logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்ற 13 வயது மாணவன் மூழ்கி பலி உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதி சார்ந்தவர் காமாட்சி. இவரது மகன் தவசி (13) போடியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இன்று காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருகில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் உறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை தேடி வருகின்றனர். மேலும் சுருளிப்பட்டி பகுதியைச் சார்ந்த ஊர் பொதுமக்களும் ஆற்றில் இறங்கி மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாணவனின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

5 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
5 hrs ago

முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்ற 13 வயது மாணவன் மூழ்கி பலி உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதி சார்ந்தவர் காமாட்சி. இவரது மகன் தவசி (13) போடியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இன்று காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருகில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் உறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை தேடி வருகின்றனர். மேலும் சுருளிப்பட்டி பகுதியைச் சார்ந்த ஊர் பொதுமக்களும் ஆற்றில் இறங்கி மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாணவனின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி
    4
    திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி
    user_Village volgs Alex and siva
    Village volgs Alex and siva
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    1
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று  (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    3 hrs ago
  • மதுரை : ​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ​ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
    1
    மதுரை :
​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர்.
​ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா
    1
    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா
    user_Aravinth
    Aravinth
    Tour Guide மேலூர், மதுரை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    1
    பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன்  சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 day ago
  • மதுரையில் இன்று போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது. மதுரையில் இன்று (மார்ச் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு அண்ணாமலை தியேட்டர் முன்பாக ஆரம்பித்து முக்கிய சாலைகள் வழியாக முனிச்சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.
    1
    மதுரையில் இன்று போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது.
மதுரையில் இன்று (மார்ச் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு அண்ணாமலை தியேட்டர் முன்பாக ஆரம்பித்து முக்கிய சாலைகள் வழியாக முனிச்சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும்  உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.