தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு! தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2022-ஆம் ஆண்டு முதல் சுற்றுலா அமைப்பாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு 'தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்' வழங்கப்பட்டு வருவதாகச் சுற்றுலாத்துறை இயக்குநர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 13 பிரிவுகளின் கீழ் விருதுகள்: சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயணபங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம், சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் என மொத்தம் 13 வகையான பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முறை: இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள் வருகின்ற 30.09.2026-க்குள் www.tntourismawards. com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்குத் தேனி மாவட்டச் சுற்றுலா அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 73977 15689 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு! தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 2022-ஆம் ஆண்டு முதல் சுற்றுலா அமைப்பாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு 'தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்' வழங்கப்பட்டு வருவதாகச் சுற்றுலாத்துறை இயக்குநர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 13 பிரிவுகளின் கீழ் விருதுகள்: சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயணபங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சிறப்பு சுற்றுலா நிறுவனம், சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் என மொத்தம் 13 வகையான பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முறை: இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள் வருகின்ற 30.09.2026-க்குள் www.tntourismawards. com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்குத் தேனி மாவட்டச் சுற்றுலா அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 73977 15689 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
- தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது சி ஐ டி யு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் மனது தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தியும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் சட்டங்களை கைவிட வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிற்சங்க தேனி மாவட்டம் மையம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்1
- வாடகை உயர்வு கேட்டு ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் தேனி மாவட்டத்தில் வாடகை உயர்வு கேட்டு ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் 3 நாள் அடையாள வேலை நிறுத்தம். தேனி மாவட்ட ஹைட்ராலிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வாடகை உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி 3 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, குறைந்தபட்ச வாடகை 1 மணி நேரத்திற்கு ரூ.1,500 வழங்க வேண்டும், 2 மணி நேரத்திற்குள்ளான வாடகையாக ரூ.4,500/ மற்றும் டிரைவர் படி ரூ. 800 சேர்த்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் இந்த வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர். ஆகஸ்ட் 26, 27 மற்றும் 28 என தேனி மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஜேசிபி, ஹிட்டாச்சி, கிரேன் உள்ளிட்ட ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் வாகன உரிமையாளர் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தேனி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களுடன் கருவேல்நாயக்கன்பட்டியில் ஒன்றினைந்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஹைட்ராலிக் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் மாவட்டத்தில் மட்டும் ஹைட்ராலிக் இயந்திரங்களான ஜேசிபி, கிரேன், ஹிட்டாச்சி என பல வகைகளில் 9 ஆயிரம் வாகனங்கள் உள்ளதாகவும், பாலம், கட்டிடங்கள் கட்டுவதற்கும் மட்டுமல்லாமல் விவசாய தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், வாகன உரிமையாளர் மட்டுமல்லாமல் ஆப்பரேட்டர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த விலை உயர்வை அரசு உட்பட அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கோடு மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். பேட்டி - காந்திராஜன் ( மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - ஹைட்ராலிக் உரிமையாளர்கள் கூட்டமைப்பு)1
- தேனி மாவட்டம் போடி நகரில் தேமுதிக சார்பில் கேப்டன் பிறந்தநாள் கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடி நகர தேமுதிக சார்பில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது பொதுமக்கள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது1
- 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்1
- வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 25 முதல் 28- ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வழியாக காலை 6 முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பிற்பகல் 4 மணிக்கு மேல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.1
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.1
- டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுபான கடைகளில் குவிந்த மது பிரியர்கள். தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு நாளை (ஆக.26) டாஸ்மார்க் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (ஆக.25) இரவில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மது பாட்டில்களை வாங்கி சென்றார்கள்.1
- தேனி கலெக்டர் அலுவலகத்தில் TNGEA சங்கம் சார்பில் கலெக்டர் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை அழிக்க மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார் லட்சுமி அழகுராஜா சக்தி திருமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் TNPGTA மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் TNPTF மாவட்டத் தலைவர் ராம்குமார் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவமணி சிஐடியு மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் தமிழ் பரமன் மலர்விழி பரமேஸ்வரன் விஸ்வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில செயலாளர் நீதி ராஜா நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்2