logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் படகு சவாரி மீண்டும் செயல்படுத்த சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக திருமூர்த்தி மலை உள்ளது. திருமூர்த்தி மலை சுற்றுலா பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி, மற்றும் திருமூர்த்தி அணை போன்ற பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். திருமூர்த்தி மலை அணைப்பகுதியில் செயல்பட்டு வந்த படகு இல்லம் பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. எனவே திருமூர்த்தி அணை பகுதியில் படகு இல்லம் மீண்டும் செயல்படுத்தல் தொடர்பாக மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மண்டல மேலாளர் யுவராஜ் உள்ளிட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகளால் திருமூர்த்தி அணை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருமூர்த்தி அணை பகுதியில் மீண்டும் படகு இல்லம் செயல்படுத்தல் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக கூடுதலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், நீர்வளத்துறை ஆய்வு மாளிகையில் படகு இல்லம் செயல்படுத்தும் போது தொடர்புடைய துறைகளிடமிருந்து பெறவேண்டிய அனுமதிகள், படகு இல்லத்தின் மூலம் பெறப்படும் வருவாயில் பகிர்வு மேற்கொள்ளுதல், படகு இல்ல செயல்பாட்டில் திருமூர்த்தி மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில், திருமூர்த்தி மலைப்பகுதியில் படகு இல்லத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக ரூ: 80 லட்சம் திட்ட மதிப்பீட்டில் திட்ட கருத்துரு மாவட்ட கலெக்டர் மூலம் சுற்றுலாத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருமூர்த்தி அணை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஊட்டி மண்டல மேலாளர் யுவராஜ், உதவி செயற்பொறியாளர் குணசேகரன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன், உதவி பொறியாளர் ராமச்சந்திரன், தளி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவா, உதவி பேரூராட்சி தலைவர் செல்வம், திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு சுற்றுலா ஆர்வலர்கள் எஸ்.எம். டிராவல்ஸ் நாகராஜ், சத்தியம் பாபு, பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2 days ago
user_ராஜா உடுமலை செய்தியாளர்
ராஜா உடுமலை செய்தியாளர்
உடுமலைப்பேட்டை, திருப்பூர், தமிழ்நாடு•
2 days ago
b208b052-1328-4e3a-80d2-a0c5ece581f1

  • user_ராஜா உடுமலை செய்தியாளர்
    ராஜா உடுமலை செய்தியாளர்
    உடுமலைப்பேட்டை, திருப்பூர், தமிழ்நாடு
    வீடியோ பதிவு
    2 days ago
More news from Tiruppur and nearby areas
  • திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
    1
    திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
    user_Siva prakasam
    Siva prakasam
    Journalist Palladam, Tiruppur•
    1 hr ago
  • இது உண்மையா இல்லை AI யா.
    1
    இது உண்மையா இல்லை AI யா.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    2 hrs ago
  • இரவு வணக்கம்
    1
    இரவு வணக்கம்
    user_அன்பரசு
    அன்பரசு
    Sulur, Coimbatore•
    23 hrs ago
  • மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் பெரியகுளம் பகுதியில் இன்று தேனி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் இருந்து பொங்கல் பானையை சுமந்து நகர் பகுதியில் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
    1
    மோடி பொங்கல் விழா கொண்டாட்டம்
பெரியகுளம் பகுதியில் இன்று தேனி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் இருந்து பொங்கல் பானையை சுமந்து நகர் பகுதியில் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
    1
    11.01.2026_ADP_ MARATHAN SPORTS.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார்
பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த
தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.
    1
    கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார்  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.
    user_Theni
    Theni
    Local News Reporter Periyakulam, Theni•
    14 hrs ago
  • மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
    1
    மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா
திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • தெரிந்து கொள்ள வேண்டிய நூல்கள் பாட்டு மற்றும் பரதம் வடிவில்.
    1
    தெரிந்து கொள்ள வேண்டிய நூல்கள் பாட்டு மற்றும் பரதம் வடிவில்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.