Shuru
Apke Nagar Ki App…
தாந்தோணி மேற்கு ஒன்றிய ஆண்டாள் கோவில் ஊராட்சி வார்டு 145-ல் திமுக சார்பில் வாக்குச்சாவடி திண்ணைப் பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது. அக்கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், உரையாற்றினார். பொறுப்பாளர் ,BLA2, BLC, BDA உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
R. Suresh
தாந்தோணி மேற்கு ஒன்றிய ஆண்டாள் கோவில் ஊராட்சி வார்டு 145-ல் திமுக சார்பில் வாக்குச்சாவடி திண்ணைப் பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது. அக்கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், உரையாற்றினார். பொறுப்பாளர் ,BLA2, BLC, BDA உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தாடிக்கொம்புவில் காணக்கிடைக்காத கண்கொள்ளா காணொளி காட்சி திண்டுக்கல் மாவட்டம்& வட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக அலங்காரம் பூஜைகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்2
- *திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த சிவ சக்தி விநாயகர் திருக்கோயிலில் ஆண்டாள் நகர்வள புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலமாக சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று ஆண்டாளுக்கு நான்காம் ஆண்டு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்திருந்த ஆண்டாளுக்கு ஆபரணங்கள் அணிவித்து கிரீடம் வைத்து வண்ணமலர் மாலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆண்டாளுக்கு தீபம் காட்டப்பட்டு கற்பூரம் சுற்றி புறப்பாடு தொடங்கியது பக்தர்கள் சப்பரத்தை இழுத்துச் செல்ல பெண்கள் சீர் வரிசைகளுடன் திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலம் சென்றனர் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆண்டாளை வழிநடக பக்தர்கள் தரிசனம் செய்தனர் பின்னர் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று புறப்பாடு நிறைவு பெற்றது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்து சென்றனர்1
- கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.1
- இரவு வணக்கம்1
- ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு பூஜை! புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் தொடங்கியுள்ள நிலையில் அந்த காளைக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டு படையல் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான காளை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம். கோட்டை பரவாசுதேவ பெருமாள் திருக்கோவி-லில் வருகின்ற மார்கழி 27 காலை 9.30 - 12.30 மணிக்குள் பெருமாளுக்கும் "சூடிக்கொடுத்த சுடர்கொடி"ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் "திருக்கல்யாண வைபவம்"1
- திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கப்ட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் மார்கழி மாத 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் ஆலயத்தில் இன்று மார்கழி மாதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் எஸ். காமாட்சிபுரம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியில் இருந்து 200 பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பூஜையானது குழந்தைகளின் கல்வி, மங்களம் பெருகவும், ஆரோக்கியம், செல்வம் பெருகும் . தீமைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். தீபத்தை ஏற்றி முதலில் கணபதி பூஜை பின்னர் குலதெய்வம், முருகப்பெருமானை மனதால் நினைத்து வழிபட்டார்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் பாதாள செம்பு முருகன் திருக்கோவில் சார்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் மற்றும் முருகனின் புகைப்படம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1
- தேவதானப்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் கூடாரவல்லி முன்னிட்டு பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் மார்கழி மாதம் 27ஆம் தேதி கூடாரவல்லி முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் பெண்கள் வாழை இலையில் வளையல் மஞ்சள் குங்குமம் மற்றும் குத்துவிளக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு குடும்ப பிரச்சினைகள், மாணவர்களின் கல்வி, தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பத்ரகாளியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரணைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அதன்பின்பு இந்து நாடார் உறவின்முறை சமுதாயம் சார்பாக திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண் பக்தர்களுக்கு அன்பளிப்பு மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்1
- புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி! புதுகை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதை சிறப்பாக செய்துள்ளது. இதை அனைவரும் ஏற்றுள்ளனர். ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும், ஜனநாயகன் திரைப்படத்தில் கோர்ட்டின் உத்தரவு படியே நடந்து கொள்ளப்படுகிறது. பாஜகவில் புதிய கூட்டணியாக தணிக்கை வாரியம் திகழ்கிறது" என்றார்.1