மானாமதுரையில் 24 மணி நேரத்தைக் கடந்த சாலை மறியல்: தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பிப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. நள்ளிரவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிகாலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
மானாமதுரையில் 24 மணி நேரத்தைக் கடந்த சாலை மறியல்: தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பிப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. நள்ளிரவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிகாலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
- மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், இந்தியா–யுஏஇ இடையிலான பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு இயக்கப்படும் துபாய் – மதுரை மற்றும் அபுதாபி – மதுரை விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதுரை- துபாய் செல்ல ஸ்பைஜெட் விமானம் நாளை (மார்ச் .11) முதல் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எட்டு நாட்களுக்குப் பிறகு துபாயில் இருந்து மதுரைக்கு விமான சேவை இயங்க உள்ளது.1
- திருச்சி: திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநில உரிமைகளைத் தடுக்கும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குத் தமிழகத்தில் எப்போதும் 'நோ என்ட்ரி' தான் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ் மண்ணைக் காக்கவும் ஏழாவது முறையாக திமுகவே மீண்டும் வெல்லும் என அவர் உரையாற்றினார். (மாநாட்டின் பிரத்தியோக காட்சிகள்)1
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by மா.சுடலைமணி1
- மதுரை : : சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் பட்டியல் சமூக மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மானாமதுரை ஆகாஷ் லாக்அப் மரணத்திற்கு நீதி கேட்டும் இன்று மானாமதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐஎம் மற்றும் விசிகவினர் திரளாகப் பங்கேற்று முழக்கமிட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன், விசிக மாவட்டச் செயலாளர் பாலையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் நிர்வாகிகள் கருப்புச்சாமி, முத்துராமலிங்கபூபதி, வீரையா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கக் கோரி வலியுறுத்தினர்.2
- மக்காச்சோளம் அதன் குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆக அறிவிக்க வேண்டும் விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 15,000 எழுப்பீடு வழங்க வேண்டும் உழவு மற்றும் வண்டி காளை வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் கடம்பா வடிகால் ஆக்கிரமிப்பை முழுவதும் அகத்திட வேண்டும் வாய்ப்பாட்டில் மாட்டுவண்டியில் வீட்டு உபயோகத்திற்கு மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியை வறட்சிதொகுதியாக அறிவிக்க வேண்டும்இவ்வாறு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் ராஜேஷ் உழவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு2
- பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: நிறுவனத்தின் CEO ஜெகதீஸ்வரன், அவரது மனைவி பவித்ரா மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், தர்மலிங்கம், சுப்புலட்சுமி, சுதா ராணி ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். மோசடியில் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை முடக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். ஏமாற்றப்பட்ட விவசாயிகளின் முதலீட்டுத் தொகையை முழுமையாக மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி ஈட்டிய பணத்தை முதலீடு செய்துவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால், அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1