logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரை மாவட்டம் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், மேலூர் வட்டம் மூவேந்தர் பண்பாட்டு கழக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மேலூர் வட்டம் மூவேந்தர் பண்பாட்டு கழக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் “டாக்டர் கலைஞர் Sports Kit வழங்கும் திட்டம்” தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்கள். அதன்படி மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 322 வார்டுகளுக்கு 600 Sports Kits ரூபாய் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படுகின்றன. இந்த Sports Kits-களின் Stock, Distribution மற்றும் Usage-ஐ கண்காணிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆடுகளம் – TNSPORTS என்ற Mobile App உருவாக்கியுள்ளது. இந்த mobile app Google Play Store-இல் Download செய்துகொள்ளலாம். ஒவ்வொரு Ward-க்கும் தனித்தனி User Name மற்றும் Password வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Online Stock Register பராமரித்து, Kit Movement மற்றும் Equipment Usage பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. மதுரை மாவட்டத்தின் 322 Wards-க்கும் 322 User Credentials வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் Real-Time Monitoring மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் aadukalam App-ஐ பயன்படுத்தி Sports Equipment-ஐ Online Booking செய்து பயிற்சி மற்றும் போட்டிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் நகர்ப்புற இளைஞர்கள் Physical Fitness, Discipline, Team Spirit ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளலாம். மேலும், மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், மாண்புமிகு முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்குகள், ஒவ்வொன்றும் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அரங்குகள், மாணவர்கள் மட்டுமல்லாமல், இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் உள்ளிட்ட அனைவரும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அர்ஜுனா விருது பெற்ற பேட்மிட்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.02.2026 அன்று பணி நியமன ஆணை வழங்க உள்ளார்கள். தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காப்பீட்டு அட்டையினை வழங்கி டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் திரு.வேல்முருகன் அவர்கள், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் திரு.ராஜா அவர்கள், விடுதி மேலாளர் திரு.முருகன் அவர்கள், வருவாய் கோட்டாட்சியர் (மேலூர்) திருமதி சங்கீதா அவர்கள் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற செல்வி.ஜெர்லின் அனிகா அவர்கள், சர்வதேச பாரா தடகள போட்டியில் தங்கம் வென்ற திரு.மனோஜ் அவர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

12 hrs ago
user_Karthik M S
Karthik M S
மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
12 hrs ago
6ef3341b-b3fa-4112-9af5-5cb321b2b4df

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    3
    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம்
மதுரை, பிப்.17-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
    1
    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று  (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    8 hrs ago
  • முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்
    1
    முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
    1
    சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட   பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும்
அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில்  கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது 
சுமார் 4 கோடியே 45 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு 
நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு   பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிலக்கோட்டை அரசு மகளிர்  கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ  தலைமை வகித்தார்.
மேலும் இவ்விழாவில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான  சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு,
கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
    user_Abbas Abbas
    Abbas Abbas
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள்  விழா குழுவினர்  வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா
    2
    இடையாத்தூர் கிராமம்  ஜல்லிக்கட்டு விழா
    user_Ponnalagu Vijay Tvk
    Ponnalagu Vijay Tvk
    Voice of people பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு திட்டம் மூலம் 52 புதிய குடியிருப்புகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் பேசும் போது, ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கும் பணியில் முதல்வர் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ 22 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்விற்காக 480 வீடுகள் கட்டப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார், இதனை மனித நேயத்தில் அடையாளமாக நமது தொப்புள் கொடி உறவுகறக்கு தரும் ஆதரவாக கருத வேண்டும் என்றவர், வாக்கு அரசியலுக்காக திட்டங்களை அறிவிப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், வாக்குரிமை இல்லாத இலங்கைத் தமிழர்களுக்கு குடியிருப்புகள் வழங்கியதின் மூலம் முதல்வர் மனித நேயத்துடன் கூடிய திட்டங்களை அறிவிக்கின்றார் என்பனை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், மகளீர் உரிமை தொகையை 1.31 கோடி பேருக்கு ரூ 5 ஆயிரம் வழங்கி முதல்வர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக கூறியவர், பெரும்பாலான நடவடிக்கைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். ஆனால் மகளிர் உரிமை திட்டம் மூலம் ரூ 5,000 வழங்கியது, போர்க்கால அடிப்படையில் ரகசியம் காக்கப்பட்டு வெற்றிகரமாக முதல்வர் அறிவித்துள்ளார் என்றும், ஆயிரம் ரூபாய் வழங்குவதை தடுப்பதற்கு ஒரு கூட்டம் கிளம்பிச் சென்றது. ஆனால் முடிந்தால் தடுத்துப் பார் என சகோதரிகளுக்கு ரூ 5 ஆயிரத்தை வழங்கி நிர்வாக திறமை மிக்க முதல்வராக ஸ்டாலின் திகழ்கின்றார் என புகழாரம் சூட்டினார்.ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் எப்படி தர முடியும் என்று கூறியவர்கள், இன்று ரூ 2 ஆயிரம் தருவதாக கூறுகின்றனர். அவர்கள் 10 ஆயிரம் தருவதாகக் கூறினாலும் மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள் என அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.
    1
    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு திட்டம் மூலம் 52 புதிய குடியிருப்புகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் பேசும் போது, ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கும் பணியில் முதல்வர் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில்  சிவகங்கை மாவட்டத்தில் ரூ 22 கோடி  மதிப்பீட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்விற்காக 480 வீடுகள்  கட்டப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்,
இதனை மனித நேயத்தில் அடையாளமாக நமது தொப்புள் கொடி உறவுகறக்கு தரும் ஆதரவாக கருத வேண்டும் என்றவர்,
வாக்கு அரசியலுக்காக திட்டங்களை அறிவிப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், வாக்குரிமை இல்லாத இலங்கைத் தமிழர்களுக்கு குடியிருப்புகள் வழங்கியதின் மூலம் முதல்வர் மனித நேயத்துடன் கூடிய திட்டங்களை அறிவிக்கின்றார் என்பனை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், மகளீர் உரிமை தொகையை 1.31 கோடி பேருக்கு ரூ 5 ஆயிரம் வழங்கி முதல்வர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக கூறியவர்,
பெரும்பாலான நடவடிக்கைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். ஆனால் மகளிர் உரிமை திட்டம் மூலம் ரூ 5,000 வழங்கியது, போர்க்கால அடிப்படையில் ரகசியம் காக்கப்பட்டு வெற்றிகரமாக முதல்வர் அறிவித்துள்ளார் என்றும்,
ஆயிரம் ரூபாய் வழங்குவதை தடுப்பதற்கு ஒரு கூட்டம் கிளம்பிச் சென்றது. ஆனால் முடிந்தால் தடுத்துப் பார் என சகோதரிகளுக்கு ரூ 5 ஆயிரத்தை வழங்கி நிர்வாக திறமை மிக்க முதல்வராக ஸ்டாலின் திகழ்கின்றார் என புகழாரம் சூட்டினார்.ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் எப்படி தர முடியும் என்று கூறியவர்கள், இன்று ரூ 2 ஆயிரம் தருவதாக கூறுகின்றனர். அவர்கள் 10 ஆயிரம் தருவதாகக் கூறினாலும் மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள் என அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.