Shuru
Apke Nagar Ki App…
கல்வராயன் மலை சேராப்பட்டு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேராப்பட்டு நல்ல மேய்ப்பன் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் இன்று சிறப்பாகத் தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 262 மாணவ, மாணவிகள் தினசரி பயன்பெற உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக ஒன்றியச் செயலாளர் K.S. விக்ரம், ஊராட்சி மன்றத் தலைவர் T. குப்புசாமி, கழக நிர்வாகிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபெலேஷ் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இக்காலை உணவுத் திட்டம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
M.P.Palani Samy
கல்வராயன் மலை சேராப்பட்டு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேராப்பட்டு நல்ல மேய்ப்பன் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் இன்று சிறப்பாகத் தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 262 மாணவ, மாணவிகள் தினசரி பயன்பெற உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக ஒன்றியச் செயலாளர் K.S. விக்ரம், ஊராட்சி மன்றத் தலைவர் T. குப்புசாமி, கழக நிர்வாகிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபெலேஷ் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இக்காலை உணவுத் திட்டம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் மாவட்ட திமுகவின் தொ மு ச சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து, சேலம் ஸ்டேட் தலைமை வங்கி அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் சேலத்தில் குடிநீரை தனியாருக்கு தாரை வார்த்த தமிழக அரசு தன் முடிவை திரும்ப பெற வேண்டும், 200 மாணவர் அரசு விடுதிகளை தனியாருக்கு விடும் முடிவை கைவிட வேண்டும், தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை கைவிட வேண்டும், மாநில உரிமைகளை பறிக்ககூடாது, என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.1
- கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூரில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படும் விவசாய சங்க நிர்வாகி ஈசன் முருகசாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருவதாகவும், விவசாயிகளுக்கு கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஊழியர்கள் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவு ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் ஈசன் முருகசாமியின் பேச்சை காவல்துறை முழுமையாக ஆய்வு செய்து, குற்றத்திற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில்,64 கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 263 ரேஷன் கடை ஊழியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்1
- ஜோய் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ மருத்துவமுகாமினை தொடங்கி வைத்து பத்திரிகை சந்திப்பு தருமபுரி மாவட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட செயலாளர் தகடூர் கார்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மருத்துவ முகாமினை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இம்முகாமினை நிறுவனரும் மாநில தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு தேவையான கையுறை,சனுக்கு, பாண்டல், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியவசியமான உபகரணங்களை வழங்கினார். அதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினார். பின்னர் தருமபுரி மாவட்ட அலுவலகத்திற்கு சென்ற அவர் புதிய கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் நெல்லை ஜீவா மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் குளேபால் பூபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாநில இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மண்டல தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- அரியலூர் தொழிற்சங்கம் முன்னேற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்பின்படி, மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து அரியலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- பட்டப்பகலில் பட்டாக்கத்தி அட்டகாசம்... அக்கா, மருமகனை விரட்டிய தாய் மாமன் – பொதுமக்கள் அதிர்ச்சி தருமபுரியில் பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் பட்டாக்கத்தியை காட்டி அக்கா மற்றும் அவரது மகனை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சபரிநாதன் என்பவர் பட்டாக்கத்தியுடன் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த தனது அக்கா மற்றும் அவரது மகனை குறிவைத்து பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். பின்னர் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சபரிநாதன், கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியை வீசியபடி அக்கா மற்றும் அவரது மகனை விரட்டியதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் பட்டாக்கத்தியுடன் ஒருவர் மிரட்டலில் ஈடுபட்டதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். என்ன நடக்கிறது என்று புரியாமல் பொதுமக்கள் அச்சத்துடன் விலகி நின்ற நிலையில், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சபரிநாதனின் கையில் இருந்த பட்டாக்கத்தியை போலீசார் பிடுங்கி பறிமுதல் செய்தனர். பின்னர் சபரிநாதனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர் இதில் சபரிநாதனின் தந்தை சிவா தங்களுக்கு சொந்தமான சொத்தை 40 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளார் அதில் மகள் லலிதா இரண்டு லட்சம் பணம் கேட்டுள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லலிதாவின் தம்பி சபரிநாதன் எனது அக்கா மற்றும் அவரது மகன் பிரதீப்பை கொலை செய்வதாக கூரி பட்டாக்கத்தியுடன் வந்து மிரட்டியது தெரியவந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் பட்டப்பகலிலேயே பட்டாக்கத்தியை காட்டி அக்கா மற்றும் அவரது மகனை விரட்டிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது1
- காட்டுப்புத்தூர் பேருந்து நிலையத்தில் சிங்கப்பின் சிறப்பு அதிரடிப்படை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பெண்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை சிங்கப்பெண் அதிரடி படை படையினர் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்1
- லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோய் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ மருத்துவமுகாமினை தொடங்கி வைத்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோய் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ மருத்துவமுகாமினை தொடங்கி வைத்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். தருமபுரி மாவட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட செயலாளர் தகடூர் கார்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மருத்துவ முகாமினை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இம்முகாமினை நிறுவனரும் மாநில தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். பின்னர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு தேவையான கையுறை,சனுக்கு, பாண்டல், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியவசியமான உபகரணங்களை வழங்கினார். அதனையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினார். பின்னர் தருமபுரி மாவட்ட அலுவலகத்திற்கு சென்ற அவர் புதிய கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் நெல்லை ஜீவா மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் குளேபால் பூபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாநில இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மண்டல தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- காலை உணவு திட்டத்தை தொடங்க வைத்து மாணவனுடன் உணவு அருந்திய சட்டமன்ற உறுப்பினர் அரியலூர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மானவர்களுடன் சேர்ந்து உணவு அருந்திய ஜெயங்கொண்டம் பாமக எம் எல் ஏ* *6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தொடக்கம்; மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய ஜெயங்கொண்டம் பாமக எம் எல் ஏ க.வைத்திலிங்கம்* தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜயால் பெருந்தலைவர் காமாசர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதியில் இன்று முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடக்கமாக ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் பாமக எம்எல்ஏ க.வைத்திலிங்கம் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். இன்று முதல் மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .இதேபோல் அரியலூர் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மதுரை போன்று மீன்சுருட்டி, தாபமூர், ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் 2 லிட்டர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.1
- தருமபுரியில் கயல் குழும நிர்வாக இயக்குனர் பிறந்தநாள் விழா – 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கயல் குழுமம் மற்றும் வெங்கடாசலம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் இல.வெ. அறிவழகனின் 39-வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் சமூக நலப் பணிகள் சிறப்பாக நடைபெற்றன. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சமூகத்தின் சுகாதாரம் மற்றும் தூய்மையைப் பாதுகாப்பதில் அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கயல் குழுமம் மற்றும் வெங்கடாசலம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் இல.வெ. அறிவழகன் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டிய அவர், பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார். தங்களது அன்றாட பணிகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, நகரங்கள் மற்றும் கிராமங்களின் தூய்மையைப் பாதுகாத்து வரும் பணியாளர்களுக்கு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்வு, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தை சமூக நலத்துடன் இணைத்து, தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு பங்கேற்றவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற சமூக நலப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்களின் சேவையை பொதுமக்கள் மதித்து அவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள், டாக்டர் இல.வெ. அறிவழகனுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் நந்தகுமார், ரவிச்சந்திரன் மாவட்ட இணைச்செயலாளர் கார்த்திகேயன், செய்தி தொடர்பாளர் ராமதாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சிங்காரவேல், ரவி, கண்ணையன், கிருஷ்ணன், ராஜபாண்டி, விசேல் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, தூய்மை பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.1