Shuru
Apke Nagar Ki App…
மூன்று மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்த மனு. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சி மடப்புரம் விளக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டு மனை பிரிவுகள் அதில் அபிவிருத்தி தடை செய்யப்பட்ட மூன்று மீட்டர் இடத்தினை விடாமல் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருகின்றனர் ஆதலால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டிய வீட்டிற்கு அவதாரம் விதிப்பதுடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மனு செய்து வந்துள்ளனர்.
Kalam karthikeyan
மூன்று மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்த மனு. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சி மடப்புரம் விளக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டு மனை பிரிவுகள் அதில் அபிவிருத்தி தடை செய்யப்பட்ட மூன்று மீட்டர் இடத்தினை விடாமல் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருகின்றனர் ஆதலால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டிய வீட்டிற்கு அவதாரம் விதிப்பதுடன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மனு செய்து வந்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கையில் மரபுக் கண்காட்சி – தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை தொல் நடை குழு மற்றும் தமிழ் வையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் பகிரத நாச்சியப்பன் தலைமையில்துன்னுடைக்குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி முன்னிலை வகித்தார். தொல் நடை குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்புரை வழங்கினார்.தொல்நடைக்குழு நிறுவனர்காளி ராசா நூலினை பற்றி எடுத்துரைத்தார்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மரபுசார் கண்காட்சியில் பழமையான நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணனின் கைவண்ணத்தில் உருவானஅணு என்ற கையடக்க மாத இதழும் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ‘தொல்லியல் பயணம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் சிவப்பிரகாஷ் நூலை வெளியிட, மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். நமது வரலாறு, பண்பாடு மற்றும் தொல்லியல் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- அமைச்சர்களின் பதிலுரையை முதலில் வழங்குவது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் காட்டுவது போன்றது : தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார். மேலும், முதன்முறையாக 9 மணி 43 நிமிடங்கள் தொடர்ந்து அவை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். எனினும், அவை நேரத்தை கருத்தில்கொண்டு, அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள் இனி முதலில் அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர், அதனைத் தொடர்ந்து பதிலுரை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பதிலளித்த திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். தவெகவின் க்ளைமாக்ஸை அனைவரும் நிச்சயமாகப் பார்ப்போம். உங்களுடைய க்ளைமாக்ஸையும் கட்டாயம் காத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இன்று காலையிலிருந்தே எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்பதில் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். காலையில் வந்தவுடனே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லட்டும்; அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது அறிவிப்புகளை எல்லாம் முன்னதாக வெளியிட்டுவிட்டு, பின்னர் அதுகுறித்து பேசுங்கள் என்கிறீர்கள். மொத்தத்தில் பேரவைத் தலைவர் படுத்துக்கட்டும், போர்த்திக்கலாம்; போர்த்திவிட்டும் படுத்துக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா என்பதை நான் அறிய விரும்புகிறேன் என நகைச்சுவையாகக் கூறினார்.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்! மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமைந்துள்ள பூதமங்கலத்தில், அருள்மிகு ஸ்ரீ சிட்டிசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 :00 மணி முதல் 10 :00 மணிக்குள் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். காலை 11:00 மணியளவில் அன்னதானம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்னதானம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று இரவு 10 :00 மணியளவில் கோவில் முன்பாக உள்ள கலையரங்கில் ஸ்ரீ வள்ளி திருமண நாடகம் நடைபெற உள்ளது.1
- சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.1
- புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.1
- கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் .. விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை1
- மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை *மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை* மதுரை மாவட்டம் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை செய்து சாதனை. மேலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார் என்பது கூடுதல் சிறப்பு. கிட்டத்தட்ட ஓராண்டாக கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த 28 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு முதுகுத்தண்டுவட காசநோய் உருவானதால் நடப்பதில் சிரமமும், மார்புக்குக் கீழே உணர்ச்சியிழப்பும் ஏற்பட்டுருத்தது. முதுகுத்தண்டுவட அழுத்ததை குறைப்பதற்கான சிகிச்சையையும், திசு நீக்கம் மற்றும் நோயாளியின் சொந்த எலும்புகளைக் கொண்டு முதுகுத்தண்டை நிலைநிறுத்தும் ஒட்டு மொத்த அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. அதே நேரத்தில் கர்ப்பத்திலுள்ள கருவுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய சிகிச்சை அளித்து தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் செல்வமுத்துக் குமரன் கூறினார். உடன் முதுநிலை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார், இணை நிபுணர் மருத்துவர் கவீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.1
- சிவகங்கை உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றுவதற்க்கு எதிர்ப்பு – சிவகங்கையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் சிவகங்கை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் மாற்றப்பட்டால் வழக்கறிஞர்கள் மற்றும் நுகர்வோர் வழக்குத் தொடரும் பொதுமக்கள் போக்குவரத்து சிரமம், கூடுதல் செலவினம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நுகர்வோர் நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.1
- அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களை சிலர் கிண்டல் செய்வதாகவும் புகார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடத்தை அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் தேவையற்ற சரக்கு வாகனங்கள் டூரிஸ்ட் வேன்கள் போன்ற வாகனங்களை நிறுத்துவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் அத்துமீறி இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் மேலும் அங்கு சிலர் பெண்களை கேலி செய்வதாகவும் அருப்புக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பள்ளி முன்பு அதுவும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கியமான பகுதியில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் இது போன்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், இந்து நாடார் நடுநிலை பள்ளி முன்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சரக்கு வாகனங்களை தேவையில்லாத வகையில் நிறுத்துகின்றனர். மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு இருக்கும் சிலர் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். இது தொடர்பாக இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என பலமுறை அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று புகார் அளித்தால் சிலர் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் எனக்கூறி பள்ளிக்குள் வந்து மிரட்டுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1