logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருநெல்வேலி பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கிராசிங்கில் ரயில்வே மேம்பாலப் பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்கும் என்று நெல்லை எம்பி தெரிவித்துள்ளார். இங்கு 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒய் (Y) வடிவ மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான டிபிஆர் (DPR) அனுமதி தற்போது கிடைத்துள்ளது. மேலும், இந்த மேம்பாலம் அமைக்கும் பணிக்காக வரும் பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உறுதி அளித்துள்ளதாகவும், இப்பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

5 hrs ago
user_நெல்லை வீரபாண்டியன்
நெல்லை வீரபாண்டியன்
Photographer பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு•
5 hrs ago
34716074-ef4c-4d04-897d-ea9d09b6c0df

திருநெல்வேலி பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கிராசிங்கில் ரயில்வே மேம்பாலப் பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்கும் என்று நெல்லை எம்பி தெரிவித்துள்ளார். இங்கு 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒய் (Y) வடிவ மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான டிபிஆர் (DPR) அனுமதி தற்போது கிடைத்துள்ளது. மேலும், இந்த மேம்பாலம் அமைக்கும் பணிக்காக வரும் பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உறுதி அளித்துள்ளதாகவும், இப்பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கட்டாலங்குளத்தில், வீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அவரது நேரடி வாரிசுதாரர்களான மீனாட்சி தேவி, ராஜேஸ்வரி, ராம்பிசாத், ராம் விஷ்ணுபெருமாள், வாணி, அழகு சுப்பையா, புவனேஸ்வரி மற்றும் வெங்கடேஷ்வயன் ஆகியோர் கலந்துகொண்டு வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த பிறந்த நாள் விழாவையொட்டி கட்டாலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    2
    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கட்டாலங்குளத்தில், வீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அவரது நேரடி வாரிசுதாரர்களான மீனாட்சி தேவி, ராஜேஸ்வரி, ராம்பிசாத், ராம் விஷ்ணுபெருமாள், வாணி, அழகு சுப்பையா, புவனேஸ்வரி மற்றும் வெங்கடேஷ்வயன் ஆகியோர் கலந்துகொண்டு வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த பிறந்த நாள் விழாவையொட்டி கட்டாலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவின் மிகப்பெரிய ஊரான புதியம்புத்தூருக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வந்து செல்வது வழக்கம். தற்போது புதியம்புத்தூரில் ஆனித் திருவிழா நடைபெற்று வருவதை ஒட்டி, வழக்கத்தை விட மிக அதிக அளவில் பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர். இதனால், இன்று இரவு 7 மணியளவில் புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், அப்பகுதியைக் கடக்க முயன்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி, பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவின் மிகப்பெரிய ஊரான புதியம்புத்தூருக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வந்து செல்வது வழக்கம். தற்போது புதியம்புத்தூரில் ஆனித் திருவிழா நடைபெற்று வருவதை ஒட்டி, வழக்கத்தை விட மிக அதிக அளவில் பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர்.

இதனால், இன்று இரவு 7 மணியளவில் புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், அப்பகுதியைக் கடக்க முயன்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி, பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷுமகாஜன் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், ஜல்ஜீவன் மிஷன், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், சுயஉதவிக் குழுக்களுக்கான நிதி உதவிகள், சீர்மிகு நகரத்திட்டம் (ஸ்மார்ட் சிட்டி), அம்ரூத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள், மின்விநியோகத் திட்டங்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் மற்றும் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன. மாவட்டத்தில் தற்போது நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப்பணிகளை அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கனிமொழி எம்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், கருணாநிதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷுமகாஜன் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டப்பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், ஜல்ஜீவன் மிஷன், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், சுயஉதவிக் குழுக்களுக்கான நிதி உதவிகள், சீர்மிகு நகரத்திட்டம் (ஸ்மார்ட் சிட்டி), அம்ரூத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள், மின்விநியோகத் திட்டங்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் மற்றும் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன.

