தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக தேனி மாவட்டத்தில் 48 பறக்கும் படை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டது இந்த நிலையில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 12 என்ற அடிப்படையில் 48 "தேர்தல் பறக்கும் படை வாகனம்" தொகுதிவாரியாக புறப்பட்டது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், பறக்கும் படை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த வாகனங்கள் அந்தந்த தொகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக தேனி மாவட்டத்தில் 48 பறக்கும் படை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டது இந்த நிலையில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 12 என்ற அடிப்படையில் 48 "தேர்தல் பறக்கும் படை வாகனம்" தொகுதிவாரியாக புறப்பட்டது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், பறக்கும் படை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த வாகனங்கள் அந்தந்த தொகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவிடுகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூர் டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் வந்த பறக்கும் படை அலுவலர் ராஜாராம் தலைமையில் இரண்டு உதவி அலுவலர்கள் ஒரு வீடியோ பதிவாளர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அணியினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேனியில் இருந்து மதுரை செல்லும் இருசக்கர வாகனம் கார் சரக்கு வாகனம் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி காருக்குள்ளாகவும் காரின் பின்புற டிக்கியிலும் காரில் உள்ளவர்களின் பைகளிலும் தேர்தல் விதிமுறைப்படி ஐம்பதாயிரம் மேற்பட்ட ரொக்க பணம் மேலும் 10,000 மேற்பட்ட பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் . இதேபோன்று ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளின் மூன்று அணிகளாக பறக்கும் படையினர் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக தேர்தல் விதிகள் அமலுக்கு வந்து இன்று பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல் விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன1
- திண்டுக்கல் ரத்ததான குழுவினர் மாவட்டம் முழுவதும் இன்றி பல்வேறு மாவட்டங்களிலும் ரத்த தானம், உடல் தானம், கண் தானம் போன்ற விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர் அவர்களின் இன்றைய விழிப்புணர்வு வீடியோ.1
- உங்கள் கருத்துசொல்லவும் #publicintrest #publicresponse #familyvlog #legal_illegal #maatramworld1
- திண்டுக்கல் பாரதிபுரம், 4 ரோடு சந்திப்பில் திண்டுக்கல் மாவட்ட சந்தானம் ரசிகர் மன்றம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஹேமநாதன், துணைத்தலைவர் குழந்தைராஜ், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- Post by Natarajan Pitchaimani1
- மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.3
- *தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி* *5 வாக்காளர்கள் மட்டும் உள்ள வெள்ளிமலை வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என பேட்டி* தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 40 பறக்கும் படை வாகனங்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது பணம் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் Cvigil என்கிற இணையதளம் மூலம் போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படும் புகார் குறித்து 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் புகார் கூறும் நபர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் 40 லட்சம் வரை செலவு செய்யப்பட வேண்டும் அது குறித்து தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்துவார்கள் தமிழக - கேரளா எல்லையான தேனி இடுக்கி மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு குறித்து இரு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது தேனி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேல் 6838 வாக்காளர்களும் நூறு வயதுக்கு மேல் 130 வாக்காளர்களும் உள்ளனர் அவர்களுக்கு வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதி ஏற்படுத்தி தரப்படும் வருஷநாடு வெள்ளிமலை பகுதியில் வசிக்கும் மக்கள் வெளி மாநிலங்களில் வாக்குரிமை வைத்துள்ளார்கள் அவர்களில் 5 பேர் மட்டும் வந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குரிமை உள்ளது அவர்கள் வாக்கு செலுத்துவதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தில் 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துகின்றனர் மேலும் மத்திய துணை ராணுவத்தினரும் ஈடுபடுகிறார்கள் பேட்டி - ரஞ்சித் சிங் (தேனி மாவட்ட ஆட்சியர்)1