logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை பகுதியில் இன்று (ஜூன் 20) மதியம், ஆம்பூர் அரசு மருத்துவமனை அலுவலர் யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், ஆம்பூர் டவுன் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 53 வயதுடைய போலி பெண் டாக்டர் ரகுபதி மணி ரஜினிகாந்த் என்பவரை பிற்பகலில் கைது செய்தனர். மேலும், அவரது போலி மருத்துவமனைக்கும் சீல் வைத்த போலீசார், இந்த பரபரப்பான சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

13 hrs ago
user_Yuvaraj Yuvaraj
Yuvaraj Yuvaraj
Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
13 hrs ago

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை பகுதியில் இன்று (ஜூன் 20) மதியம், ஆம்பூர் அரசு மருத்துவமனை அலுவலர் யோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், ஆம்பூர் டவுன் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 53 வயதுடைய போலி பெண் டாக்டர் ரகுபதி மணி ரஜினிகாந்த் என்பவரை பிற்பகலில் கைது செய்தனர். மேலும், அவரது போலி மருத்துவமனைக்கும் சீல் வைத்த போலீசார், இந்த பரபரப்பான சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More news from Tirupathur and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புதுமனை பகுதியில், ரஜினிகாந்தி என்பவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு பொதுமருத்துவம் பார்த்து வருவதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை, மருத்துவ அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மருத்துவ அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையில், ரஜினிகாந்தி முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மருத்துவ அதிகாரிகள் அவரை ஆம்பூர் நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், மேலும் அவரது கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். பின்னர், ரஜினிகாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புதுமனை பகுதியில், ரஜினிகாந்தி என்பவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு பொதுமருத்துவம் பார்த்து வருவதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை, மருத்துவ அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மருத்துவ அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

