மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 470 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு அறை தொடக்கம் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வரும் 17ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது இதற்காக சித்திரை வீதிகள் முழுவதும் அடைக்கப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக புது மண்டபத்தில் காவல் கட்டுப்பாட்டு வரை சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் மற்றும் நான்கு சித்திரை வீதிகள் 470 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது புதுமண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா அறையில் சுமார் 277 கேமராக்கள் இருந்து அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது இதில் 77 கேமராக்கள் frc எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா மூலம் பழைய குற்றவாளிகள் முக அமைப்புகளை உடனுக்குடன் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க உதவும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் 7 அதி நவீன பிடி இசட் எனப்படும் PTz அதிநவீன கண்காணிப்பு கேமரா 360 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டு கோவில் கோபுரங்கள் முதல் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளது மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்கு துல்லியமாக தெரியும் இந்த அதிநவீன கேமராவினால் கண்காணிப்பு பள்ளியில் ஈடுபடும் காவலர்களுக்கு வசதியாக இருக்கும் மேலும் கோவிலில் உள்புறம் 180 கேமரா மூலம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 470 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு அறை தொடக்கம் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வரும் 17ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது இதற்காக சித்திரை வீதிகள் முழுவதும் அடைக்கப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு
வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக புது மண்டபத்தில் காவல் கட்டுப்பாட்டு வரை சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் மற்றும் நான்கு சித்திரை வீதிகள் 470 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது புதுமண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா அறையில் சுமார் 277 கேமராக்கள் இருந்து
அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது இதில் 77 கேமராக்கள் frc எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா மூலம் பழைய குற்றவாளிகள் முக அமைப்புகளை உடனுக்குடன் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க உதவும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் 7 அதி நவீன பிடி இசட் எனப்படும் PTz அதிநவீன கண்காணிப்பு
கேமரா 360 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டு கோவில் கோபுரங்கள் முதல் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளது மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்கு துல்லியமாக தெரியும் இந்த அதிநவீன கேமராவினால் கண்காணிப்பு பள்ளியில் ஈடுபடும் காவலர்களுக்கு வசதியாக இருக்கும் மேலும் கோவிலில் உள்புறம் 180 கேமரா மூலம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது
- இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்1
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.1
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- என் ஊர் திருவிழா நாளைக்கு கும்பாபிஷேகம் விழா எல்லோரும் வாங்க1
- ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருவதை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் விருதுநகர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் சமூக நீதி மற்றும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மோடி அரசு செய்துவரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அதன் விளைவாக 69% இடஒதுக்கீட்டுக்கு உருவாகியுள்ள ஆபத்தைத் தடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவு சார்பில் செப்டம்பர் 17 அன்று மாலை 4 மணிக்குச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிரச்சார இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்த பிரச்சார இயக்கத்தை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், செயலாளர் நவீன் தீத் ஆல்வா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் மேலும் 2022-23-இல் நடைபெற்ற பாரத் ஜோடா நியாய யாத்திரையின் போதிருந்தே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மற்றும் ஆதிதிராவிட சமூகங்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவர்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலையை அறிந்துகொள்ளவும், இடஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களுக்குச் சமமான வாய்ப்பை அளிக்கவும் (Equal Distribution) நம்பகமான தரவுகள் அவசியமாகும். மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் ஜாதிவாரி தகவல்களை 'Open-ended' ஆகப் பதிவிடாமல், 'Drop-down Drop-box' முறையில் துல்லியமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஆகஸ்ட் 12 அன்று ராகுல் காந்தி கடிதம் எழுதியும் மத்திய அரசு அதை நிராகரித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசின் ஏமாற்று வேலையை கண்டித்துத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கீழ்க்கண்டவாறு கூட்டங்கள் நடைபெற உள்ளன என்றார். மேலும் மழை காலத்திற்குப் பிறகு 2027 ஜனவரி மாதத்தில் ராகுல் காந்தியைத் தமிழகத்திற்கு அழைத்துவந்து, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் பிரம்மாண்ட சமூக நீதி மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த நிலையில், அன்றைய தினம் திமுக செய்த அமளி காரணமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்றார். தமிழகத்தில் த.வெ.க தலைமையில் நேர்மையான, லஞ்சமற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு ஆச்சரியமளித்தாலும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் சட்டமன்றத்தில் ஆதரவு தரும் இடதுசாரிகள் மக்கள் மன்றத்தில் ஆதரவு தருவதை யோசிப்பது என்பதும் இடைத்தேர்தலில் தனித்து நிற்பதும் என்னை போன்றவர் களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது மேலும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விருப்பம் இருந்தாலும் அவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றார் எனவும் அவர்களின் முடிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் வரவிருக்கும் இடைத் தேர்தலில் த.வெ.க வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சித் தோழர்கள் தீவிரமாக பணியாற்று வார்கள் என்றார் மேலும் அரசு பேருந்துகளில் தவெக கட்சி கொடியின் வண்ணம் அடிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்பி அரசு பேருந்துகளில் வண்ணம் மாற்றப்பட்டு உள்ளதை பார்க்காமல் பேருந்தினுள் இருக்கக்கூடிய வசதிகளை பார்க்க வேண்டும் முந்தைய காலங்களில் குடை பிடித்து சென்ற காலம் இருக்கிறதும் அப்படியில்லாமல் பேருந்தின் வசதிகள் முன்னேற்றப்பட்டு இருக்கிறது என பார்க்க வேண்டும். என்றும் தெரிவித்தார்1
- பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பெரியகுளம் MLA தொடங்கி வைத்தார் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது வராக நதியில் கரைப்பதற்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தநூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலமாக எடுத்து வந்து வராக நதியில் கரைக்கப்பட்டது முன்னதாக இந்த ஊர்வலத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தொடங்கி வைத்தார் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட இந்து முன்னணி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்1