வ.உ.சி. இலக்கிய மாமன்றத்தின் சார்பில் நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா! திருநெல்வேலி வண்ணார்பேட்டை அருணா கார்டியாக் கேர் கலையரங்கில் வ.உ.சி. இலக்கிய மாமன்றத்தின் சார்பில் வ.உ.சி.பிறந்தநாள் விழா, தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்விற்கு வ.உ.சி. இலக்கிய மாமன்றத் தலைவர் முனைவர் சொர்ணலதா அருணாசலம் தலைமை தாங்கினார். வ.உ.சி. இலக்கிய மாமன்ற துணைத் தலைவர்கள் ஏ.ஆர்.லட்சுமணன், நற்றமிழ் நாவலர் மு.அ.நசீர், கவிஞர் சு.முத்துசாமிஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடக்கமாக அருணா கார்டியாக் கேர் பொது மேலாளர் மனோகர்ராம்அனைவரையும் வரவேற்றார். அருணா கார்டியாக் கேர் நிர்வாக இயக்குனர் இருதயநோய் நிபுணர் டாக்டர் இ.அருணாச்சலம் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்டத்தலைவர் இரா.சீதாராமன் நம் தாமிரபரணி இயக்குனர் சாமிநல்லபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் ஆர்.ஜெபசிந்தி, காந்தி ராஜா, முருகு தமிழ்ச்செல்வி,எபினேசர் அகஸ்டா மற்றும் ஆசிரியச் செம்மல் விருது பெற்ற கீதா கிருஷ்ணமூர்த்தி, வித்யாலயா பள்ளி முதல்வர் கௌசல்யா, ஆன்மிகச் செம்மல் விருது பெற்ற கே.டி..சி. நகர் செல்வ விநாயகர் கோயில் நிர்வாகி சிவன் பிள்ளை ஆகியோரைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து சிறைத்துறை கண்காணிப்பாளர் கோ.பா.செந்தாமரைக்கண்ணன் சிறப்புரையாற்றினார். சிறப்பு நிகழ்வாக 'வ.உ.சி யின் பெரும் புகழுக்கு காரணம் அவரதுதமிழ்வேட்கையா?சுதந்திரவேட்கையா?' எனும் தலைப்பில் வ.உ.சி. இலக்கிய மாமன்றத்தின் செயலாளர் முனைவர் கோ.கணபதி சுப்ரமணியன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழ் வேட்கையே என புலவர் இராம.வேங்கடாசலம் சொல்லரசி கோமதி கிருஷ்ணமூர்த்தி முனைவர் திருக்குறள் இரா.முருகன் ஆகியோரும், சுதந்திர வேட்கையே என கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, முன்னாள் ஊரகவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் தேவிகா, சிங்கப்பூர் தமிழ்மாமணி திலகராணி ஆகியோர் வாதிட்டனர். நடுவர் கவிஞர் கோ.கணபதி சுப்ரமணியன் சிதம்பரனாரின் பெரும்புகழுக்கு காரணம் சுதந்திர வேட்கையே என்று தீர்ப்பு கூறினார். வ உ சி இலக்கிய மன்ற செயற்குழு உறுப்பினர் கவிஞர் புன்னைச்செழியன் நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சியை கவிஞர் செ.ச.பிரபு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கவிஞர் சுப்பையா, கவிஞர்சக்திவேலாயுதம்,கவிஞர்மூர்த்தி, சுத்தமல்லி சொக்கலிங்கம், நூலகர் அகிலன், வழக்கறிஞர்மணிமாலா,புகைபடக்கலைஞர் துரைராஜ் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

- திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கோலாகலம் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய நாளான இன்று கூட்டுத் திருப்பலி நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் மற்றும் அந்தோணியாரின் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்1
- ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு1
- தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.2
- எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.1
- தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.2
- நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் குடிநீர் திட்டத்துக்காக ரூ.1 1/4 கோடி ஒதுக்கீடு தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் தீர்மானம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், மகேஷ், அருண் தவசு பாண்டியன், தனி தங்கம், ஜான்ஸ்ரூபா, லிங்க சாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த நிதியாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி உள்ளது. இதனை குடிநீர் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த நிதி ஆண்டுகளில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா நடக்கும் போது கண்டிப்பாக கல்வெட்டு வைக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலர்கள் பணி பாராட்டுக்கு உரியது. இவ்வாறு அவர் பேசினார்.1
- சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள். சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.1