234 தொகுதிகள்.. யார் ஆட்சி அமைப்பது? புதிய சர்வே கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட் தமிழ்நாட்டில் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒரு புதிய சர்வே அரசியல் சூழ்நிலையை கிளறி விட்டுள்ளது. 234 தொகுதிகளில் யார் எத்தனை சீட்களை கைப்பற்றுவார்கள் என்ற கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிழ்நாட்டில் தேர்தல் களமே இப்போது சூடாக இருக்கிறது. 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது. கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியும், எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியும், அதே போல் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் முழு வேகத்தில் இறங்கியுள்ளன. இந்த சூழலில், வாக்காளர்கள் எந்த பக்கம் திரும்புகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும், தற்போதைய அரசுக்கு எதிரான மனநிலை மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வாக்கு பிளவு ஆகியவை தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த அனைத்து காரணங்களும் சேர்ந்து, இந்த முறை தேர்தல் முடிவு கடைசி நிமிடத்திற்கே தள்ளப்படும் என தெரியவந்துள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் இன்று அதிக பரபரப்புடன் உள்ளது.
234 தொகுதிகள்.. யார் ஆட்சி அமைப்பது? புதிய சர்வே கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட் தமிழ்நாட்டில் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒரு புதிய சர்வே அரசியல் சூழ்நிலையை கிளறி விட்டுள்ளது. 234 தொகுதிகளில் யார் எத்தனை சீட்களை கைப்பற்றுவார்கள் என்ற கணிப்பு அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிழ்நாட்டில் தேர்தல் களமே இப்போது சூடாக இருக்கிறது. 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது. கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியும், எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியும்,
அதே போல் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் முழு வேகத்தில் இறங்கியுள்ளன. இந்த சூழலில், வாக்காளர்கள் எந்த பக்கம் திரும்புகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும், தற்போதைய அரசுக்கு எதிரான மனநிலை மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வாக்கு பிளவு
ஆகியவை தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த அனைத்து காரணங்களும் சேர்ந்து, இந்த முறை தேர்தல் முடிவு கடைசி நிமிடத்திற்கே தள்ளப்படும் என தெரியவந்துள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் இன்று அதிக பரபரப்புடன் உள்ளது.
- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தேர்தலை முன்னிட்டு நாளை (21.04.2026) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளுக்கு வருகை தந்ததால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்த சில நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதால், இந்த கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- வீரசைவ - லிங்காயத் மகாசபையின் தலைவரும், கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான திரு. ஈஸ்வர் காண்ட்ரே கிருஷ்ணகிரி நகருக்கு வந்ததையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி. சி.சேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு உள்ளிட்ட பலர் பங்கேற்பு1
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- ஊத்தங்கரையில் காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமிக்கு, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.குப்புசாமி அவர்களை ஆதரித்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்களுக்கு மத்தியில் முதலமைச்சர் திமுக ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் அவரைப் போல கர்நாடகாவிலும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் குப்புசாமிக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் அதனால் அனைவரும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் தே.மதியழகன் ஒய் பிரகாஷ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரகு, திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்ந்த ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.1
- br alone and be happy 😊1
- தமிழ்நாட்டில் இன்று மாலையோடு ஓய்கிறது சட்டமன்ற தேர்தல் பரப்புரை.* கல்வராயன் மலைப்பகுதியில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.* ஏப்.23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கும். இடைப்பட்ட நேரத்தில் தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தப்படக் கூடாது.திரைப்படம், டி.வி., ரேடியோ, வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் தேர்தல் பரப்புரை கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்னை தொடர்பு அதிமுக கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதே பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியோ அல்லது பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவித்ததாகவோ கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வித்யா ராணியை அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.1
- கிருஷ்ணகிரி தனியார் மஹால் இன்றுவீரசைவ - லிங்காயத் மகாசபையின் தலைவரும், கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான திரு. ஈஸ்வர் காண்ட்ரே கிருஷ்ணகிரி நகருக்கு வருகை தந்து கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்லகுமார்க்குஆதரவு கைசின்னத்திற்கு வாக்குகேட்டு பேட்டி அளித்தார் மேலும்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி. சி.சேகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தன.1