மாவட்டத்தில் தற்போது நிலுவையில் உள்ள பல்வேறு திட்டப்பணிகளை அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கனிமொழி எம்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், கருணாநிதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    5 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூரில் பள்ளி மாணவியிடம் தவறான சைகை செய்து, அதனைத் தட்டிக்கேட்ட அவரது தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டைச் சேர்ந்த குப்பன் மகன் கதிரவன் (33) என்பவர், குரும்பூரில் உள்ள பேக்கரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று குரும்பூர் பஜார் வீதியில் சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரிடம் கதிரவன் அநாகரிகமான முறையில் தவறான சைகை காட்டியுள்ளார். இதனை அறிந்த மாணவியின் தாயார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கதிரவனின் செயலைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், பொது இடத்தில் வைத்து அந்த மாணவியையும் அவரது தாயாரையும் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குரும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கதிரவன் செய்த குற்றச்செயல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கதிரவன், நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூரில் பள்ளி மாணவியிடம் தவறான சைகை செய்து, அதனைத் தட்டிக்கேட்ட அவரது தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டைச் சேர்ந்த குப்பன் மகன் கதிரவன் (33) என்பவர், குரும்பூரில் உள்ள பேக்கரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று குரும்பூர் பஜார் வீதியில் சென்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரிடம் கதிரவன் அநாகரிகமான முறையில் தவறான சைகை காட்டியுள்ளார். இதனை அறிந்த மாணவியின் தாயார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கதிரவனின் செயலைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், பொது இடத்தில் வைத்து அந்த மாணவியையும் அவரது தாயாரையும் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து குரும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கதிரவன் செய்த குற்றச்செயல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கதிரவன், நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    user_ThigazhYaazhan
    ThigazhYaazhan
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய நலத்திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடும்போது, தான் வெறும் சினிமாக்களில் நடிக்கும் 'ரீல் தாய்மாமன்' மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காகக் கடமையாற்றும் 'ரியல் தாய்மாமன்' என்பதை நிரூபிப்பேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த விஷயங்களில் நாடகம் ஆடாமல், தற்போதைய அரசு பெண்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் வலுவான அரணாகத் திகழும் என்றும் பொதுமேடையில் உறுதியளித்தார். முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    1
    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய நலத்திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிடும்போது, தான் வெறும் சினிமாக்களில் நடிக்கும் 'ரீல் தாய்மாமன்' மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்காகக் கடமையாற்றும் 'ரியல் தாய்மாமன்' என்பதை நிரூபிப்பேன் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த விஷயங்களில் நாடகம் ஆடாமல், தற்போதைய அரசு பெண்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் வலுவான அரணாகத் திகழும் என்றும் பொதுமேடையில் உறுதியளித்தார். முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலையில் தேன் சிட்டு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்துகொண்டன. பூஞ்சிட்டு பிரிவின் முதல் சுற்றில் கூடலூர் மாட்டு வண்டி முதலிடத்தையும், காங்கேயன் குளம் மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், சந்திரகிரி மணி கட்டி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இதன் இரண்டாவது சுற்றில் புதியம்புத்தூர் ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி முதலிடத்தையும், பள்ளிக்கூடத்தான்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தேன்சிட்டு பிரிவில் தேனி மாவட்ட மாட்டு வண்டி முதலிடத்தையும், புதியம்புத்தூர் லிங்க சுடலை ரித்திகா மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், கூடலூர் வன ரோஜா மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி திருக்கோவில் ஆனித் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலையில் தேன் சிட்டு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாட்டு வண்டிகள் வந்து கலந்துகொண்டன.

பூஞ்சிட்டு பிரிவின் முதல் சுற்றில் கூடலூர் மாட்டு வண்டி முதலிடத்தையும், காங்கேயன் குளம் மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், சந்திரகிரி மணி கட்டி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இதன் இரண்டாவது சுற்றில் புதியம்புத்தூர் ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி முதலிடத்தையும், பள்ளிக்கூடத்தான்பட்டி மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், ஐயங்கார் பேக்கரி மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தேன்சிட்டு பிரிவில் தேனி மாவட்ட மாட்டு வண்டி முதலிடத்தையும், புதியம்புத்தூர் லிங்க சுடலை ரித்திகா மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும், கூடலூர் வன ரோஜா மாட்டு வண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில், மனைவியைப் பிரிந்த துயரத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மின்சாரம் பாய்ச்சி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மனமுடைந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மிகுந்த வேதனையின் காரணமாக, தந்தை தனது குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்து மின்சாரத்தை பாய்ச்சி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    1
    தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில், மனைவியைப் பிரிந்த துயரத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மின்சாரம் பாய்ச்சி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மனமுடைந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மிகுந்த வேதனையின் காரணமாக, தந்தை தனது குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்து மின்சாரத்தை பாய்ச்சி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.