சோதனையில், ரஜினிகாந்தி முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மருத்துவ அதிகாரிகள் அவரை ஆம்பூர் நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், மேலும் அவரது கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். பின்னர், ரஜினிகாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    5 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் உள்ள ஆலங்காயம் பெரிய ஏரியில் இருந்து, இன்று இரவு 8 மணியளவில் அரிய வகை பெண் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வெளியேறி வருகின்றன. ஏரிக் கரை பகுதியில் இருந்து வெளிவரும் இந்த ஆமைகள், சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளதால், ஆலங்காயம் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் உள்ள ஆலங்காயம் பெரிய ஏரியில் இருந்து, இன்று இரவு 8 மணியளவில் அரிய வகை பெண் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வெளியேறி வருகின்றன. ஏரிக் கரை பகுதியில் இருந்து வெளிவரும் இந்த ஆமைகள், சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளதால், ஆலங்காயம் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • காரிமங்கலம் அருகே ஒரு இருசக்கர வாகனம் மீது மாங்காய் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கரமான விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
    1
    காரிமங்கலம் அருகே ஒரு இருசக்கர வாகனம் மீது மாங்காய் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கரமான விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாங்காய் லோடு ஏற்றி வந்த பிக்கப்வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாலக்கோடு அடுத்த சூடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிக்கப்வேன் ஓட்டுநர் சுமன் (30), வெள்ளிச்சந்தை தோட்டத்தில் இருந்து மாம்பழங்களை ஏற்றி மாம்பழத் தொழிற்சாலைக்கு காரிமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, முதலிப்பட்டி தனியார் பட்டாசுக் கடை அருகே இந்த விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த சொன்னம்பட்டியைச் சேர்ந்த வேடியப்பன் (45) மற்றும் கேத்தனஅள்ளியைச் சேர்ந்த ராஜப்பன் (55) ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த இருவரையும் காரிமங்கலம் போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாங்காய் லோடு ஏற்றி வந்த பிக்கப்வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாலக்கோடு அடுத்த சூடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிக்கப்வேன் ஓட்டுநர் சுமன் (30), வெள்ளிச்சந்தை தோட்டத்தில் இருந்து மாம்பழங்களை ஏற்றி மாம்பழத் தொழிற்சாலைக்கு காரிமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, முதலிப்பட்டி தனியார் பட்டாசுக் கடை அருகே இந்த விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த சொன்னம்பட்டியைச் சேர்ந்த வேடியப்பன் (45) மற்றும் கேத்தனஅள்ளியைச் சேர்ந்த ராஜப்பன் (55) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த இருவரையும் காரிமங்கலம் போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையின் வெள்ளிமலை அருகே அமைந்துள்ள மொட்டையனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் நூலகத்தை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நீண்ட நாட்களாக பயன்பாடின்றி மூடப்பட்டிருக்கும் நூலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். அத்துடன், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய விளையாட்டு மைதான வசதியை ஏற்படுத்தவும், போதிய பாதுகாப்பு இல்லாத அரசுப் பள்ளிக்கு தடுப்புச் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வு மற்றும் அவர் அளித்த வாக்குறுதிகளால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையின் வெள்ளிமலை அருகே அமைந்துள்ள மொட்டையனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் நூலகத்தை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், நீண்ட நாட்களாக பயன்பாடின்றி மூடப்பட்டிருக்கும் நூலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். அத்துடன், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய விளையாட்டு மைதான வசதியை ஏற்படுத்தவும், போதிய பாதுகாப்பு இல்லாத அரசுப் பள்ளிக்கு தடுப்புச் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வு மற்றும் அவர் அளித்த வாக்குறுதிகளால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், இலுப்பப்பட்டு ஊராட்சியில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால், மக்கள் கடும் ஆவேசத்தில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நேற்று முன்தினம் ஊரக வளர்ச்சி அதிகாரியிடம் மனு அளித்ததோடு, நேரில் வந்து ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த அதிகாரி இன்று இலுப்பப்பட்டு ஊராட்சிக்கு ஆய்வு செய்ய வந்தார். அப்போது, மக்கள் அந்த அதிகாரியிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதையடுத்து, அதிகாரி அனைத்து பிரச்சினைகளையும் விரைவில் சரி செய்து தருவதாக உறுதியளித்தார். அதிகாரியின் வாக்குறுதியைத் தொடர்ந்து, மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    4
    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், இலுப்பப்பட்டு ஊராட்சியில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால், மக்கள் கடும் ஆவேசத்தில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நேற்று முன்தினம் ஊரக வளர்ச்சி அதிகாரியிடம் மனு அளித்ததோடு, நேரில் வந்து ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த அதிகாரி இன்று இலுப்பப்பட்டு ஊராட்சிக்கு ஆய்வு செய்ய வந்தார். அப்போது, மக்கள் அந்த அதிகாரியிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, அதிகாரி அனைத்து பிரச்சினைகளையும் விரைவில் சரி செய்து தருவதாக உறுதியளித்தார். அதிகாரியின் வாக்குறுதியைத் தொடர்ந்து, மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    user_த.சரவணன்
    த.சரவணன்
    Taxi Driver வாலாஜாபாத், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் பகுதியில் இருக்கும் பெரிய ஏரியில் அரிய வகை ஆமைகள் வாழ்கின்றன. இனப்பெருக்கத்திற்காக இரவு நேரங்களில் ஏரியிலிருந்து வெளியேறும் முதிர்ச்சி அடைந்த பெண் ஆமைகள், அருகில் உள்ள வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதாக இயற்கையை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் ஆமைகளின் இனப்பெருக்க காலம் என்பதால், இந்த காலகட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, வனத்துறையினர் இந்த சூழலைக் கண்காணித்து, அரிய வகை ஆமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் பகுதியில் இருக்கும் பெரிய ஏரியில் அரிய வகை ஆமைகள் வாழ்கின்றன. இனப்பெருக்கத்திற்காக இரவு நேரங்களில் ஏரியிலிருந்து வெளியேறும் முதிர்ச்சி அடைந்த பெண் ஆமைகள், அருகில் உள்ள வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதாக இயற்கையை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் ஆமைகளின் இனப்பெருக்க காலம் என்பதால், இந்த காலகட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, வனத்துறையினர் இந்த சூழலைக் கண்காணித்து, அரிய வகை ஆமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    5 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகே கோசமேடு முதல் சாப்பரம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக கோசமேடு அன்னா கொட்டாய் அருகே சாலை கடுமையாகச் சேதமடைந்து, மழை பெய்யும்போது தண்ணீர் குளம் போலத் தேங்கி நிற்கும் அவல நிலை நீடிக்கிறது. இந்தச் சாலையின் மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் திணறிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டும், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதுடன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகே கோசமேடு முதல் சாப்பரம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக கோசமேடு அன்னா கொட்டாய் அருகே சாலை கடுமையாகச் சேதமடைந்து, மழை பெய்யும்போது தண்ணீர் குளம் போலத் தேங்கி நிற்கும் அவல நிலை நீடிக்கிறது.

இந்தச் சாலையின் மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் திணறிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டும், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதுடன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.