மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பூதமங்கலம் ஊராட்சி, மம்மாணிபட்டி கிராமத்தில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் திருமதி செல்வி ரமணன் அவர்களை நேரில் சந்தித்து, அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று வருகிறார்களா என்பதையும், ஆடுகளுக்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவன வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் MGNREGS திட்டத்தின் கீழ் ஆட்டுக் கொட்டகை அமைக்கும் வாய்ப்பு குறித்து தேவையான ஆலோசனைகளை வழங்கி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூபாய் 1000 பெறுவதை உறுதி செய்து, அரசுத் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பூதமங்கலம் ஊராட்சியில், வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூபாய் 45,000 மானியத்துடன் ரூபாய் 75,000 மதிப்பிலான பவர் டில்லர் பெற்று அதனை பயன்படுத்தி விவசாயம் செய்து வருவதை பார்வையிட்டார். மேலும், மண்வளத்தை ஆய்வு செய்து வேளாண் அலுவலர்களின் ஆலோசனைகளை பெற்று பயிரிடுதல் மூலம் நல்ல மகசூல் பெறவும், ஒருங்கிணைந்த ஆடு வளர்ப்பு மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். பின்னர் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மணப்பச்சேரி ஊராட்சி எம்.வெள்ளாளபட்டி ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் நடவு செய்து வளர்க்கப்பட்டு வரும் செடிகளின் ரகங்கள் மற்றும் செடிகளின் விற்பனை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பண்ணையில் புளி, பூவரசு, பாதாம், நீர் மருத மரம், வாகை, புங்கன், மகிழம் உள்ளிட்ட 10 ஆயிரம் மரக்கன்றுகளை மண் மற்றும் இயற்கை எருவுடன் பாலிதீன் கவர்களில் நிரப்பி, அவற்றை தினமும் ஏராளமான பெண்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஊதியம் தங்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மணப்பச்சேரி ஊராட்சி எம்.வெள்ளாளபட்டி நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார். தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் நடவு செய்து வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் பின்னர் மணப்பச்சேரி ஊராட்சி சாலையோரங்களில் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மணப்பச்சேரி ஊராட்சி எம்.வெள்ளாளபட்டி நடுநிலைப் பள்ளியில் பயிலும் 7 வகுப்பு மாணவ மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், வாசித்தல்,எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன்கள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மணப்பச்சேரி ஊராட்சி எம்.வெள்ளாளபட்டி நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,மேலப்பட்டி கிராமத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார மீன் வளர்ப்பு அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அலங்கார மீன்களை ஆன்லைன் வழியாக விற்பனை செய்ய சமூக வலைத்தளங்கள் மற்றும் e-Commerce தளங்களை பயன்படுத்தி வணிகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும் மாநிலம் முழுவதும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் சந்தை வாய்ப்புகளை அதிகரித்து வருமானத்தை உயர்த்திக் கொள்ளலாம் என அறிவுரை வழங்கினார். பின்னர் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பொட்டப்பட்டி ஊராட்சியில் வடக்கு செம்மன் செட்டிகுளத்தின் வரத்துக்கால்வாய் ஆழப்படுத்தும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்டப்பட்டி கிராமத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூபாய் 12,000 மானிய உதவியுடன் தேவையான இடுபொருட்கள் மற்றும் 110 தென்னங்கன்றுகளை பெற்று நடவு செய்து, ரூபாய் 1,75,000 மானியத்தில் சொட்டு நீர்ப்பாசன அமைப்பை நிறுவி சாகுபடி செய்து வருவதைநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்டப்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் 60,000 அரசு மானியத்தில் ரூபாய் 1.50 லட்சம் மதிப்பீட்டில் பயிர் சாகுபடிக்காக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பந்தல் அமைப்பினை பார்வையிட்டார். மேலும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், எட்டிமங்கலம் கிராமத்தில் கனிமவள நிதியின் கீழ் ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய போர்வெல் மற்றும் குளியல் தொட்டியை பார்வையிட்டார். இந்த ஆய்வுகளின் போது உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருமதி.விசாலாட்சி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.சாந்தி அவர்கள், துணை இயக்குநர், தோட்டக்கலைத்துறை திருமதி.பிரபா அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

- 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி மதுரை, பிப்.18- மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார். இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது: “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார். மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.2
- Post by Saba Saba1
- மதுரையில் பந்தல்குடி பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் டாக்டர் சரவணனை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர். ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய திமுக மீது குற்றச்சாட்டு. தங்கள் கோரிக்கைகளை பொதுச் செயலாளருக்கு எடுத்துச் சென்று தீர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பந்தல்குடி பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர், பந்தல்குடி வாய்கால் ஓரங்களிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வரக்கூடிய இம்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும், சமீபத்தில் திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய விளம்பர நிகழ்வில் கூட இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை, இதனையடுத்து ஏராளமான ஆதிதிராவிட மக்கள் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணனை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மற்றும் கஷ்டங்களை தெரிவித்தனர், ஒவ்வொருவரின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட டாக்டர் பா.சரவணன் பந்தல்குடி பகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அம்மக்கள் திமுக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், டாக்டர் சரவணனை சந்தித்து பேசியது மன நிறைவை தருவதாகவும் தெரிவித்தனர், மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.1
- வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்1
- திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இதனால் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்3
- சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை, பிப்.18- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.3