கிராம கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை* *நீதிமன்ற உத்தரவை பெற்று கோயிலை பராமரிப்பு பணிக்காக இடித்த நிலையில் மற்றொரு தரப்பினர் திரண்டதால் இருதரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்டம் தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இரு சமுதாய கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோயிலை நிர்வாகிப்பது குறித்து இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வந்தது . தற்போது கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்று உத்தரவைப் பெற்று வந்து ஜேசிபி வைத்து கோயிலை இடிக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது . இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பராமரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல் அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை* *நீதிமன்ற உத்தரவை பெற்று கோயிலை பராமரிப்பு பணிக்காக இடித்த நிலையில் மற்றொரு தரப்பினர் திரண்டதால் இருதரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்டம் தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இரு சமுதாய கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோயிலை நிர்வாகிப்பது குறித்து இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வந்தது . தற்போது கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்று உத்தரவைப் பெற்று வந்து ஜேசிபி வைத்து கோயிலை இடிக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது . இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பராமரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல் அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திருச்சி, பஞ்சபூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கோரி, ஆகாஷின் உறவினர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல சமுதாய அமைப்புகள் இணைந்து மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தமிழின வேந்தர் பி. ஜான் பாண்டியன் போராட்டக் களத்திற்குச் சென்று தனது ஆதரவையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு நீடித்து வருகிறது.1
- Post by அன்பரசு1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை வாசலில் வீற்றிருக்கும் ஸ்ரீ கோட்டை காலபைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- கயத்தாறில் அஇஅதிமுக கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் ஆகிய இரண்டு ஓன்றிய செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறு மகேஷ்வரி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.இந்தஓன்றிய செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட அம்மா பேரவைச் துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜ் சிறப்புரையாற்றினார்.இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகோபால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய கழக செயலாளர் மந்திரமூர்த்தி, நகர கழக செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், துணை தலைவர்கள் தங்கத்துரை, சுரேஷ் கண்ணன், இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்ச்சாமி, முன்னாள் எம் எல் ஏக்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகனேசன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் குடியரசுபாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மகளிர் அணி செல்லத்தாய், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி மேற்கு , கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம். ஜி.ஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன், துறையூர் கணேசன், பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.4
- Post by ARULJEGAN1
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்துள்ளார் இவர் கெங்குவார்பட்டி பகுதியில் தனியார் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த கடையில் மதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஸ்டீபன் தனியார் மதுபான கடை நடத்தி வருகிறார் இவருக்கும் சுதாகர் என்பவர் அரசு மதுபான கடையில் பார் எடுத்து நடத்தி வருகிறார் இருவருக்கும் ஏற்கனவே இந்த பார் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து உள்ளது இதனால் மதன் என்பவர் சுதாகர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு உணவருந்த சென்றபோது அங்கு கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இருந்துள்ளார் இருவருக்கும் ஓர் ஆண்டுகளுக்கு முன்பு முன் விரோதம் இருந்து வந்ததாகவும் இதனால் இருவருக்கும் அங்கு வாக்குவாதம் நடைபெற்று உள்ளது அப்போது மதனை முருகன், விமல் ராஜ் சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர் இந்த பிரச்சனைக்கு காரணம் சுதாகர் என்று நினைத்து ஸ்டீபன் தூண்டுதலில் படி தனுஷ் மற்றும் இருவர் சேர்ந்து ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதனை தகவல் அறிந்த சுதாகர் அங்கு வாட்ச்மேன்னாக பணிபுரியும் ஞானசேகர் என்பவரை இருசக்கர வாகனத்தை கொடுத்து யார் பெற்றோர் குண்டு வீசியது என போய் பார்த்து வாய் என கூறியுள்ளார் அப்போது அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சீசன் அரவிந்த் சக்தி பிரகாஷ் ஆகிய நான்கு பேரும் வழிமறித்து ஞானசேகரன் தாக்கி அவர் வந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நான்கு பேரும் சுதாகர் ஓட்டலுக்கு வந்து சுதாகர் மற்றும் பிரபுவையும் தாக்கியுள்ளனர் இந்த இருதரப்பு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பிரபு ஞானசேகர் மதன் ஆகிய மூன்று பேரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஸ்டீபன் விமல் சந்தோஷ் தனுஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கெங்குவார்பட்டி பகுதியில் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சமும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது1
- வணக்கம் நண்பர்களே, என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.1
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம் புத்தூரில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாதக வேட்பாளர் கோரிக்கை1