Shuru
Apke Nagar Ki App…
நாகையில் சிலம்பாட்டம் பாடல் குடுந்தகட்டினை அதிமுக நகர செயலாளர் தங்க. கதிரவன் வெளியீட்டார்.
Chakravarthy
நாகையில் சிலம்பாட்டம் பாடல் குடுந்தகட்டினை அதிமுக நகர செயலாளர் தங்க. கதிரவன் வெளியீட்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- *சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த, பா.ஜ.க, மாநில இளைஞரணி தலைவர் சூர்யா உள்ளிட்ட, பா.ஜ.க,வினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சூர்யா மற்றும் பா.ஜ.க வினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் தமிழக பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் டி.ஆர்.தவமணி தலைமையில் தி.மு.க.,வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.1
- பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்பு அறுவடை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அறுவடைக்காக கரும்பு பயிரிட்டு வந்தனர். இந்நிலையில் ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, செமலாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- மணப்பாறை வழியாக அடாத மழையிலும் விடாமல் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தை மாதம் தொடங்கும் முன்னர் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பழனி முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து பின்னர் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதே போல் இன்னும் சில தினங்களில் தை மாதம் தொடங்க உள்ள நிலையில் பலரும் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை வழியாக திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், மாற்றுத் திறனாளிகளும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்களின் பாதயாத்திரையில் கவனம் செலுத்தி முருகனை காண பக்தி பரவசத்துடன் மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர். அதிக அளவிலானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.1
- திண்டுக்கல் பல இடங்களில் குண்டு குழியுமான தார் சாலைகள் உள்ளன அதில் ஈஸ்வரி ஸ்டோர்ஸ் அருகில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வப்போது டூவீலரில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர் கரூர் திருச்சியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் இதன் வழியாக வரும் முக்கிய சாலை1
- வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது1
- மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- *புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மரம் திரும்பிய பறவைகள் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று மரியாதை செலுத்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது* புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக புத்தாம்பூர் தென்னங்குடி மாரியம்மன் ஆர்ச்சிலிருந்து முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்து ஆசிரியர்களுக்கு சந்தன மாலை அணிவித்து ஊர்வலமாக அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வந்தடைந்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். பள்ளிப் பருவத்தில் அனுபவித்த சுவாரசிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மரம் திரும்பிய பறவைகள் என்ற தலைப்பில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று குத்து விளக்கேற்றி அனைவருக்கும் மேடையிலேயே பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி கௌரவித்து நினைவு பரிசாக கேடயம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்த அணைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பைட்: 1 பிரவீன்குமார் (தலைமைஆசிரியர்) பைட்:2 சந்திரசேகரன் (கணித ஆசிரியர்) பைட் : 3 வைதேகி (தமிழாசிரியர்) பைட் : 4 வினித்தா (முன்னாள் மாணவி) பைட் : 5 ஸ்ரீராம் சுந்தர் (முன்னாள் மாணவர்) பைட்: 6 சத்யா (முன்னாள் மாணவி)1