Shuru
Apke Nagar Ki App…
சீமான் வைத்திருக்கும் தங்கம் சீமானிடம் ரூ.19.5 லட்சம் மதிப்பில் 150 கிராம் தங்கம் உள்ளன சீமான் மனைவியிடம் ரூ.2.08 கோடி மதிப்பிலான 1.6 கிலோ தங்கம் உள்ளது என வேட்புமனுவில் தாக்கல்
Natarajan Pitchaimani
சீமான் வைத்திருக்கும் தங்கம் சீமானிடம் ரூ.19.5 லட்சம் மதிப்பில் 150 கிராம் தங்கம் உள்ளன சீமான் மனைவியிடம் ரூ.2.08 கோடி மதிப்பிலான 1.6 கிலோ தங்கம் உள்ளது என வேட்புமனுவில் தாக்கல்
More news from Tamil Nadu and nearby areas
- மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 30.03.2026 திங்கட்கிழமை சந்திர சோமவார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1
- ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆண்டிபட்டியில் மலரால் அலங்கரிக்கப்பட்ட முருகன் வேலை கையில் ஏந்தி, தப்பாட்டம் முழங்க ஊர்வலமாக வந்து முதல் ஆளாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாநிலம் முழுவதும் துவங்கியது அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன்.ஆண்டிபட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாவிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.முன்னதாக ஆண்டிபட்டி - பாலக்கோம்பை பிரிவில் இருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன் மலரால் அலங்கரிக்கப்பட்ட முருகன் வேலுடன் தப்பாட்டம் முழங்க தனது கட்சியினருடன் ஊர்வலமாக வந்த நிலையில் தேனி சாலையில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் முன்பாகவே நிறுத்தப்பட்டது.பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி, அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று தனது வேட்பு மனுவை கோமதி அன்பரசன் தாக்கல் செய்தார்.தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான பெண்மணி கோமதி.மென்பொருள் பட்டதாரியான இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.இவரது கணவர் அன்பரசன், நாம் தமிழர் கட்சியின் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1
- *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,1
- இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விராலிமலை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகப்பிரியா இன்று மானாமதுரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்கு முன்பு, மானாமதுரையில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேளதாளங்களுடன், ஏர் கலப்பையை சுமந்து மற்றும் ஜல்லிக்கட்டு காளையுடன் சுமார் 5 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.1
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி(190) வேட்புமனு தாக்கல் செய்ய முதல்நாளில். அடுத்த பணியில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைத்து பாதுகாப்பு கருடன் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்1
- கம்பம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆ.அன்புச்செல்வி தனது வேட்பு மனுவை உத்தமபாளையம் கோட்டாட்சியர் சையது முகமது இப்ராகிமிடம் இன்று தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் சார்பாக கம்பம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புச்செல்வி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக வருகை தந்தார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து சிலையின் முன்பு வீரவணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆதரவாளர்களோடு ஊர்வலமாக வருகை தந்தவர் கோட்டாட்சியர் செய்யது முகமது இப்ராஹிமிடம் தேர்தல் உறுதி மொழியை எடுத்துக்கொண்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.1
- மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தில் உள்ள மலைச்சாமி கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் இணைந்து விரதமிருந்து பங்குனி உத்திர திருவிழா கொண்டாட உள்ள நிலையில் ஒரு தரப்பினர் திருவிழா நடத்தக்கூடாது என்று தகராறு செய்து தடை செய்வதால் இதுகுறித்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒருதரப்பினருக்கு ஆதரவாக போலீசார் ஈடுபட்டு திருவிழா நடைபெறாமல் தடுத்து வருவதால் கிராம மக்கள் தங்களுடைய வாக்காளர்கள் அடையாள அட்டையை திருப்பி ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (மார்ச்.30) காலை சுமார் நூறு பெண்கள் உள்பட முந்நூறு பேர் வந்திருந்தனர். அங்கிருந்த போலீசார் கிராம மக்களின் முக்கிய நபர்கள் ஐந்து பேரை மட்டும் அழைத்து கொண்டு உயர் அதிகாரியை இது குறித்து சந்திக்க அழைத்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.1