அன்னவாசல் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கா விட்டால் அபராதம் செயல் அலுவலர் தகவல் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழில்சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பைகளை ஈர கழிவு, உலர் கழிவு சுகாதார கழிவு, சிறப்பு கழிவு என 4 வகைகளாக தரம் பிரித்து, வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அக்டோபர் 1-ந்தேதி முதல் பொது மக்கள் குப்பை கழிவுகளை 4 வகைகளாக தரம் பிரித்து மட்டுமே வழங்க வேண்டும் அப்படி வழங்காத வர்களின் குப்பைகள் சேகரிக்கப் படமாட்டாது. திடக்கழிவு மேலாண்மை விதி 2026 தற்போது அமல் படுத்தப் பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்தால் குப்பைகளை தரம் பிரிக்காமல் அளித்தால் அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்னவாசல் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கா விட்டால் அபராதம் செயல் அலுவலர் தகவல் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழில்சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பைகளை ஈர கழிவு, உலர் கழிவு சுகாதார கழிவு, சிறப்பு கழிவு என 4 வகைகளாக தரம் பிரித்து, வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அக்டோபர் 1-ந்தேதி முதல் பொது மக்கள் குப்பை கழிவுகளை 4 வகைகளாக தரம் பிரித்து மட்டுமே வழங்க வேண்டும் அப்படி வழங்காத வர்களின் குப்பைகள் சேகரிக்கப் படமாட்டாது. திடக்கழிவு மேலாண்மை விதி 2026 தற்போது அமல் படுத்தப் பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்தால் குப்பைகளை தரம் பிரிக்காமல் அளித்தால் அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி கேட்டுக் கொண்டுள்ளார்.
- மணப்பாறையில் சீட்டு நிறுவன விவகாரத்தில் வாலிபர் தற்கொலை: பங்குதாரர்களைக் கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீட்டு நிறுவனப் பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவத்தின் பின்னணி: மணப்பாறை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் சீட்டு நிறுவனம் (Chit Fund) ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நொச்சிமேட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் விக்னேஸ்வரன் திடீரெனத் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டார். சீட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் அதன் பங்குதாரர்களுடன் நிலவிய பிரச்சனை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சாலை மறியல் போராட்டம்: விக்னேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விக்னேஸ்வரனின் தற்கொலைக்குக் காரணமான சீட்டு நிறுவனப் பங்குதாரர்களை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவமனை முன்புள்ள மணப்பாறை - விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் உறவினர்கள் திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு காவல்துறை பேச்சுவார்ததை இந்தத் திடீர் போராட்டத்தால் மணப்பாறை - விராலிமலை நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையேற்று உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4
- கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து கொண்டாடிய பெண்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முள்ளால் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும்,கும்மி அடித்தும் விழாவில் கலந்து கொண்டனர்.1
- ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.1
- பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: மணப்பாறையில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உற்சாகமாக ஊர்வலம் நடைபெற்றது. மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், ராஜகிரி வழியாக வந்து காமராஜர் சிலையைச் சுற்றி, மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, "பேரறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!", "டாக்டர் கலைஞரின் புகழ் ஓங்குக!", "முதலமைச்சர் தளபதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" மற்றும் "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகழ் ஓங்குக!" உள்ளிட்ட பல்வேறு கழகக் கோஷங்களைத் தொண்டர்கள் விண்ணதிர எழுப்பினர். பேருந்து நிலையத்தை அடைந்த ஊர்வலத்தினர், அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்புறம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்குப் பள்ளித் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுடன் இணைந்து கோஷங்களை எழுப்பினார். இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- முசிறி அறிக்கை காட்டு பதில் பைக் சைக்கிள் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே காட்டுப்புத்தூர் அருகே பைக் –சைக்கிள் மோதல் இருவர் உயிரிழப்பு திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் அருகே பைக் மற்றும் சைக்கிளும் நேருக்கு நேர் நேற்று இரவு மோதி கொண்டதில் இருவரும் உயிரிழந்தனர். காட்டுப்புத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (50). விவசாய வேலை செய்து வந்தவர் நேற்று இரவு வளையப்பட்டிக்கு தனது பைக்கில் சென்றுவிட்டு, காட்டுப்புத்தூர் நோக்கி வந்துள்ளார், இதேபோல், குளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணேசன் (52) கூலி வேலை செய்து வரும் இவர் காட்டுப்புத்தூர் சென்று விட்டு தனது சைக்கிளில் குளத்துப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக்கும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது .விபத்தில் காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சேர்த்தனர் , அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து காட்டுப்புத்தூர் போலீஸார் சம்பவயிடத்திற்க்கு விரைந்து சென்று, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.1