Shuru
Apke Nagar Ki App…
நாங்குநேரி பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நல்ல ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பலரும் பாராட்டு வருகின்றனர். இப்பள்ளியின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஜெப சிந்தி நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசால் விருது வழங்கப்பட்டது. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம் எல் ஏ கிருஷ்ணன் நேரில் சென்று ஆசிரியருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருக்கு சக ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னாள் இந்நாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
Vanumamalai, S
நாங்குநேரி பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நல்ல ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பலரும் பாராட்டு வருகின்றனர். இப்பள்ளியின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஜெப சிந்தி நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசால் விருது வழங்கப்பட்டது. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம் எல் ஏ கிருஷ்ணன் நேரில் சென்று ஆசிரியருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருக்கு சக ஆசிரியர்கள் பெற்றோர்கள் முன்னாள் இந்நாள் மாணவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் அந்தோணியார் திருத்தல திருவிழா நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேர் பவனி பக்தர்களுக்கு காட்சியளித்தது1
- கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன, இதில் விநாயகருக்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்1
- சுசீந்திரம் பழைய ஆற்றில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு படையினர் நடத்திக் காட்டினார் வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய இருக்கும் நிலையில் மலைச்சேதங்கள் மற்றும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்வது தொடர்பான பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் சுசீந்திரம் பழைய ஆற்றில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து மீட்பு படகுகள் மூலமும் கயிறு கட்டியும் தீயணைப்பு படையினர் செய்து காட்டினார்கள் இதனை அந்தப் பகுதியில் இருந்த சுற்றுலா பகுதிகள் பயணிகளும் பொதுமக்களும் பார்வையிட்டனர்1
- தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.2
- எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.1
- ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு1
- நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் குடிநீர் திட்டத்துக்காக ரூ.1 1/4 கோடி ஒதுக்கீடு தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் தீர்மானம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், மகேஷ், அருண் தவசு பாண்டியன், தனி தங்கம், ஜான்ஸ்ரூபா, லிங்க சாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த நிதியாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி உள்ளது. இதனை குடிநீர் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த நிதி ஆண்டுகளில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா நடக்கும் போது கண்டிப்பாக கல்வெட்டு வைக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலர்கள் பணி பாராட்டுக்கு உரியது. இவ்வாறு அவர் பேசினார்.1