Shuru
Apke Nagar Ki App…
கரூர், செட்டிபாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில், இன்று (10/1/26)பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள செங்கரும்பு, வேட்டி -சேலை, ரொக்கம் -3000, வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் சுப்பிரமணி, பொறுப்பாளர் செல்வராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
R. Suresh
கரூர், செட்டிபாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில், இன்று (10/1/26)பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள செங்கரும்பு, வேட்டி -சேலை, ரொக்கம் -3000, வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சையம்மாள் சுப்பிரமணி, பொறுப்பாளர் செல்வராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
More news from Karur and nearby areas
- கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்2
- தமிழ்நாட்டில் சில இடங்களில் 10/01/26 மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அறிவிப்பு வெளியிடபட்டது போல திருச்செங்கோடு பகுதியில் லேசான மழை தூறல்கள் பெய்து வருகிறது1
- கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் அவர்களின் 94 வது நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன்,திமுக முன்னாள் நகர்மன்ற தலைவரும் நகர செயலாளருமான ஆர் நடேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் உள்ளிட்டவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆதவன் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி நினைவேந்தல் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.2
- தாடிக்கொம்புவில் காணக்கிடைக்காத கண்கொள்ளா காணொளி காட்சி திண்டுக்கல் மாவட்டம்& வட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக அலங்காரம் பூஜைகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்2
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியநல்லூர் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக குண்டடம் ஒன்றியம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது அதன் பின்னர் பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்1
- திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.3
- தாராபுரத்தை சேர்ந்த சமூக சேவகருக்கு சேவை நாயகன் விருது ஜன.9 கோவையில் பிரமாண்ட ஹோட்டலில் சாதனையாளர்களுக்கு (வாகை) விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பிரபல திரைபட நடிகர் வையாபுரி அவர்கள் கலந்து கொண்டு ஒவ் ஒரு துறையிலும் சாதித்தவர்களுக்கு பாராட்டி அவர்களை கௌரிவித்து அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது விழாவில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சமூக சேவகரும் தினதளம் பத்திரிக்கை நிருபருமான ரஜினிகுமார் அவர்களின் 15 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி 2026 ஆம் ஆண்டின் சேவை நாயகன் விருது வழங்கப்பட்டது அவர் இதற்கு முன் சமூக சேவகர் சேவை செம்மல் அண்ணல் அம்பேத்கர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது2
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் தமிழர் மரபு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜம்மாள் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். திரைப்பட நடிகர்கள் பிக் பாஸ் புகழ் ஆரி, அதுல்யா ரவி, பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் விக்னேஷ், நாட்டுப்புற கலை பாடல் பாடகர் அந்தோணி தாசன் கலைக்குழு உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சுமார் 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழர் மரபு சமத்துவ பொங்கல் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியினை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே எஸ் ஆர் கல்வி நிறுவன அதிகாரிகள் முதல்வர்கள் ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்1