logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., தலைமையில், வாரியத் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்புப் பணிகளை காலதாமதமின்றி நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து நகராட்சிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் சீரான குடிநீர் வழங்கப்படுகிறதா, குடிநீர் விநியோகத்தில் உள்ள சிரமங்கள், தடையற்ற மின்சாரம் வழங்குதல், பழுதுகள் ஏற்பட்டால் உடனடி சீரமைப்பு, பொதுநிதி மூலம் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கூடுதல் குடிநீர் வழங்குதல் மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் சமமாக குடிநீர் சென்றடைவதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நகராட்சிகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை முழுமையாக நிறைவு செய்தல், பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக பராமரித்து செயல்படுத்துதல் தொடர்பாகவும் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மேலாண்மை இயக்குநர் வழங்கினார். குடிநீர் விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது குழாய் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடிநீரின் தரத்தை தொடர்ந்து பரிசோதித்து குளோரின் கலப்பு முறையாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. எதிர்கால மக்கள் தொகை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். இத்தகைய தொடர் ஆய்வுகள் ஊரக மற்றும் நகர்ப்புற குடிநீர் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் கூறினார். முன்னதாக, அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.297.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் திரு. கணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. தண்டபாணி, நிர்வாகப் பொறியாளர் திருமதி கற்பகம், நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் (ஊராட்சி), பேரூராட்சி செயல் அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

8 hrs ago
user_குமார்
குமார்
Kariapatti, Virudhunagar•
8 hrs ago
1ec64576-bbeb-4134-b8c8-156253c0cf49

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., தலைமையில், வாரியத் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்புப் பணிகளை காலதாமதமின்றி நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து நகராட்சிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் சீரான குடிநீர் வழங்கப்படுகிறதா, குடிநீர் விநியோகத்தில் உள்ள சிரமங்கள், தடையற்ற மின்சாரம் வழங்குதல், பழுதுகள் ஏற்பட்டால் உடனடி

75a209ae-8d41-4f2a-8f2b-10f4f38f258e

சீரமைப்பு, பொதுநிதி மூலம் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கூடுதல் குடிநீர் வழங்குதல் மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் சமமாக குடிநீர் சென்றடைவதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நகராட்சிகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை முழுமையாக நிறைவு செய்தல், பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக பராமரித்து செயல்படுத்துதல் தொடர்பாகவும் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அறிவுரைகள் மற்றும்

c1ec727d-a2ec-4fc0-9f44-b5b8df97f6a2

வழிகாட்டுதல்களை மேலாண்மை இயக்குநர் வழங்கினார். குடிநீர் விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது குழாய் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடிநீரின் தரத்தை தொடர்ந்து பரிசோதித்து குளோரின் கலப்பு முறையாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. எதிர்கால மக்கள் தொகை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். இத்தகைய தொடர் ஆய்வுகள் ஊரக மற்றும் நகர்ப்புற குடிநீர் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்றும் அவர்

fd1c6c56-6cbf-4b9a-94e6-ae2c337337b9

கூறினார். முன்னதாக, அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.297.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் திரு. கணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. தண்டபாணி, நிர்வாகப் பொறியாளர் திருமதி கற்பகம், நகராட்சி ஆணையர்கள், பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் (ஊராட்சி), பேரூராட்சி செயல் அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் அவர்களின் பணி நிறைவு நிகழ்வு இன்று (மே.30) மதுரை தெப்பக்குளம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உதவி ஆணையர் செல்வின் அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, அவருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கும் பாராட்டுக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
    1
    மதுரை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் அவர்களின் பணி நிறைவு நிகழ்வு இன்று (மே.30) மதுரை தெப்பக்குளம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உதவி ஆணையர் செல்வின் அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, அவருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கும் பாராட்டுக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    11 hrs ago
  • சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மேலூர் - காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுப் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

மேலூர் - காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுப் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் செங்கரையில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமையான அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில், இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, ஓம் என்ற வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், வள்ளி, தெய்வானை மற்றும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், விபூதி, பேரிச்சம்பழம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. யாகசாலையில் வைக்கப்பட்ட சங்குகளில் உள்ள தீர்த்தங்களைக் கொண்டு 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு வண்ணப் பட்டுத் துணிகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு "அரோகரா அரோகரா" எனக் கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் செங்கரையில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமையான அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில், இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, ஓம் என்ற வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னர், வள்ளி, தெய்வானை மற்றும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், விபூதி, பேரிச்சம்பழம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. யாகசாலையில் வைக்கப்பட்ட சங்குகளில் உள்ள தீர்த்தங்களைக் கொண்டு 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு வண்ணப் பட்டுத் துணிகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன.

பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு "அரோகரா அரோகரா" எனக் கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும், விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மழையாக இது அமைந்திருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும், விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மழையாக இது அமைந்திருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சன்னாசி (34) என்பவர், தனது மனைவி தனலட்சுமி மீது திருமண மோசடி புகார் அளித்துள்ளார். தனலட்சுமி தன்னை ஏமாற்றி, நகைகளை அபகரித்து, தற்போது வேறொருவருடன் நான்காவது திருமணம் செய்துகொண்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சன்னாசி குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டுனராகப் பணிபுரியும் சன்னாசி, 2024 ஆம் ஆண்டு தேனி அம்மாபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமியை திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக வசித்து வந்த சமயத்தில், சன்னாசி பணி நிமித்தமாக வெளியூர் சென்றபோது, தனலட்சுமி வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய சன்னாசி நகைகள் குறித்து கேட்டபோது, அவற்றை அடமானம் வைத்திருப்பதாகவும், மீட்டுத் தருவதாகவும் தனலட்சுமி கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். தனலட்சுமி வீட்டிற்கு வராமலும், நகைகளைத் திருப்பிக் கொடுக்காமலும், தனது மனைவியும் அவரது தாயாரும் தன்னை ஏமாற்றி வந்ததாகவும் சன்னாசி குறிப்பிட்டுள்ளார். நேரில் சென்று கேட்க முயன்றபோது, தனது மனைவி கோயம்புத்தூர் சென்றுவிட்டதாக அவரது தாயார் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் விசாரித்ததில், தனலட்சுமி கோயம்புத்தூரில் வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாக சன்னாசி கூறியுள்ளார். தனக்கு முன்னால் தனலட்சுமி இரண்டு நபர்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்தும் நகைகளைப் பறித்து ஏமாற்றியுள்ளதாகவும், இப்போது தன்னிடமும் நகைகளை அபகரித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவரை நான்காவது திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் சன்னாசி புகார் தெரிவித்துள்ளார். தன்னைப்போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மோசடி செய்த தனது மனைவி மற்றும் அவரது தாயார் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் சன்னாசி கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சன்னாசி (34) என்பவர், தனது மனைவி தனலட்சுமி மீது திருமண மோசடி புகார் அளித்துள்ளார். தனலட்சுமி தன்னை ஏமாற்றி, நகைகளை அபகரித்து, தற்போது வேறொருவருடன் நான்காவது திருமணம் செய்துகொண்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சன்னாசி குற்றம்சாட்டியுள்ளார்.

ஓட்டுனராகப் பணிபுரியும் சன்னாசி, 2024 ஆம் ஆண்டு தேனி அம்மாபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமியை திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக வசித்து வந்த சமயத்தில், சன்னாசி பணி நிமித்தமாக வெளியூர் சென்றபோது, தனலட்சுமி வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய சன்னாசி நகைகள் குறித்து கேட்டபோது, அவற்றை அடமானம் வைத்திருப்பதாகவும், மீட்டுத் தருவதாகவும் தனலட்சுமி கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். தனலட்சுமி வீட்டிற்கு வராமலும், நகைகளைத் திருப்பிக் கொடுக்காமலும், தனது மனைவியும் அவரது தாயாரும் தன்னை ஏமாற்றி வந்ததாகவும் சன்னாசி குறிப்பிட்டுள்ளார். நேரில் சென்று கேட்க முயன்றபோது, தனது மனைவி கோயம்புத்தூர் சென்றுவிட்டதாக அவரது தாயார் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் விசாரித்ததில், தனலட்சுமி கோயம்புத்தூரில் வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாக சன்னாசி கூறியுள்ளார். தனக்கு முன்னால் தனலட்சுமி இரண்டு நபர்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்தும் நகைகளைப் பறித்து ஏமாற்றியுள்ளதாகவும், இப்போது தன்னிடமும் நகைகளை அபகரித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவரை நான்காவது திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் சன்னாசி புகார் தெரிவித்துள்ளார். தன்னைப்போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மோசடி செய்த தனது மனைவி மற்றும் அவரது தாயார் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் சன்னாசி கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருவாடானை ஸ்ரீ ஆதிரெத்னேஸ்வரர் ஆலயத்தின் பத்தாம் திருநாளை முன்னிட்டு பால்குடம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் VK ராஜுவ் MLA சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
    1
    திருவாடானை ஸ்ரீ ஆதிரெத்னேஸ்வரர் ஆலயத்தின் பத்தாம் திருநாளை முன்னிட்டு பால்குடம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் VK ராஜுவ் MLA சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer இராமநாதபுரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நாளில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாகப் பால்குடம் எடுத்து வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த இந்தப் பால்குடத்தில் இருந்து பெறப்பட்ட பால், விசாக கொறடு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சண்முகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட இந்தப் பாலை கோவில் நிர்வாகம் முறையாகச் சேகரிக்கவில்லை. மாறாக, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் என நம்பப்பட்ட இந்த அபிஷேகப் பாலை கோவில் நிர்வாகம் சாக்கடையில் திறந்து விட்டது. இந்த செயலால் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர். விரதம் இருந்து கொண்டு வரப்பட்ட அபிஷேகப் பாலை கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு முறையாக வழங்காமல் சாக்கடையில் கலந்து விட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நாளில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாகப் பால்குடம் எடுத்து வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த இந்தப் பால்குடத்தில் இருந்து பெறப்பட்ட பால், விசாக கொறடு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சண்முகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட இந்தப் பாலை கோவில் நிர்வாகம் முறையாகச் சேகரிக்கவில்லை. மாறாக, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் என நம்பப்பட்ட இந்த அபிஷேகப் பாலை கோவில் நிர்வாகம் சாக்கடையில் திறந்து விட்டது. இந்த செயலால் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர்.

விரதம் இருந்து கொண்டு வரப்பட்ட அபிஷேகப் பாலை கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு முறையாக வழங்காமல் சாக்கடையில் கலந்து விட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    16 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன் விளை கிராமத்தில், காதல் திருமணத்திற்கு உதவியதாகக் கூறி இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. ஸ்ரீதரின் குடும்பத்தினர், மேலலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். ஸ்ரீதரின் மகள் சௌமியா, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சௌமியா மற்றும் தினேஷின் காதலுக்கு பரமசிவன் குடும்பம் உதவியதாகக் கூறி இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன் விளை கிராமத்தில், காதல் திருமணத்திற்கு உதவியதாகக் கூறி இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. ஸ்ரீதரின் குடும்பத்தினர், மேலலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். ஸ்ரீதரின் மகள் சௌமியா, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சௌமியா மற்றும் தினேஷின் காதலுக்கு பரமசிவன் குடும்பம் உதவியதாகக் கூறி இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.