logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரல் காந்தி சிலை அருகில், வண்டிமலச்சி அம்மன் கோவில் தெரு, உமரிக்காடு, ஆலடியூரர் அகரம், கொற்கை, சிறுத்தொண்டநல்லூர் உள்பட 9 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் நிறைவு நாளன்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகளும் ஏரல் பேருந்து நிலையம் அருகே வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அங்கிருந்து காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. விநாயகர் சிலை ஊர்வலம் ஏரல் முதன்மைச் சந்தை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகப் பக்தர்கள் பக்தி கோஷ முழக்கங்களுடன் தாமிரபரணி ஆற்றைச் சென்றடைந்தது. ஆற்றுப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்ட சிலைகள் வாகனங்களில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டுத் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

1 hr ago
user_Mithun
Mithun
City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
1 hr ago
4084d708-2436-453b-865c-44cabe6acd29

ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரல் காந்தி சிலை அருகில், வண்டிமலச்சி அம்மன் கோவில் தெரு, உமரிக்காடு, ஆலடியூரர் அகரம், கொற்கை, சிறுத்தொண்டநல்லூர் உள்பட 9 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் நிறைவு நாளன்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகளும் ஏரல் பேருந்து நிலையம் அருகே வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அங்கிருந்து காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. விநாயகர் சிலை ஊர்வலம் ஏரல் முதன்மைச் சந்தை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகப் பக்தர்கள் பக்தி கோஷ முழக்கங்களுடன் தாமிரபரணி ஆற்றைச் சென்றடைந்தது. ஆற்றுப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்ட சிலைகள் வாகனங்களில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டுத் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
    1
    தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின்  திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை செய்ய வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கோரிக்கை. புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சமூக போராளி திரு மா மாரிச்செல்வம் அவர்கள் கூறியதாவது14 9 2026 இன்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்பு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி த வேலம்மாள் அவர்களை கொடூரமாக தாக்கிய சுனாமி குடியிருப்பு பகுதியை சார்ந்த நபர் மீது 3 நாட்களாகியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை நிர்வாகத்தை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் திரு மா மாரி செல்வம் அவர்கள் கட்சி தலைமை அறிவுறுத்தலின் பேரில் தெர்மல் நகர் காவல் நிலையம் முன்போ அல்லது மாவட்ட காவல் துறை அலுவலகம் முன்பு புரட்சி பாரதம் கட்சி சார்பில் தோழமை அமைப்புகளையும் பொதுமக்களையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களையும் சமூக ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் திருமதி T வேலம்மாள் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் 3 நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள O P காவல் நிலைய அதிகாரியோ அல்லது சம்பந்தப்பட்ட தெர்மல் நகர் காவல் நிலைய அதிகாரிகளோ என்னிடம் விசாரணை செய்யவில்லை எனவும் அவரை அடித்து கல்லால் மார்பு பகுதியில் எரிந்து கையை முறுக்கி கெட்ட வார்த்தைகளை சொல்லி மனம் வேதனை படும்படியாகவும் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொருளாளர் திரு மு மணிகண்டன் புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் திரு த மகேந்திரன் சமூக ஆர்வலர்AICCTU தேசிய செயற்குழு உறுப்பினர் மின்னல் அம்ஜத் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தார்கள் சுனாமி குடியிருப்பை சார்ந்த பொதுமக்கள் என பலர் இருந்தனர் இப்படிக்கு செய்தி பிரிவு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் தொடர்புக்கு 95979477 7 6
    4
    தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை செய்ய வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கோரிக்கை.
புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சமூக போராளி திரு மா மாரிச்செல்வம் அவர்கள் கூறியதாவது14 9 2026 இன்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்பு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி த வேலம்மாள் அவர்களை கொடூரமாக தாக்கிய சுனாமி குடியிருப்பு பகுதியை சார்ந்த நபர் மீது 3 நாட்களாகியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை நிர்வாகத்தை கண்டித்து    புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் திரு மா மாரி செல்வம் அவர்கள் கட்சி தலைமை அறிவுறுத்தலின் பேரில்  தெர்மல் நகர் காவல் நிலையம் முன்போ அல்லது மாவட்ட காவல் துறை அலுவலகம் முன்பு புரட்சி பாரதம் கட்சி சார்பில் தோழமை அமைப்புகளையும் பொதுமக்களையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களையும் சமூக ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் திருமதி T வேலம்மாள் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் 3 நாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள O P காவல் நிலைய அதிகாரியோ அல்லது  சம்பந்தப்பட்ட தெர்மல் நகர் காவல் நிலைய அதிகாரிகளோ என்னிடம் விசாரணை செய்யவில்லை எனவும்  அவரை அடித்து கல்லால் மார்பு பகுதியில் எரிந்து கையை முறுக்கி கெட்ட வார்த்தைகளை சொல்லி மனம் வேதனை படும்படியாகவும் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொருளாளர் திரு மு மணிகண்டன் புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் திரு த மகேந்திரன் சமூக ஆர்வலர்AICCTU  தேசிய செயற்குழு உறுப்பினர் மின்னல் அம்ஜத் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தார்கள் சுனாமி குடியிருப்பை சார்ந்த பொதுமக்கள் என பலர் இருந்தனர் இப்படிக்கு செய்தி பிரிவு புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் தொடர்புக்கு 95979477 7 6
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    1
    ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    2
    தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு 
ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    user_Jegan
    Jegan
    திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    41 min ago
  • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் குடிநீர் திட்டத்துக்காக ரூ.1 1/4 கோடி ஒதுக்கீடு தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் தீர்மானம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், மகேஷ், அருண் தவசு பாண்டியன், தனி தங்கம், ஜான்ஸ்ரூபா, லிங்க சாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த நிதியாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி உள்ளது. இதனை குடிநீர் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த நிதி ஆண்டுகளில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா நடக்கும் போது கண்டிப்பாக கல்வெட்டு வைக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலர்கள் பணி பாராட்டுக்கு உரியது. இவ்வாறு அவர் பேசினார்.
    1
    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் 
குடிநீர் திட்டத்துக்காக ரூ.1 1/4 கோடி ஒதுக்கீடு
தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் தீர்மானம் 
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார்.
இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், மகேஷ், அருண் தவசு பாண்டியன், தனி தங்கம், ஜான்ஸ்ரூபா, லிங்க சாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்த நிதியாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி உள்ளது. இதனை குடிநீர் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த நிதி ஆண்டுகளில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா நடக்கும் போது கண்டிப்பாக கல்வெட்டு வைக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலர்கள் பணி பாராட்டுக்கு உரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    1 hr ago
  • கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் அந்தோணியார் திருத்தல திருவிழா நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேர் பவனி பக்தர்களுக்கு காட்சியளித்தது
    1
    பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் அந்தோணியார் திருத்தல திருவிழா 
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேர் பவனி பக்தர்களுக்கு காட்சியளித்தது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் மாலை தூத்துக்குடி பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்  இன்று செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி, மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் மாலை
தூத்துக்குடி பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்  மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்  இன்று செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி, மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்தனர் 
இந்த நிகழ்ச்சியில்  ஏராளமான திமுக நிர்வாகிகள்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.