி ஸ்தலமுமான கைலாசநாதர் சிவகாமியம்மன் கோவிலில், 78 ஆண்டுகளாக ஓடாமல் பழுதடைந்திருந்த திருத்தேருக்கு பதிலாக புதிய தேர் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மர சிற்பங்களுடன் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்த பழைய திருத்தேர், நீண்டகாலமாக வெயில் மற்றும் மழையால் சிதிலமடைந்து வீணாகிவிட்டது.

இந்த திருத்தேரை சீரமைக்க அல்லது புதிதாகக் கட்ட வேண்டும் என திருக்கோவில் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் நன்கொடையாளர்களின் உதவியுடன் புதிய தேர் கட்டும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

வரவிருக்கும் சித்திரை மாதத்தில் நடைபெற உள்ள கைலாசநாதர் திருக்கோயில் சித்திரை திருவிழாவில், ஐந்து நிலைகள் மற்றும் 51 அடி உயரம் கொண்ட இந்த புதிய திருத்தேர் தேரோடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், புதிய தேர் வேலைக்கான ஒரு நாள் 2025 ஆம் ஆண்டு மார்ச் 5, வியாழக்கிழமை (மாசி 21) அன்று குறிக்கப்பட்டுள்ளது.

தேர் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெறுவதால், புதிய தேர் கோவிலை வலம் வருவதை காண பக்தர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் மரம் பராமரிப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    1
    தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் மரம் பராமரிப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    49 min ago
  • திருவாடானை ஸ்ரீ ஆதிரெத்னேஸ்வரர் ஆலயத்தின் பத்தாம் திருநாளை முன்னிட்டு பால்குடம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் VK ராஜுவ் MLA சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
    1
    திருவாடானை ஸ்ரீ ஆதிரெத்னேஸ்வரர் ஆலயத்தின் பத்தாம் திருநாளை முன்னிட்டு பால்குடம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் VK ராஜுவ் MLA சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer இராமநாதபுரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோயிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 31) காலை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா”, “கோபாலா” என பக்தி முழக்கங்களை எழுப்பியவாறே தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
    1
    மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோயிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 31) காலை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா”, “கோபாலா” என பக்தி முழக்கங்களை எழுப்பியவாறே தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    4 hrs ago
  • சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மேலூர் - காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுப் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

மேலூர் - காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுப் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஒருவருக்குக் கேட்கப்படாமல் உதவி செய்யப்படும்போது, அந்த உதவியின் உண்மையான மதிப்பும் அதன் முக்கியத்துவமும் அவருக்குத் தெரியாமல் போய்விடும்.
    1
    ஒருவருக்குக் கேட்கப்படாமல் உதவி செய்யப்படும்போது, அந்த உதவியின் உண்மையான மதிப்பும் அதன் முக்கியத்துவமும் அவருக்குத் தெரியாமல் போய்விடும்.
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தூத்துக்குடியில் உள்ள பரிசுத்த பனிமய மாதா திருத்தல பேராலயத்தில் இருந்து ஒரு மாபெரும் ஜெபமாலை பவனி நடைபெற்றது. தேவமாதாவின் வணக்கமாதம் மற்றும் மரியாவின் இயக்கத்தின் 35வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த பவனி, பரிசுத்த பனிமய மாதா தங்கத்தேர் வலம் வரும் ரத வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திச் சென்றனர். உலக சமாதானத்திற்காகவும், இயேசு மரிய திரு இருதயங்களுக்கு எதிராக செய்யப்படும் நிந்தனைகளுக்கு பரிகாரமாகவும், மக்களின் வாழ்வாதாரம் செழிக்கவும் இந்த ஜெபமாலை பவனி நடத்தப்பட்டது. இந்த விழாவில் மரியாவின் இயக்கத்தினர், பரிசுத்த பனிமய மாதா திருத்தல பேராலய இறைமக்கள், அருள் சகோதரர்கள் மற்றும் அருள் சகோதரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். பனிமயமாதா பங்கு தந்தை ஜான் செல்வம் சுவாமிகள் மற்றும் மரியாதையை இயக்கத்தினர் இணைந்து இந்த பவனி விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
    1
    தூத்துக்குடியில் உள்ள பரிசுத்த பனிமய மாதா திருத்தல பேராலயத்தில் இருந்து ஒரு மாபெரும் ஜெபமாலை பவனி நடைபெற்றது. தேவமாதாவின் வணக்கமாதம் மற்றும் மரியாவின் இயக்கத்தின் 35வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த பவனி, பரிசுத்த பனிமய மாதா தங்கத்தேர் வலம் வரும் ரத வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திச் சென்றனர்.

உலக சமாதானத்திற்காகவும், இயேசு மரிய திரு இருதயங்களுக்கு எதிராக செய்யப்படும் நிந்தனைகளுக்கு பரிகாரமாகவும், மக்களின் வாழ்வாதாரம் செழிக்கவும் இந்த ஜெபமாலை பவனி நடத்தப்பட்டது. இந்த விழாவில் மரியாவின் இயக்கத்தினர், பரிசுத்த பனிமய மாதா திருத்தல பேராலய இறைமக்கள், அருள் சகோதரர்கள் மற்றும் அருள் சகோதரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். பனிமயமாதா பங்கு தந்தை ஜான் செல்வம் சுவாமிகள் மற்றும் மரியாதையை இயக்கத்தினர் இணைந்து இந்த பவனி விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன் விளை கிராமத்தில், காதல் திருமணத்திற்கு உதவியதாகக் கூறி இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. ஸ்ரீதரின் குடும்பத்தினர், மேலலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். ஸ்ரீதரின் மகள் சௌமியா, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சௌமியா மற்றும் தினேஷின் காதலுக்கு பரமசிவன் குடும்பம் உதவியதாகக் கூறி இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன் விளை கிராமத்தில், காதல் திருமணத்திற்கு உதவியதாகக் கூறி இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. ஸ்ரீதரின் குடும்பத்தினர், மேலலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். ஸ்ரீதரின் மகள் சௌமியா, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சௌமியா மற்றும் தினேஷின் காதலுக்கு பரமசிவன் குடும்பம் உதவியதாகக் கூறி இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.