*திமுக வேட்பாளராக சொந்த ஊருக்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்* *திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் திமுக நிர்வாகிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பட்டாசுகளை வெடித்தும், பெண்கள் ஆலத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்* திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது தொடர்ந்து திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு தேனியில் திமுக நிர்வாக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் தேனி பங்களாமேடு பகுதியில் கூடியிருந்த திமுக நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் பின்னர் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெண்கள் ஆலத்தி எடுத்தும், மலர் மாலைகள் அணிவித்தும் மற்றும் பூங்கொத்து, சால்வைகள் கொடுத்து வரவேற்றனர் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், தேனி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெண்கள் என சுமார் 200கும் மேற்பட்ட பூக்களை தூவி வரவேற்றனர்
*திமுக வேட்பாளராக சொந்த ஊருக்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்* *திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் திமுக நிர்வாகிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பட்டாசுகளை வெடித்தும், பெண்கள் ஆலத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்* திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது தொடர்ந்து திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஓ பன்னீர்செல்வத்திற்கு தேனியில் திமுக நிர்வாக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் தேனி பங்களாமேடு பகுதியில் கூடியிருந்த திமுக நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் பின்னர் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெண்கள் ஆலத்தி எடுத்தும், மலர் மாலைகள் அணிவித்தும் மற்றும் பூங்கொத்து, சால்வைகள் கொடுத்து வரவேற்றனர் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், தேனி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெண்கள் என சுமார் 200கும் மேற்பட்ட பூக்களை தூவி வரவேற்றனர்
- இன்று வாடிப்பட்டியில் அ.இ.அ.தி.மு.க.நகர் சார்பாக அருணா காம்பளக்சில் காலை பத்து மணிக்கு சட்டமன்ற வேட்பாளர் மாணிக்கம் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பதினெட்டு வார்டு செயலாளர்களும் மற்றும். நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 30.03.2026 திங்கட்கிழமை சந்திர சோமவார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி கயல்விழி, தாயார் அண்ணமாளுடன் வந்து சார் ஆட்சியர் ஆயூஸ் வெங்கட் வர்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, வேலையில்லாதவனுக்கு நான்காயிரம் கொடுப்பவன் நல்ல தலைவன் இல்லை என்றும், வேலை கொடுப்பவனே தலைவன். அவன்தான் சிறந்த ஆட்சியாளர் என்றவர், டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து விட்டு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இப்படி சாத்தியம். மதுக்கடை வருமானத்தை வைத்து கொடுமையான ஆட்சி நடைபெறுவதை எப்படி சகித்து கொண்டு இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே 10.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் மேலும் இலவச திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மேலும் பல லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை ஏற்படும் என குற்றம் சாட்டியவர், ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்கவிட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சி இல்லை. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது தான் நல்லாட்சி என கூறியவர், ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்த போது இலவசங்களை மக்கள் விரும்பவில்லை என்று கூறிவிட்டு இப்போது திருப்பி இலவச திட்டங்களை அறிவிப்பதாக என குற்றம் சாட்டினார். ஸ்டாலின் 23 கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பது பயத்தினால் அவர்களிடம் நேர்மை துளி அளவும் இல்லை. ஐயா ராமதாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். சாட்டை துரைமுருகன் ஐய்யாவை விமர்சனம் செய்ததை நான் கண்டித்தேன் என்றவர், நாடாளுமன்ற உறுப்பிரான திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் நிற்பது ஏற்புடையது அல்ல என்றார். தொடர்ந்து ஓட்டுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டியவர், திட்டத்தால் எந்த ஒரு பலனும் இல்லை என்றவர், தனது கிராமத்தில் உள்ள அனைவரும் 100 நாள் திட்டத்திற்கு சென்று விட்டதால் தனியாக இருப்பதால் எனது தாயும் 100 நாள் வேலைக்கு சென்றதாகவும், அங்கு சென்று வேலை செய்யாமல் அமர்ந்து இருந்ததாகவும் கூறினார், இத்திட்டம் மூலம் நட்டு வைத்த மரங்கள் எத்தனை, சீரமைத்த சாலைகள் எத்தனை, தூர்வாரிய குளங்கள் எத்தனை என கேள்வி சீமான் எழுப்பினார்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகப்பிரியா இன்று மானாமதுரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்கு முன்பு, மானாமதுரையில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேளதாளங்களுடன், ஏர் கலப்பையை சுமந்து மற்றும் ஜல்லிக்கட்டு காளையுடன் சுமார் 5 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.1
- பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் ஆறுமுகபாண்டி என்ற ராக்கெட்ராஜா அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். உடன் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார், டாக்டர் ராமசாமி,தொழிலதிபர் பாலாஜி, வழக்கறிஞர் பூர்ணிமா ஆகியோர் உடனிருந்தனர் .1
- கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்ககு வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆஷா தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.1
- கம்பம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆ.அன்புச்செல்வி தனது வேட்பு மனுவை உத்தமபாளையம் கோட்டாட்சியர் சையது முகமது இப்ராகிமிடம் இன்று தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் சார்பாக கம்பம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புச்செல்வி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக வருகை தந்தார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து சிலையின் முன்பு வீரவணக்கம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆதரவாளர்களோடு ஊர்வலமாக வருகை தந்தவர் கோட்டாட்சியர் செய்யது முகமது இப்ராஹிமிடம் தேர்தல் உறுதி மொழியை எடுத்துக்கொண்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.1
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி(190) வேட்புமனு தாக்கல் செய்ய முதல்நாளில். அடுத்த பணியில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைத்து பாதுகாப்பு கருடன் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்1
- மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தில் உள்ள மலைச்சாமி கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் இணைந்து விரதமிருந்து பங்குனி உத்திர திருவிழா கொண்டாட உள்ள நிலையில் ஒரு தரப்பினர் திருவிழா நடத்தக்கூடாது என்று தகராறு செய்து தடை செய்வதால் இதுகுறித்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒருதரப்பினருக்கு ஆதரவாக போலீசார் ஈடுபட்டு திருவிழா நடைபெறாமல் தடுத்து வருவதால் கிராம மக்கள் தங்களுடைய வாக்காளர்கள் அடையாள அட்டையை திருப்பி ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (மார்ச்.30) காலை சுமார் நூறு பெண்கள் உள்பட முந்நூறு பேர் வந்திருந்தனர். அங்கிருந்த போலீசார் கிராம மக்களின் முக்கிய நபர்கள் ஐந்து பேரை மட்டும் அழைத்து கொண்டு உயர் அதிகாரியை இது குறித்து சந்திக்க அழைத்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.1