Shuru
Apke Nagar Ki App…
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போவது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். கோடை வெயில் காரணமாக ஜூன் 1-க்கு பதில் ஜூன் 5-ஆம் தேதி திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
NAMADHU ARASU(Krishna M Com)
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போவது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். கோடை வெயில் காரணமாக ஜூன் 1-க்கு பதில் ஜூன் 5-ஆம் தேதி திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அல்லியாளமங்கலம் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்ட அம்மன், ஊஞ்சல் தாலாட்டு உற்சவத்தில் அருள்பாலித்தார். இதில் அல்லியாளமங்கலம், போளூர் உட்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மிட்டாளம் ஊராட்சியைச் சேர்ந்த ராணுவ வீரர், பாகிஸ்தான் தீவிரவாதிகளை துப்பாக்கிச்சூடு நடத்தி வீழ்த்தியதற்காக ஜனாதிபதியின் வீர தீர விருதை பெற்றார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு ஆம்பூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மேளதாளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ராய நல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி சார்பில் இலவச மருத்துவ மற்றும் உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இதில், இதய நோய் நிபுணர்கள் கலந்துகொண்டனர். பெற்றோரை இழந்த சில மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு அழுதது காண்போரை நெகிழ வைத்தது.1
- கிருஷ்ணகிரி பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் வாழ்வை மாற்றும் வேல்மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு நடைபெற்றது. வேல்மாறல் சேவா அறக்கட்டளைத் தலைவர் விஜயகுமார் வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டை நடத்தினார். மாலை மற்றும் அர்த்தஜாம பூஜைகளும் அங்கே செய்யப்பட்டன.1
- தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த தடிக்கல் கிராமத்தில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ஒரு வாலிபர் உயிரிழந்தார். இதனால் கோபமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட நீச்சல் பயிற்சி முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.1
- தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள புகழ்பெற்ற வாராந்திர வெற்றிலை சந்தையில் நேற்று ஒரே நாளில் ₹10 லட்சத்திற்கு மேல் வெற்றிலை விற்பனையானது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வந்த விவசாயிகள், வியாபாரிகள் உற்சாகமாக பங்கேற்றனர். 128 வெற்றிலைக் கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை ₹12,000 முதல் ₹16,000 வரை விற்பனையாகி, விவசாயிகளுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது.1
- கோடை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக எண்ணெய் மசாஜ் செய்து, அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் இயற்கை அழகையும், தண்ணீர் கொட்டும் அருவிகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.1